Sunday 9 March 2014

வெளிச்சத்திற்கு வந்த்து லட்சுமிமேனனின் திருட்டுத்தனம்...!



பெரும்பாலான நடிகைகள் சினிமாத்துறைக்குள் வரும்போதுதான் நடிப்பில் அதிக ஆர்வமாக இருப்பார்கள். ஆனால்,


லட்சுமிமேனன் அப்படியல்ல, கும்கி படத்தில் நடித்தபோது எப்படி ஆர்வமாக இருந்தாரோ அதில் துளியும் குறையாமல் இருக்கிறார். எந்தவொரு காட்சியாக இருந்தாலும் அதில் முழு ஈடுபாடு காட்டி நடிக்கிறார்.


 தன்னை மென்மேலும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.


அதன்காரணமாக, படப்பிடிப்பு தளங்களுக்கு வந்து நடித்து விட்டு கேரவனுக்குள் செல்பவர், இந்திய அளவில் வெளியான நல்ல படங்களை டிவிடியில் போட்டுப்பார்க்கிறாராம்.


மற்ற நடிகர்-நடிகைகள் எப்படி எப்படி நடித்திருக்கிறார்கள் என்பதை உன்னிப்பாக கவனித்து அதில் நல்லதை தனது நடிப்புக்கும் பயன்படுத்திக்கொள்கிறாராம்.


அதேபோல்தான், சித்தார்த்துடன் ஜிகர்தண்டா படத்தில் நடித்து வந்தபோதும், திடீர் திடீரென்று கேரவனுக்குள் ஓட்டம் பிடிக்கும் லட்சுமிமேனன். டிவிடியில் படம் பார்த்துக்கொண்டிருந்தாராம்.


அதோடு, ஏராளமான படங்களின் சிடிக்களையும் ஒரு சூட்கேசில் வைத்திருந்தாராம். அத்தனையும் திருட்டு விசிடிக்களாம்.


இதை ஜிகர்தண்டா படத்தின் பிரஸ்மீட் நிகழ்ச்சியின்போது கிண்டலாக சித்தார்த் சொல்லப்போக, அங்கு வந்திருக்கும் சினிமா பிரபலங்கள் தன் மீது பாய்ந்து விடுவார்களோ என்ற அச்சத்துடன் சுற்றும்முற்றும் பார்த்தபடி அமர்ந்திருந்தார் லட்சுமிமேனன்.

ஹனிமூனில் செக்ஸ் வைத்து கொள்ள மறுப்பதால் டைவோர்ஸா..?

ஹனிமூனில் செக்ஸ் வைத்து கொள்ள மறுப்பதால் டைவோர்ஸா..? மும்பை ஹைகோர்ட் மறுப்பு..!


மும்பை ஹைகோர்ட்டில் விசாரணைக்கு வந்த வழக்கு ஒன்றை விசாரித்த நீதிபதிகள், தம்பதிகளில் ஒருவர் ஹனிமூனின் போது, செக்ஸ் வைத்து கொள்ள மறுப்பு தெரிவிப்பது துன்புறுத்தலானது ஒன்றும் இல்லை என்றும் இது போன்ற காரணங்களைக் கூறி விவாகரத்து வழங்கிய குடும்ப நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2012ம் ஆண்டு குடும்ப நீதிமன்றம் ஒன்று தனது கணவருக்கு சாதகமாக, விவாகரத்து வழங்கியதை எதிர்த்து 29 வயது நிறைந்த அவரது மனைவி மும்பை ஹைகோர்ட்டில் மேல் முறையீடு செய்திருந்தார்.

அதனை, வி.கே. தஹில்ரமணி மற்றும் பி.என். தேஷ்முக் ஆகிய நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் ஒன்று விசாரணைக்கு எடுத்து கொண்டது. அப்போது,”அனைத்து குடும்பங்களிலும் அன்றாடம் நடக்கும், சிறு சிறு சண்டைகள், எரிச்சல்கள், திருமண வாழ்க்கையில் ஏற்படும் வழக்கமான சச்சரவுகள் ஆகியவை துன்புறுத்துதல் (கொடூரம்) என்ற அடிப்படையில் விவாகரத்து வழங்க போதுமான அடிப்படை காரணங்கள் ஆகாது.சில தனிப்பட்ட சம்பவங்கள் குறிப்பிட்ட காலத்தில் நடந்திருந்தால் அது துன்புறுத்துதல் ஆகாது.

மண வாழ்க்கை முழுவதுமாக கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.ஒரு மனைவி சர்ட்ஸ் மற்றும் பேண்ட்ஸ் அணிந்து அலுவலகத்திற்கு சென்று விட்டு பின்பு அலுவல் பணியாக நகரத்தை விட்டு வெளியே செல்வது என்பன போன்ற நிகழ்வுகள் திருமணத்திற்கு பின்பு நடந்தாலும், அவை கணவருக்கு ஏற்படுத்திய துன்புறுத்தலான விசயமாக எடுத்து கொள்ளப்பட மாட்டாது என்றும் தங்களது தீர்ப்பில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதனுடன் ஹனிமூனில் செக்ஸ் வைத்து கொள்ள மறுப்பு தெரிவிப்பதும் விவாகரத்து வழங்க போதுமான விசயமாக கருத்தில் கொள்ளப்படாது. மனுவில் கூறப்பட்டு உள்ள குற்றச்சாட்டுகள் மற்றும் எழுத்துபூர்வ அறிக்கை ஆகியவற்றை நன்றாக ஆராய்ந்துள்ளதுடன் நாங்கள் இரு தரப்பு சாட்சிகளையும் நன்றாக ஆய்வு செய்துள்ளோம்.


எனவே, அவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது இது போன்ற நிகழ்வுகளால் திருமணத்தை ரத்து செய்து விட முடியாது. இந்த விசயத்தில் மேல் முறையீடு ஏற்று கொள்ளப்படுகிறது என்றும் தெரிவித்துள்ள நீதிபதிகள் குடும்ப நீதிமன்றம் வழங்கிய விவாகரத்து தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளனர்.

வேலைக்கு போகும் பெண்களில் 78% பேர் மன அழுத்தம் + உடல் பருமன் போன்ற அவஸ்தை..!



உலகம் முழுவதும் மார்ச் 8ம் தேதி சர்வதேச மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையோட்டி தொழில் மற்றும் வர்த்தக கூட்டமைப்பான அசோச்சம் வேலைக்கு செல்லும் பெண்களின் உடல் மற்றும் மண நிலை குறித்து விரிவான ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. டெல்லி, பெங்களூர், சென்னை, ஹய்தராபாத், லக்னோ, மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களை சேர்ந்த 10க்கும் அதிகமான துறைகளில் பணிபுரியும் பெண்கள் 2,700 பேர் இந்த ஆய்வில் பங்கேற்றனர்.

