Sunday 2 March 2014

வசனங்களால் பிரபலமான சிவாஜி, பேசாமலே ஜெயித்த காலங்கள்..!



பாகவதரின் ‘அம்பிகாபதி’, 1937ல் வெளியாகி சக்கைப் போடு போட்டது. அந்தப் படம் மீண்டும் 1957ல் ரீமேக் ஆனது. பாகவதர் வேடத்தில் நடித்தது சிவாஜி. அவருக்கு பானுமதி ஜோடி. கம்பராக எம்.கே.ராதா நடித்திருந்தார். என்.எஸ்.கே., மதுரம், நாகைய்யா, ராஜ சுலோச்சனா நடித்தனர். பழைய படத்தில் பாடல்கள் மிகப் பிரபலம். அதனால் இப்படத்திலும் பாடல்களுக்கு தனி முக்கியத்துவம் தரப்பட்டது. அதே நேரம், பழைய பாடல்கள் எதையும் இதில் பயன்படுத்தவில்லை.

எல்லாமே புது மெட்டுகள்தான். ஜி.ராமநாதன் இசையமைத்திருந்தார். எதிர்பார்த்தபடி பாடல்கள் சூப்பராக வந்தது. எல்லா பாடல்களுமே ஹிட். பாடல்களை கண்ணதாசன், கிருஷ்ணமூர்த்தி, கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், தஞ்சை ராமைய்ய தாஸ், ஆதிமூலம், நாடக நடிகர் கே.டி.சந்தானம் என பலர் எழுதினர். படத்தில் பாடல் காட்சிகள் மட்டும் கலரில் வெளியானது குறிப்ப¤டத்தக்கது. ஏ.எல்.சீனிவாசன், அருணாச்சலம் தயாரித்தனர். வசனம் மற்றும் இயக்கம் பா.ந¦லகண்டன். படம் சரியாக போகவில்லை.

பழைய ‘அலாவுதீனும் அற்புத வ¤ளக்கும்’ படமும் ரீமேக் ஆனது, தமிழ், தெலுங்கு மொழிகளில். இது கலர் படம். நாகேஸ்வரராவ், அஞ்சலிதேவி, ராஜசுலோச்சனா, ஜி.சகுந்தலா, பாலைய்யா, ரங்காராவ், தங்கவேலு நடித்தனர். ராஜேஸ்வரராவ் இசையமைத்தார். எம்.எல்.பதி தயாரிப்பில் ரகுநாத் இயக்கியிருந்தார். சுமாராக போனது.

நாகேஸ்வரராவ், சாவித்திரி சேர்ந்து தமிழ், தெலுங்கில் நடித்த படம் ‘எங்க வீட்டு மகாலட்சுமி’. மதுசூதனராவ் தயாரித்தார். ஏ.சுப்பாராவ் இயக்கம். சரத் சந்திர சட்டர்ஜியின் நாவலை தழுவி உருவான படம். ஸ்ரீதர், வசனம். இசை எம்.வேணு. கண்ணாம்பா, சுந்தரிபாய், ராஜசுலோச்சனா, இ.வி.சரோஜா, அங்கமுத்து, ரங்காராவ், நம்பியார், சந்திரபாபு, தங்கவேலு நடித்தனர். படம் நன்றாக ஓடியது.

ஜூபிடரின் தயாரிப்பு ‘கற்புக்கரசி’. ஜெமினி, சாவித்திரி, நம்பியார், தங்கவேலு, ஆர்.பாலசுப்ரமணியம், ஜி.வரலட்சுமி, இ.வி.சரோஜா நடித்தனர்.
ஏ.எஸ்.ஏ.சாமி இயக்கினார். கதை, சிவசுந்தரம். வசனம் ஏ.எஸ்.ஏ.சாமியுடன் அரு.ராமநாதன் எழுதியிருந்தார்.

இசை, ஜி.ராமநாதன். படம் ஹிட். உமா பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியானது ‘சக்ரவர்த்தி திருமகன்’. எம்.ஜி.ஆர்., அஞ்சலி தேவி ஜோடி. வீரப்பா, என்.எஸ்.கே., மதுரம், எஸ்.வரலட்சுமி, லட்சுமிபிரபா, டி.பி.முத்துலட்சுமி நடித்தனர். ஆர்.எம்.ராமநாதன் தயாரித்தார். பா.நீலகண்டன் டைரக்ஷன். நாடக நடிகரான பி.ஏ.குமார், கதை. வசனம், இளங்கோவன். இசை, ஜி.ராமநாதன். எம்.ஜி.ஆர்., என்.எஸ்.கே.யின் கேள்வி, பதில் போன்ற போட்டி பாடல் ஒன்று இருக்கும். அது பிரபலமானது. கிளவுன் சுந்தரம் என்பவர் அப்பாடலை எழுதியிருந்தார். வெற்றிப் படம்.

