Sunday 2 March 2014

மார்ச் 3 முதல் பேஸ்புக் மசெஞ்சர் செயலிழப்பு..!



கணனிகளில் விண்டோஸ் மூலமாக பேஸ்புக் பயன்படுத்தும் போது மசெஞ்சர் மூலம் தகவல்களைப் பறிமாறிக்கொள்ளும் வசதி, மார்ச் 3ம் திகதி முதல் செயலிழந்துவிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


விண்டோஸ் போன் 8 கருவிகளில் பேஸ்புக் மசெஞ்சர் அறிமுகப்படுத்தப்படும் என்று மைக்ரோசொப்ட் நிறுவனம் அறிவித்ததற்கு சில நாட்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.


உலகம் முழுவதும் 1 பில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் பேஸ்புக் வலைத்தளத்தைப் பயன்படுத்தி வருகிறார்கள்.


கணனிகளில் பேஸ்புக்கைப் பயன்படுத்தும் போது வலது பக்கத்தில் மசெஞ்சர் காணப்படும்.

மொபைல் போன்களில் பேஸ்புக்கைப் பயன்படுத்துபவர்கள் தகவல்கள் பக்கத்திற்கோ அல்லது பேஸ்புக் மசெஞ்சர் என்ற மொபைல் சேவையைத் தரவிறக்கம் செய்தோ தகவல்களைப் பறிமாறிக்கொள்ள வேண்டும்.


தற்போது மொபைல் கருவிகள் மூலமாக பேஸ்புக் வலைத்தளத்தைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டதால், அதில் கவனம் செலுத்த பேஸ்புக் நிறுவனம் முடிவு செய்துள்ளது.


இதனால் வரும் மார்ச் 3ம் திகதி முதல் கணிப்பொறி விண்டோஸ் மூலமாக பேஸ்புக் மசெஞ்சர் பயன்படுத்துவது நிறுத்தப்படுகிறது.


எனினும் தகவல் பக்கங்களுக்குச் சென்று தகவல்களைப் பறிமாறிக்கொள்ளலாம்.

0 comments:

Post a Comment