 அதன்படி நவீன உலகில் இளம் பெண்கள் மட்டுமில்லாமல் நடுத்தர வயதினரும் பெரும் எண்ணிக்கையில் வேலைக்கு செல்வதாக தெரிய வந்துள்ளது. குறிப்பாக 32 வயது முதல் 58 வயது வரையான பெண்களில் 78% பேர் கடும் பணிச்சுமை காரணமாக மண அழுத்தம், உடல் பருமன், முதுகுவலி, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் மட்டுமில்லாமல் பல்வேறு உடல் உபாதைகளுக்கும் ஆளாகின்றனர் என்றும் அசோச்சம் தெரிவித்துள்ளது.இளம் வயதினர் மாற்று வேலை தேடிக்கொள்ளும் சாத்தியக்கூறுகள் உள்ளது.

அதேசமயம், நடுத்தர வயதினருக்கு அடிக்கடி பணிமாற்றிக்கொள்வது சாத்தியம் இல்லாதது என்பதோடு இருக்கும் வேலையையும் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்ற நிர்பந்தமும் கடும் மனஉளைச்சலை ஏற்படுத்துவதாக அசோச்சம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், திருமணமாகாத பெண்களுக்கு குடும்பச்சுமைகள் மிகக்குறைவு ஆனால், மனமாகி குழந்தைபேறு இல்லாதோர் குழந்தைகள் இருந்தாலும் அவர்களை சரியாகப் பராமரிக்க முடியவில்லை என்று கவலைப்படுவோர், இளம் வயதினருக்கே அதிக முன்னுரிமை தருவதாக குற்றம் சாட்டுவோர் கூடுதல் நேர பணிச்சுமையால் அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் பாதிப்பு, இப்படியாக நடுத்தர வயது பெண்களின் சுமை நீள்வதாக அசோச்சம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக ஊடகம், பொழுதுபோக்கு, ஐடி -துறைகளில் பணிபுரியும் அனைத்து தர்ப்பு பெண்களும் தங்களை பாதுகாத்துக்கொள்வது எப்படி என்ற கவலையிலேயே பெரும்பாலான பணி நேரத்தை செலவிடுகின்றனர் என்றும், இதனால் உரிய காலத்துக்குள் பணியை முடிக்காமல் அவதியுற நேரிடுவதாகவும் அசோச்சம் சுட்டிக்காட்டியுள்ளது. கிராமங்களில் பணிக்கு செல்லும் பெண்கள் என்றால் வீட்டுக்கு அருகிலேயே அல்லது வேலை பார்க்கும் இடத்துக்கு அருகிலேயே குடியிருப்பை மாற்றி அமைத்து கொள்கின்றனர்.

மேலும் நகர்புறங்களில் அதிக வாடகை, விலைவாசி உயர்வு போன்ற காரணங்களால் பணிபுரியும் இடத்திலிருந்து ஒதுக்குப்புறமான இடத்திற்கு செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு பெண்கள் தள்ளப்படுகின்றனர். இருந்தாலும், குறைவான போக்குவரத்து வசதிகள், நெரிசல்மிகுந்த பயண வாழ்க்கை போன்றவற்றால் பெண்கள் சிரமப்படுவதாகவும் அசோச்சம் கூறியுள்ளது.

இதன் காரணமாக ஏற்படும் மனரீதியான நோய்கள், உடல் உபாதைகளுக்காக மாதந்தோறும் சராசரியாக தங்களது ஊதியத்தில் ரூ.5,000 வரை நடுத்தர பெண்கள் செலவிட வேண்டியுள்ளதாக அசோச்சம் தெரிவித்துள்ளது. 

ரஜினியின் பெருந்தன்மையைக் கண்டு வியந்த மனிதர்...!



கோச்சடையானுக்குப்பிறகு ரஜினி யார் இயக்கத்தில் நடிக்கிறார் என்பது இன்னமும் அறிவிக்கப்படவில்லை. என்றாலும், கே.எஸ்.ரவிக்குமார். ஷங்கர் என சிலரது பெயர்கள் அடிபட்டுக்கொண்டேயிருக்கிறது.


ஆனால் ரஜினி தரப்போ, கோச்சடையான் ரிலீசுக்குப்பிறகுதான் அடுத்தப் படத்தைப்பற்றி வாய் திறப்பது என்பதில் உறுதியாக இருந்து கொண்டிருக்கிறார்கள்.


இந்த நிலையில், அடுத்த படத்தை இயக்குபவர் பற்றி எதுவும் சொல்லாத ரஜினி, தனது அடுத்த படத்தை தயாரிக்கயிருப்பது கர்நாடகத்தைச்சேர்ந்த ராக்லைன் வெங்கடேஷ் என்பதை கூறியுள்ளாராம்.


கன்னடத்தில் படங்கள் தயாரித்து வரும் இவர், தமிழில் விக்ரம் நடித்த மஜா என்ற படத்தை தயாரித்தவர்.

ஆனால் அதற்கு முன்பிருந்தே சுமார் 15 ஆண்டுகளாக ரஜினியிடம் கால்சீட் கேட்டு வருகிறாராம். அப்போது, சரியான நேரம் வரும்போது நானே அழைக்கிறேன் என்று சொல்லியிருந்த ரஜினி,


இப்போது அதற்கான சூழல் வந்திருப்பதால், தனது அடுத்த படத்தை தயாரிக்கும் பொறுப்பை அவரிடமே விட்டிருக்கிறாராம்.


ரஜினியின் இந்த முடிவினால், அடுத்து அவர் நடிக்கிற படத்தை தயாரிப்பதற்கு தயார் நிலையில் இருந்த சில முன்னணி கோலிவுட் பட நிறுவனங்கள் ஏமாற்றமடைந்துள்ளன. 

மௌனம் கலையாத பாலா...! நடந்த சம்பவம் உண்மைதானா..?



டைரக்டர் பாலு மகேந்திராவின் இரண்டாவது மனைவி தான் நடிகை மெளனிகா. கடந்த சில வாரங்களுக்கு முன்பு மறைந்த டைரக்டர் பாலுமகேந்திராவின் இறுதிநாளில் அவரது உடலை பார்க்கச் சென்றபோது அவரை டைரக்டர் பாலா தடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

பின்னர் போலீஸ் பாதுகாப்போடும், டைரக்டர் பாரதிராஜாவின் உதவியோடும் மெளனிகா பாலுமகேந்திராவில் உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டுப்போனார். இப்போது அவர் தனக்கும் பாலுமகேந்திராவுக்குமான உறவு, பாலுமகேந்திரா இறந்தபோது நடந்த சம்பவங்கள் பற்றியெல்லாம் பல ஊடகங்களுக்கு பேட்டிகளை கொடுத்து வருகிறார்.