ஒய்ஜிபியின் நாடகமான ‘சமய சஞ்சீவி’, படமானது. முழு நீள காமெடி கதை. கதை, வசனம் எழுதி நாடகத்தில் நடித்த பட்டு, இதில் ஹீரோ. நாடகங்களில் அவர் பிரபலம் என்பதால் இதில் அவரையே நடிக்க வைத்தனர். அவருக்கு ஜோடி ஜெயலலிதாவின் சித்தி வித்யாவதி. ஜெயலலிதாவின் அம்மா சந்தியாவும் நடித்திருந்தார்.

டி.ஆர்.ராமச்சந்திரன், நம்பியார், சாரங்கபாணி, சிவதாணு, எம்.என்.ராஜம் நடித்தனர். வி.எஸ்.ராகவன் இயக்கினார். இசை, ஜி.ராமநாதன். பட்டுவை ஹீரோவாக மக்கள் ஏற்கவில்லை. படமும் ஓடவில்லை.

பி.ஆர்.பந்துலுவின் படம் ‘தங்கமலை ரகசியம்’. தமிழ், கன்னட மொழிகளில் உருவானது. தயாரித்து பந்துலு இயக்கினார். கதையை சின்ன அண்ணாமலை, மா.லட்சுமணன் எழுதினர். திரைக்கதை சித்ரா கிருஷ்ணசாமி. இசை, பி.ஜி.லிங்கப்பா. ஜி.கே.ராமு ஒளிப்பதிவு செய்திருந்தார். படத்தில் இடம்பெறும் சில கலர் காட்ச¤களுக்கு மட்டும் சுப்பாராவ் ஒளிப்பதிவு செய்தார்.

சிவாஜி, டி.பி.ராஜகுமாரி, கண்ணாம்பா, நம்பியார், வீரப்பா, டி.ஆர்.ராமச்சந்திரன், சாரங்கபாணி நடித்தனர். சரோஜா தேவி ஒரு பாடலுக்கு ஆடியிருந்தது குறிப்பிடத்தக்கது. வசனங்களால் பிரபலமான சிவாஜி, இந்த படத்தில் வசனமே பேச வில¢லை. காரணம், அவருக்கு வாய் பேசாதவர் வேடம். காட்டுவாசியாக காமெடி கலந்த வேடத்தில் நடித்து அசத்தினார். 100 நாட்களை கொண்டாடியது படம்.

தேவரின் குறுகிய கால தயாரிப்பு ‘நீலமலை திருடன்’. நீண்ட இடைவெளிக்குப் பின் ரஞ்சன் ஹீரோவாக நடித்தார். அவருக்கு அஞ்சலி தேவி ஜோடி. எம்.கே.ராதா, பாலைய்யா, தங்கவேலு, கண்ணாம்பா, இ.வி.சரோஜா நடித்தனர். எம்.ஏ.திருமுகம் இயக்கம். கே.வி.மகாதேவன் இசை. மார்க்கெட் இல்லாத போதும் ரஞ்சனை ஹீரோவாக மக்கள் ஏற்றனர்.

காரணம், படத்தின் கதை பிடித்துப்போனதுதான். படம் வெற்றி கண்டது. ஒளிப்பதிவாளர் பி.எஸ்.ரங்கா தயாரித்து இயக்கியிருந்த படம் ‘பக்த மார்க்கண்டேயா’. தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவானது. புராண கதை படம¢. நீண்ட இடைவெளிக்குப் பின் புஷ்பவல்லி நடித்திருந்தார். ஹீரோயின் கிடையாது. முக்கிய வேடம்தான். நாகைய்யா, தங்கவேலுவும் இருந்தனர். சிறு பையனை சுற்றித்தான் கதை நகரும். அந்த வேடத்தில் ஜெமினி, புஷ்பவல்லி தம்பதியின் மகன் பாப்ஜ¤ நடித்திருந்தார். கதை மற்றும் வசனம் துரையூர் மூர்த்தி.

0 comments:

Post a Comment