சமீபத்தில் அப்படி ஒரு மீடியாவிடம் பேசிய அவர் டைரக்டர் பாலா மீது பரபரப்பான குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.

இயக்குநர் பாலுமகேந்திரா படங்களில் நடித்த போது நான் அவரை காதலித்தேன். முதலில் மறுத்தார். நான்தான் வற்புறுத்தி அவருடன் சேர்ந்து வாழ ஆரம்பித்தேன்.. பிறகு அவர் என்னை விட்டு விலகிப் போகவில்லை. நானாக அவரை தாலி கட்டும்படி வற்புறுத்தவில்லை. அவர்தான் திடீரென்று ஒருநாள் சிவன் கோவிலில் வைத்து எனக்கு தாலி கட்டினார்.

பாலுமகேந்திராவுக்கும் எனக்கும் 28 வருட தாம்பத்ய வாழ்க்கை இருக்கிறது. அவர் என்னை அன்புடன் பார்த்துக் கொண்டார். அப்படிப்பட்ட என்னை பாலுமகேந்திரா மரணம் அடைந்த போது பார்க்க வரக்கூடாது என்று இயக்குநர் பாலா தடுத்தார். நான் வரக்கூடாது என்று சொல்ல பாலாவுக்கு என்ன உரிமை இருக்கிறது?

பாலுமகேந்திரா உடல் வைக்கப்பட்டு இருந்த இடத்துக்கு நான் சென்றால் என்னை அடித்து விரட்டவும் ஆட்களை நிறுத்தி இருந்தார். பாலா விதித்த தடையை மீறி என் கணவரின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்த டைரக்டர் பாரதிராஜா உதவி செய்தார். எனக்கும் பாலுமகேந்திராவுக்குமான உறவு தவறானதாக இருந்து இருந்தால் அவர் உயிரோடு இருக்கும் போதே என்னை பாலுமகேந்திராவிடம் இருந்து பிரிக்க பாலா முயற்சி செய்து இருக்கலாமே…? அப்போது விட்டுவிட்டு இப்போது என்னை தடுப்பது எந்த விதத்தில் நியாயம் என்று கேள்வி எழுப்பியுள்ளார் மெளனிகா.

கணவன், மனைவிக்குள் ஆயிரம் இருக்கும். அதில் பாலாவுக்கு என்ன வேலை

ஒரு காலத்தில் நா மன்மதன்..ஆனா இப்ப இல்லிங்க..மனம் திறக்கும் அருள்நிதி...!



'ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்’, 'நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும்’ என ரைமிங் டைட்டில் படங்களில் பிஸியாக இருக்கும் அருள்நிதியிடம் ஒரு ஜாலி அரட்டை...


''வித்தியாசமான டைட்டில் வெச்சா கவனம் அதிகமாகும்னு யாராவது ஐடியா கொடுத்தாங்களா பாஸ்?''


'' 'ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்’ படத்தில் களவாணியாகவும், நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும்’ படத்தில் போலீஸாவும் நடிச்சிருக்கேன். மற்ற மூணு போலீஸ் கேரக்டர்ல சிங்கம்புலி, பக்ஸ், ராஜா நடிச்சிருக்காங்க. இந்த ரெண்டு படங்களும் என்னோட ஹிட் லிஸ்ட்ல மட்டுமில்ல, பெஸ்ட் லிஸ்ட்லேயும் இடம் பிடிக்கும்.''


''இப்படியே 'போலீஸ்  திருடனா’வே நடிச்சுட்டு இருந்தா எப்படி? ரொமான்ஸ் பண்ற ஐடியா இல்லையா?''


'' 'ஓகேஎம்கே’ லவ் ஸ்டோரிதான். இதுவரை ரிலீஸான என்னுடைய எல்லாப் படங்கள்லேயும் வித்தியாசமான கேரக்டர்களில்தான் நடிச்சிருக்கேன். படம் முழுக்க ஹீரோயினை விரட்டி, விரட்டி லவ் பண்ண எனக்கும் ஆசைதான். செம ஸ்டோரி அமைஞ்சா, நான் நடிக்க மாட்டேன்னா சொல்லப்போறேன்?''


'' 'அரசியல்ல என்னை சம்பந்தப்படுத்தாதீங்க. ஒரு நடிகனா மட்டுமே பாருங்க’னு சொல்லியிருந்தீங்களே?''


''இப்பவும் அதைத்தான் சொல்றேன். மத்த நடிகர்கள்கிட்ட நீங்க இந்த மாதிரி கேள்வியைக் கேட்க முடியாது. என்னுடைய முதல் படத்தில் இருந்து, இன்னைக்கு வரைக்கும் நான் இந்தக் கேள்வியை எதிர்கொண்டுதான் இருக்கேன். இது எனக்குப் பிடிக்கலைனுதான் சொல்றேன். ஏன்னா, எனக்கு அரசியல் பேசுற வயசு கிடையாது. தவிர, அரசியல் பேசுறதுக்கும், பண்றதுக்கும் எங்க குடும்பத்தில் நிறையப் பேர் இருக்காங்க.''


'' 'அருள்நிதி மாதிரி சின்ன நடிகர்களோட நடிக்க மாட்டேன்’னு தன்ஷிகா சொல்லியிருக்காங்களாமே?''


''இந்த விஷயத்தை நான் கேள்விப்படலையே. ஒருவேளை, இதை உண்மையாகவே அவங்க சொல்லியிருந்தாங்கனா, நான் பெரிய நடிகர் ஆனதுக்கப்புறம், தன்ஷிகா என்கூட நடிக்கட்டும்.''


''குறும்பட இயக்குநர்கள் இதுவரைக்கும் யாரும் உங்களை அப்ரோச் பண்ணலையா?''


''பண்ணியிருக்காங்க. ஆனா, எதுவுமே எனக்கு செட் ஆகாத கதைகளா இருந்ததால் நான் விரும்பலை.  ஒவ்வொரு ஸ்டெப்பையும் பார்த்துப் பார்த்து வைக்க வேண்டியதா இருக்கு. வளர்ந்து வர்ற நடிகனுக்கு இந்தப் பயமெல்லாம் இருக்கத்தானே செய்யும்? அதே சமயம், 'சூதுகவ்வும்’, 'பீட்சா’ மாதிரியான கதைகளைக் குறும்பட இயக்குநர்ங்கிறதுக்காக மிஸ் பண்ண மாட்டேன்.''

''லவ் அப்ரோச்... கேர்ள் ஃபிரெண்ட்ஸ் இதைப்பத்தி கொஞ்சம்...''


''பொண்ணுங்க எனக்கு அப்ரோச் பண்ணினதைவிட, நான் பொண்ணுங்களுக்கு அப்ரோச் பண்ணினதுதான் அதிகம். அதையெல்லாம் இப்போ தோண்ட வேணாம். கேர்ள் ஃபிரெண்ட்ஸ்னு பார்த்தீங்கனா, என்கூட நடிக்கிற எல்லா நடிகைகளும்.''


'' 'இளைய சூரியன்’, 'குட்டித் தளபதி’னு பட்டம் போட்டுக்கிற ஆசை இல்லையா?''


''பட்டம் கூட ஒழுங்கா விடத் தெரியாத எனக்கு பட்டம் கொடுக்கிறதெல்லாம் ரொம்ம்ம்ப ஓவரா இருக்கும் பாஸ். அதெல்லாம் ஒண்ணும் வேணாம், 'அருள்நிதி’னு தாத்தா எனக்கு வெச்ச அழகான பெயர் போதும்.''



''துரை தயாநிதியைப் பற்றிப் பேசுகிற அளவுக்கு, உதயநிதி ஸ்டாலினைப் பற்றி நீங்க சொல்வது இல்லையே?''


''நாங்க கூட்டுக் குடும்பமா இருந்தப்போ, சின்ன வயசில் மதுரையில் இருந்து வர்ற துரை, நேரா என்னோட ரூமுக்கு வந்து கதவைத் தட்டுவார். காரணம் என்னை சீக்கிரமா எழுப்பிவிட்டு, உதயநிதி அண்ணனோட விளையாடுறதுக்குத்தான்!''

'ராணா' எனக்கு ராசியில்லாதப் படம் - 'கோச்சடையான்' ஆடியோ ரிலீஸில் தனுஷை பாராட்டிய சூப்பர் ஸ்டார்



ரஜினி, தீபிகா படுகோனே நடிப்பில் உருவாகியுள்ள கோச்சடையான் படத்தின் ஆடியோ வெளியீடு இன்று சென்னை சத்யம் திரையரங்கில் நடந்தது. இதில் ரஜினி, ஷாருக்கான், தீபிகா படுகோனே, கே.பாலச்சந்தர், ஏ.வி.எம்.சரவணன் உள்ளிட்ட பல்வேறு திரையுலக கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் ரஜினி பேசும்போது,

எனக்கு எப்பவுமே ராஜா ராணி கதை என்றாலே ரொம்பவும் பிடிக்கும். ரசிகர்களுக்காக நிறைய படங்கள் பண்ணியிருந்தால்கூட, இதுவரை ஒரு ராஜா ராணி கதை நான் பண்ணவில்லையே என்ற ஆதங்கம் என்னுள் இருந்துகொண்டே இருந்தது.

இதுவரைக்கும் தமிழ் சினிமால ஏன் இந்தியாவில்கூட யாருமே பண்ணாத ஒரு ராஜா ராணி படம் செய்யணும்னு முடிவு பண்ணித்தான் 'ராணா' படத்தை தொடங்க முடிவு செய்தேன். அந்தப் படத்தோட கதை எனக்குள் 20 வருஷமா ஓடிக்கொண்டு இருந்தது.

அந்தப் படம் தொடங்கின நேரத்துலதான் எனக்கு உடம்பு சரியில்லாம போச்சு. அதற்கு பிறகு என்னாச்சுன்னு உங்களுக்கே தெரியும். ஆஸ்பத்திரியில சிகிச்சை முடிஞ்சு திரும்பி வந்தாலும், இந்த கதைக்கு நிறைய உடல் உழைப்பு தேவைப்பட்டுச்சு. அப்போதைக்கு அது முடியல.

ஒருநாள் முரளி மனோகர் எனக்கு போன் செய்து கே.எஸ்.ரவிக்குமார் ராணாவுக்கு பதிலா  'கோச்சடையான்' னு ஒரு கதை பண்ணியிருக்கிறார், கேட்டுப் பாருங்கனு சொன்னார். இப்போ பண்ண முடியாது, 2 வருஷமாவது ஆகும்னு சொன்னேன்.

நீங்க முதல்ல அதை கேளுங்க. அப்புறம் எப்படி பண்ணலாம்னு பார்க்கலாம்னு சொன்னார். ராணாவைவிட எனக்கு கோச்சடையான் கதை ரொம்பவும் பிடிச்சது. ஆனா இதை இப்போ எப்படி பண்றதுனு கே.எஸ்.ரவிக்குமார்கிட்ட கேட்டேன். நீங்க சரின்னு சொன்னா வேற ஒரு ஐடியா இருக்கு.

'சுல்தான்'னு ஒரு அனிமேஷன் படத்தை செளந்தர்யா பண்ணிக்கிட்டு இருக்காங்க. அதனால இந்த கதையை மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்துல பண்ணலாம்னு சொன்னாங்க. எனக்கு டெக்னாலஜி பத்தி தெரியாது. அதில எனக்கு நம்பிக்கை வேற இல்லை.

இந்த படத்தை பற்றி ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பல பேரிடம் கருத்து கேட்டேன். இந்தப் படம் பண்றதுக்கு 5, 6 வருஷமாகும். 700 கோடியாகும்னு சொன்னாங்க. அவ்வளவு செலவு எல்லாம் ஆகாது. நம்மோட பட்ஜெட்லயே பண்ண முடியும்னு அவங்க சொன்னாங்க.

உடனே செளந்தர்யாகிட்ட பேசினேன். இந்த படத்துக்காக உனக்கு பெரிய பொறுப்பு இருக்கும். பண்ண முடியுமான்னு கேட்டேன். அவங்க உடனே நான் பண்ணி காட்றேன்னு சொன்னாங்க. இந்த படம் இந்தளவிற்கு வந்ததிற்கு முக்கிய காரணம் ஏ.ஆர்.ரஹ்மான் அளித்த ஊக்கம் தான்.

நான் படம் பாத்துட்டேன். இப்போ 3டி பணிகள் நடந்துக்கிட்டு இருக்கு. இந்த படம் அனைத்து தரப்பு மக்களுக்கும் பிடிக்கும்னு எனக்கு நூறு சதவீதம் நம்பிக்கை இருக்கு.

செளந்தர்யா, ஐஸ்வர்யா இரண்டு பேரையும் கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்டேன். இப்ப ரெண்டு பேரும் படம் இயக்குறாங்க அப்படின்னா அதற்கு தனுஷ், அஸ்வின் மற்றும் அவங்களோட குடும்பத்தினர்தான் காரணம். அவங்களோட குழந்தையா நினைச்சு, ஊக்குவிக்கிறாங்க. அவங்களுக்கு தான் நான் நன்றி சொல்லணும். இன்னும் ஐஸ்வர்யா, செளந்தர்யா நிறைய படங்கள் பண்ணனும்.

குடும்பத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்தால் மட்டுமே நல்ல குடிமக்களை உருவாக்க முடியும் என்பது என்னுடைய கருத்து. குழந்தைகளுக்கு 10, 12 வயசு வருகிற வரைக்கும் நல்லபடியா அவங்களை வளர்க்கணும். அதற்கு பிறகு என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.

இந்த படம் வந்த பிறகு நிறைய பேர் இயக்கச் சொல்லி கேட்பாங்க. 2 குழந்தைகளை பெற்று என்கிட்ட கொடுத்துட்டு அதற்கு பிறகு நீங்க என்ன வேண்டுமானாலும் செய்யுங்க அப்படிங்கிறது எனது கருத்து.

செளந்தர்யாவை நினைத்து ரொம்ப பெருமையா இருக்கு. அவங்க முதல்ல ஆக்‌ஷன் அப்படினு சொன்னப்போ எனக்கு சிரிப்பு வந்துவிட்டது. அப்புறம் ரவிக்குமார் சார் நீங்க வாங்க. இவரு ஆக்‌ஷன் எல்லாம் சொல்லட்டும், நீங்க கட் மட்டும் சொல்லுங்கனு சொன்னேன்.

இவ்வாறு அவர் பேசினார். 

கோச்சடையான் பாடல்கள் ரிலீஸ்: ரஜினி, ஷாருக்கான் பங்கேற்பு...!



ரஜினி – தீபிகா படுகோனே ஜோடியாக நடித்த கோச்சடையான் பட பாடல்கள் வெளியீட்டு விழா இன்று காலை 10 மணிக்கு சென்னை, சத்யம் தியேட்டரில் நடந்தது. நடிகர் ரஜினிகாந்த் பாடல்களை வெளியிட்டார். அப்போது ரசிகர்கள் கைத்தட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

விழாவில் இந்தி நடிகர்கள் ஷாருக்கான், ஜாக்கி ஷெராப், படத்தின் கதாநாயகி தீபிகா படுகோனே, டைரக்டர்கள் கே.பாலசந்தர், எஸ்.பி.முத்துராமன், ஷங்கர், தயாரிப்பாளர்கள் ஏ.வி.எம்.சரவணன், முரளி மனோகர், ‘கோச்சடையான்’ படத்தில் நடித்த சரத்குமார், ஆதி, நாசர், ஷோபனா, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

விழாவில் கவிஞர் வைரமுத்து பேசியதாவது:–

‘கோச்சடையான்’ தலைப்பு ஈர்ப்பானது. அதில் அழுத்தம் இருக்கும், பழமையும் இருக்கும். கோச்சடையான் சிவனின் இன்னொரு பெயர். பாண்டியர்களுக்கும் இந்த பெயர் உண்டு. பல புதுமைகள் இதில் உள்ளது. நவீன தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்டுள்ளது. ரஜினி நான்கு யுகங்கள் தாண்டி வந்திருக்கிறார். 40 வருடம் சிம்மாசனத்தில் நகர்த்த முடியாமல் அமர்ந்திருக்கிறார். அது மிகப்பெரிய சாதனை.

அவரது முதல் ரசிகனுக்கு இப்போது 65 வயது. 25 வயது உடையவரும் அவரது ரசிகனாக இருக்கிறார். 65 வயது ரசிகரும், 25 வயது ரசிகரையும் பெற்றுள்ள ஒரே நடிகர் ரஜினிதான். இதற்கு உழைப்பு மட்டும் காரணம் அல்ல. நல்ல எண்ணமும் இருக்கிறது.

‘படையப்பா’ படத்தில் பணியாற்றிய எல்லோருக்கும் தங்க சங்கிலி கொடுத்தார். அதில் மனிதாபிமானம் தெரிந்தது. ‘பாபா’ படம் நஷ்டமானபோது வினியோகஸ்தர்களை அழைத்து நஷ்டத்தை நான் தருகிறேன் என்றார். அதில் கொடை உள்ளது தெரிந்தது.

ரஜினி அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என்ற கேள்வி எழுந்த சமயத்தில் அவரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அந்த கேள்விக்கு யாரும் தப்பிக்க முடியாது. ஆனால் ரஜினி சொன்ன பதிலில் அவரது அறிவு முதிர்ச்சி வெளிப்பட்டது.

தமிழகத்தின் முதல்வராக தமிழன் வரவேண்டும் என்கிறார்களே என்று அவரிடம் கேட்டனர். இது சிரமமான கேள்வி. நெஞ்சில் வேல் பாய்ச்சும் கேள்வி. சரியான கருத்துதானே, நாடாரோ, முதலியாரோ, பிள்ளைமாரோ வரவேண்டும் என்று சொல்லவில்லையே, தமிழன்தான் வரவேண்டும் என்று சொல்கிறார்கள் என்றார். அவர் தமிழ் மக்கள் நெஞ்சில் நிறைந்து வாழ்கிறார். அவரது ‘கோச்சடையான்’ வெற்றி பெறும் என்பதில் சந்தேகம் இல்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

படத்தின் டைரக்டர் சவுந்தர்யா விழாவில் பேசியதாவது:–

‘கோச்சடையான்’ கார்ட்டூன் படம் அல்ல. அனிமேஷன் படம் ஆகும். நவீன தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் 9 பாடல்கள் உள்ளது. அப்பாவை (ரஜினிகாந்த்) வைத்து இயக்கியது பெருமை அளிக்கிறது. அவரது ருத்ரதாண்டவ நடன காட்சியும் படத்தில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

‘கோச்சடையான்’ தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம் உள்பட ஆறு மொழிகளில் வெளியாகிறது. தமிழ், இந்தி படடிரெய்லர்களும் இன்று வெளியிடப்பட்டன. கோச்சடையான் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். வைரமுத்து பாடல்களை எழுதியுள்ளார். ரஜினி மகள் சவுந்தர்யா இயக்கியுள்ளார்.

‘கோச்சடையான்’ பாடல் வெளியீட்டு விழாவையொட்டி சத்யம் தியேட்டர் எதிரில் ஆயிரக்கணக்கான ரஜினி ரசிகர்கள் திரண்டு நின்றார்கள். அழைப்பிதழ் உள்ளவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். ‘கோச்சடையான்’ படம் அடுத்த மாதம் (ஏப்ரல்) ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. உலகம் முழுவதும் 6 ஆயிரம் தியேட்டர்களில் திரையிடுகின்றன. 3டி மோஷன் பிக்சர் தொழில்நுட்பத்தில் இப்படத்தை எடுத்துள்ளனர்.

''உன்னை மாதிரி நல்லவனா இருக்க என்னால முடியாது. அட்லீஸ்ட், உன் கூடவாவது இருக்கேனே..?''



''உன்னை மாதிரி நல்லவனா இருக்க என்னால முடியாது. அட்லீஸ்ட், உன் கூடவாவது இருக்கேனே?'' - அமலா பாலுக்கான அந்த டப்பிங் டயலாக்கை 'ஓ.கே.’ செய்துவிட்டு, என் பக்கம் திரும்பினார் சமுத்திரக்கனி. 'நிமிர்ந்து நில்’ இயக்கம், 'வேலையில்லா பட்டதாரி’, 'வசந்தின்டே கனல்வழிகளில்’  நடிப்பு என்று பரபரப்பாகப் பறக்கிறார் கனி.

''சிலையும் நீயே... சிற்பியும் நீயே! இதுதான் 'நிமிர்ந்து நில்’ படத்தின் ஒன்லைன். 'அவன் தப்பு, இவன் தப்பு’னு சொல்லிச் சொல்லியே நாம பண்ற தப்பை நாம நியாயப்படுத்திக்கிறோம். 'சிகரெட் பிடிக்கத் தடை செய்யப்பட்ட பகுதி’னு போட்டிருக்கும் இடத்தில்தான் ஒரு கும்பலே நின்னு சீரியஸா தம் போட்டுட்டு இருக்காங்க. சட்டத்தை யாரோ ஒரு சிலர் மட்டும் கடைப்பிடிச்சா, பத்தாது; எல்லாருமே கடைப்பிடிக்கணும். அப்பத்தான் எல்லாம் சரியாகும்.

படத்தில் ஜெயம் ரவியின் கேரக்டர் பேர்... அரவிந்தன் சிவசாமி. ப்ளஸ் டூ வரை குரு குலத்துல படிச்சு, ஸ்டேட் ஃபர்ஸ்ட் மார்க் எடுத்தவன். பிரார்த்தனை, பைபிள், சித்தாந்தம், வேதாந்தம்னு ஒழுக்கமா வளர்ந்தவன். அதனாலயே அவனால் இந்தச் சமூகத்தோட சேர்ந்து வாழ முடியாது. எல்லாரும் எதையோ துரத்திட்டு ஓடுறதைப் பார்த்துட்டு, 'ஏன் யாருமே சாந்தமா, சந்தோஷமா இல்லை?’னு ஏங்குவான். அப்படிப் பட்டவன், கோபத்துல வெடிச்சா எப்படி இருக்கும்? அதுதான் படம்!

ரவிக்கு, இதில் ரெண்டு கேரக்டர். ஒருத்தன் நல்லவன்; இன்னொருத்தன் ரொம்ப நல்லவன். 'தம்பி... இதான் உன் முதல் படம்னு நினைச்சு, மொத்த எனர்ஜியையும் போடு’னு சொன்னேன். என்ன சொன்னாலும் மறுபேச்சு பேசாம நடிச்சுக்கொடுக்கிறான்.

ஒரு காட்சிக்காக சாக்கடையில் விழச் சொன்னேன். சட்டுனு விழுந்தான். அமலா பால்கூட, 'என்னங்க எந்த சேஃப்ட்டியும் இல்லாம, எதைப் பத்தியும் யோசிக்காம டக்னு விழுந்துட்டீங்க?!’னு ரவிகிட்ட கேட்டாங்க. 'எனக்கு எப்போ வலிக்கும்னு அண்ணனுக்குத் தெரியும். என்னை எப்பவும் அவர் கஷ்டப்படுத்த மாட்டார்’னு சொன்னான். அந்த நம்பிக்கைக்கு உண்மையான படமா வந்திருக்கு!''

''இயக்கத்தைவிட நடிப்பில் அதிகக் கவனம் செலுத்துறீங்களோ!''

''பிடிச்சுதான் நடிக்கிறேன். இப்போ 'நீ எல்லாம் நல்லா வருவடா’ படத்தில் விமலுடன் நடிக்கிறேன். என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் கேரக்டர். தனுஷ் திடீர்னு ஒருநாள் வந்து, ''வேலையில்லா பட்டதாரி’ படத்தில் எனக்கு அப்பாவா நடிக்கிறீங்களா?’னு கேட்டார். கதை ரொம்பப் பிடிச்சிருந்தது. உடனே ஓ.கே. சொல்லிட்டேன்.

 மலையாளத்துல 'வசந்தின்டே கனல்வழிகளில்’ படத்தில் கம்யூனிஸ்ட் கிருஷ்ணப் பிள்ளையா நடிக்கிறேன். கிருஷ்ணப் பிள்ளை, காட்டுக்குள்ளே தலைமறைவா வாழ்ந்த கொடுங்காற்று. எப்போ வருவார்... என்ன பண்ணுவார்னு யாருக்கும் தெரியாது. ஆனா, புயல் மாதிரி வந்து சரிச்சுட்டுப் போயிடுவார்.

அப்போ ஆறாவது படிச்ச ஒரு பொண்ணு மூலம் செய்திகளைப் பரப்பினார். இப்போ அந்த அம்மாவுக்கு 80 வயசு. அவங்க என்னை கிருஷ்ணப் பிள்ளை கெட்டப்ல பார்த்ததும், 'அப்படியே ஐயாவைப் பார்த்த மாதிரியே இருக்கு’னு அழுதுட்டாங்க. அந்த அங்கீகாரம் போதும்னு ஒரு நிறைவு வந்திருச்சு!''

ஷூட்டிங்கில் திருட வந்த சிறுவனக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்புத்தந்த இயக்குனர்..!



ஷூட்டிங்கில் உணவு திருட வந்தவனை பிடித்து நடிகனாக்கிய ருசிகர சம்பவம் இந்தி பட உலகில்  நடந்துள்ளது.

இந்தியில் தயாராகும் புதிய படம் ச்சார்பியுடியா சுக்ரே. இப்படத்தை மணீஷ் ஹரிசங்கர் இயக்குகிறார். கரீனா கபூரின் நாத்தனாரும், சயீப் அலிகானின் தங்கையுமான சோஹா அலிகான் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இப்படத்தின் ஷூட்டிங்  மும்பையில் நடந்தது. அப்போது 13 வயது சிறுவன் சங்கர் மண்டேல் என்பவன் பசிக்காக உணவு திருடினான். இதை கவனித்த இயக்குனரின் உதவியாளர்கள் அவனை இழுத்துவந்து இயக்குனர் எதிரில் நிறுத்தினர்.

தர்மஅடி விழப்போகிறது என்று சிறுவன் அழத் தொடங்கினான். ஆனால் இயக்குனரோ உனக்கு நடிக்க இஷ்டமா என்றார்.

அழுகையை நிறுத்திவிட்டு நல்லா நடிப்பேன் சார் என்று நடித்துக் காட்டினான்.

அவனது ஆர்வத்தை புரிந்துகொண்ட இயக்குனர் தன் படத்திலேயே அவனை நடிக்கச் சொன்னார்.

 குழந்தை குற்றவாளிகள் (சைல்ட் கிரிமினல்ஸ்)பற்றிய கதையாக இப்படம் உருவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சங்கரின் தந்தையை அழைத்து அவரிடம் அனுமதி கேட்டபோது போலீசில் மகனை மாட்டிவிடத்தான் விசாரிக்கிறார்கள் என்று பயந்தார். அவரிடம் விளக்கி கூறியபின் சந்தோஷம் அடைந்தார்.

திருட வந்த சிறுவனுக்கு அடித்த யோகத்தைபார்த்து பட குழுவில் இருந்தவர்கள் ஆச்சரியப்பட்டனர்.

அவனுக்கு திருப்தி ஏற்படும் வரை  சாப்பாடு கொடுத்தனர். 2 மாதம் அவனுக்கு நடிப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

 இப்போது அவனுடன் சேர்ந்து அவனது நண்பர்கள் சிலரும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

நிமிர்ந்து நில் - சினிமா விமர்சனம்



சமுத்திரகனியின் ஆகச் சிறந்த பலமே அவரின் சமூக அக்கறை தான், சொல்ல வந்ததை மறைமுகமாக கூட சொல்லி விடுவார். எனக்கு அவரை உன்னைச் சரணடைந்தேன் படம் முதலே பிடிக்கும்.

இந்த படம் கூட ஏதாவது சமூக கோவம் அதற்கான விழிப்புணர்வும் இருக்கும் என ஒருவாறு யூகித்தேன்.அதற்கேற்றாற் போல் தான் முதல் பாதியும் இருந்தது. ஆனால் இரண்டாம் பாதி முதல் பாதியின் ஹைப்புக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறி விட்டது. க்ளைமாக்ஸ் தான் படத்தின் மைனஸ்.

நேர்மையாக வாழ வேண்டும் என்று போதிக்கப்பட்டு வளர்ந்த ஒருவனுக்கு வாழ்க்கையின் நிஜம் புரிய மறுக்கிறது. இயல்பான இந்தியா லஞ்சத்தில் மட்டுமே இயங்குகிறது என்பதை ஏற்க மறுக்கும் அவன் படும் பாடும் அதற்கு அவன் கண்டறியும் தீர்வுமே நிமிர்ந்து நில்

ஆசிரமத்தில் நேர்மையாக வாழ போதிக்கப்பட்டு படிப்பு முடிந்து வெளிவரும் ஜெயம்ரவி சட்டம் ஒழுங்கை மக்கள் மதிப்பதில்லை என்ற நிஜமே புரிய மறுக்கிறது.

அப்பாவியாக ஒரு சிக்னலில் டிராபிக் போலீஸிடம் மாட்டும் ரவி 100 ரூபாய் லஞ்சம் தர மறுக்கிறார், அதனால் ஏற்படும் சிக்கலில் போலீஸில் மாட்டி நீதிபதியிடம் சிக்கி தண்டனை பெறுகிறார். வெளி  வரும் ரவி எல்லா அதிகாரிகளையும் பற்றி மேலிடத்தில் புகார் தருகிறார்.

சிக்கலுக்கு உள்ளாகும் அதிகாரிகள் ரவியை தாக்கி விடுகிறார்கள். ஒரு கட்டத்தில் வாழ்வதற்காக ஊரை விட்டே செல்ல வேண்டிய சூழல் ஏற்படுகிறது. ஆனால் எதிர்த்து நிற்கும் ரவி சமூகத்தையே திருத்த நினைக்கிறார்.

அதற்காக இல்லாத ஒரு ஆளுக்காக அனைத்து அரசு அடையாள அட்டைகளையும், சான்றிதழ்களையும் பெறுகிறார் நல்ல அதிகாரிகளின் துணை கொண்டு.

நீதிபதி, டாக்டர், போலீஸ், எம்பி என 147 பேர் இந்த ஊழலில் சிக்குகிறார்கள். அனைவரையும் மக்கள் முன்னாலும் சட்டத்தின் முன்னாலும் நிறுத்துகிறார் ரவி. அனைத்து அதிகாரிகளும் சிக்கிக் கொள்கிறார்கள்.

இடைவேளை வரை இவ்வளவு தான். ஊழலில் மாட்டிய அனைத்து அதிகாரிகளும் ஒன்று சேர்ந்து ரவியை எதிர்க்கிறார்கள். மேற்கொண்டு என்ன நடந்தது என்பது தான் படம்.

இந்தியன், சாமுராய், சிட்டிசன் போன்ற படங்களின் நினைவுகள் அவ்வப்போது வந்து செல்வதை தவிர்க்க முடியவில்லை.

ஜெயம்ரவிக்கு கேரியரில் இந்த படம் மிக முக்கியமான படம் தான்.சிரத்தை எடுத்து நடித்திருக்கிறார். இயலாமையில் பொறுமும் போதும், விட்டேத்தியாக காதலிக்கும் போதும், நரசிம்ம ரெட்டியின் பாடி லாங்குவேஜிலும் அசத்தியிருக்கிறார். ஆனாலும் ஏதோ ஒன்று குறைகிறது.

அமலாபால், அவரின் முகம் பார்த்ததுமே படம் நீண்ட நாள் தயாரிப்பில் இருந்தது என்பது அப்பட்டமாக தெரிகிறது. படத்தில் வந்து செல்கிறார். அவர் பாத்திரம் இல்லாவிட்டாலும் படத்தில் எந்த பாதிப்பும் இருந்திருக்காது.

நாயகனின் நண்பனாக சூரி நிறைவாக வந்து காமெடியுடன் குணச்சித்திரத்தையும் கலந்து நிறைவாக  செய்து போகிறார். கோபிநாத்தும் படத்தில் இருக்கிறார்.

சரத்குமார் இன்டர்வெல் பிளாக்குக்கு மட்டும் தேவைப்பட்டு இருக்கிறார். எனக்கு இதில் பெரிய ஆச்சரியம் கு.ஞானசம்பந்தனின் நடிப்பும் நகைச்சுவையும் தான். இனி நகைச்சுவை நடிகராகவும் அசத்தப் போகிறார். அவரின் முகபாவங்கள் இயல்பாகவே நமக்கு சிரிப்பை வரவழைக்கின்றன.

பாடல்கள் எல்லாமே ஸ்பீடுபிரேக்கர்கள் தான். படத்தின் துவக்கமே படத்தில் ஏதோ ஒரு விஷயம் இருக்கப் போகிறது என்பதை உணர்த்துகிறது. படமும் அதற்கேற்றாற் போல் தான் நகர்கிறது.

ஆனால் படத்தின் பிற்பாதி சலிப்பையும் ஒரு அயற்சியையும் தருகிறது. முதல் பாதியில் ரவிக்கு ஆதரவாக போராடிய மாணவர்கள் காணாமல் போனதன் ரகசியம் தான் புரியவில்லை.

ரவியின் பேட்டியைப் பார்த்ததும் உணர்ச்சிவசப்பட்ட மக்கள் அவருக்கு ஆதரவாக உயிரையும் கொடுக்க கிளம்புகிறார்கள். ஆனால் படத்தின் ஓட்டத்தில் காணாமலே போகிறார்கள்.

லஞ்சம் வாங்குபவனை விட லஞ்சம் கொடுத்து காரியம் சாதிக்க நினைக்கும் மக்கள் தான் குற்றவாளிகள் என்பதை சொல்ல நினைக்கும் படம் சற்றே தடம் புரண்டுவிட்டது. ஆகச்சிறந்த படமாக வந்திருக்க வேண்டியது, சற்றே மிஸ்ஸாகி ஆவரேஜ் படமாகிவிட்டது.

மற்றபடி முயற்சிக்கு பாராட்டுகள் சமுத்திரகனி.

வைரங்களைப் புதைத்திருக்கும் வரிகளை கொண்ட உவமைகள் நிறைந்த பாடல்...!



மீண்டும் நாயகன் பாடும் சரணம். முத்தாரம் சிரிக்கின்ற சிரிப்பல்லவோ முழுநெஞ்சைத் தொடுகின்ற நெருப்பல்லவோ
சங்கீதம் பொழிகின்ற மொழியல்லவோ
சந்தோஷம் வருகின்ற வழியல்லவோ
என் கோவில் குடிகொண்ட சிலையல்லவோ

இப்போது கவிஞர் விஸ்வரூபம் எடுக்கிறார். இவ்வளவு நேரம் சொன்னதெல்லாம் மிகவும் சாதாரணம் என்பது போல நாயகி திருமணத்தை வெறுத்தவள். அவள் காதல் வயப்படும் போது,

அந்த மாற்றம் படிப்படியாகத்தான் நிகழ வேண்டும். முதலில் தன்னைப் பற்றிக் கூறிவிட்டுத் தான் நாயகனுக்கு ஏற்றவள்தான் என்ற கருத்தை முன் வைக்கிறாள். இப்போது நாயகன் அவளை முழுவதுமாக ஏற்றுக்கொண்டு விட்டான் என்று தெரிந்ததும், அவனோடு தான் இணைய விரும்புவதைத் தெரிவிக்கிறாள். முதலில் உவமைகளில் துவங்குகிறான்.

அலையோடு பிறவாத கடல் இல்லையே
நிலலோடு நடக்காத உடல் இல்லையே
துடிக்காத இமையோடு விழியில்லையே

உவமைகளை அடுக்கிக் கொண்டே போவதில் கவிஞருக்கு எந்த ஒரு சிரமமும் இரப்பதாகத் தெரியவில்லை.

எவ்வளவு நேரம்தான் மறைமுகமாகப் பேசிக் கொண்டிருப்பது? இதற்கு மேல் தயங்கக் கூடாது என்று முடிவு செய்து அடுத்த வரியில் தன் விருப்பத்தை நேரடியாகவே சொல்லி விடுகிறாள்.

துணையோடு சேராத இனம் இல்லையே!

இவ்வளவு நேரம் சொன்னதெல்லாம் பொருள்களைப்பற்றி உயிர் இனங்களும் அப்படித்தான் என்று வலியுறுத்துவது போல, ‘துணையோடு சேருவது எல்லா உயரினங்களுக்கும் இயல்பான ஒன்றதான் எனவே என் மனதைப் புரிந்து கொள்’ என்ற செய்தியைச் சொல்லி முடிக்கிறாள். இப்போதுதான் நாயகிக்குத்தான் செய்த தவறு உரைக்கிறது. ‘நான் சொன்ன உவமைகள் எல்லாம் சரிதானா? ஏதோ ஒன்று உதைக்கிற மாதிரி இருக்கிறதே! ஆமாம் நான் முதலில் சொன்ன மூன்று உவமைகளுக்கும், கடைசியாகச் சொன்ன உவமைக்கும் ஒரு அடிப்படையான வேறுபாடு இருக்கிறதே! அலையும் கடலும் ஒன்றுதான் உடலோடு பிறந்ததுதான் நிழல்

இமையும் விழியும் எப்பொழுதுமே இணைந்துதான் இருந்து வந்திருக்கின்றன.
ஆனால், உயிர் இனங்களில், ஒரு ஆணும், ஒரு பெண்ணும் தனித்தனியே பிறந்து வளர்ந்து, பின்னே இணைகிறார்கள். இது எப்படி மற்ற உவமைகளுடன் பொருந்தும்?
இந்த முரண்பாட்டைச் சரிக்கட்டுவதற்காக நாயகி, புத்திசாலித்தனமாக அவசரமாக அடுத்த வரியை அமைக்கிறாள். ‘என் மேனி உனதன்றி எனதில்லையே’ அதாவது எப்படி அலை கடலுக்குச் சொந்தமோ,

நிழல் எப்படி உடலுக்குச் சொந்தமோ, இமை எப்படிக் கண்களுக்குச் சொந்தமோ, அது போல் நான் உனக்குச் சொந்தம் எனவே கடைசியாக நான் சொன்னது ஒரு சம்பிரதாயமான உவமைதான். முதலில் சொன்ன மூன்று உவமைகள்தான் எனக்கும் உனக்கும் பொருந்தும்.

இந்த விளக்கத்தை அவள் அவசரமாக வெளிப்படுத்துவது இசையிலும் பிரதிபலிக்கிறது. ‘துணையோடு சேராத இனம் இல்லையே’ என்ற வரியைத் தொடர்ந்து, ஒரு சிறு கால இடைவெளி கூட இல்லாமல், ‘என் மேனி உனதன்றி எனதில்லையே’ என்று வருவது சிறப்பு எனினும், முதல் சரணத்திலும் இவ்வாறே வருவதால், இது தற்செயலாக அமைந்தது என்றுதான் கருத வேண்டும். ஒரு தெய்வீக இசை அமைப்பில், இது போன்ற தற்செயலான ஆச்சரியங்கள் அமைவதில் வியப்பில்லை.

நாயகியின் இந்த வரிசைகளைக் கேட்டதும், நாயகனுக்கு உற்சாகம் பிறந்து விடுகிறது. காதலியுடன் இணைவதை நினைத்து, நாயகன் பாடத் துவங்கி விடுகிறான்.

இதழோடு இதழ் வைத்து இமை மூடவோ
இருக்கின்ற சுகம் வாங்கத் தடை போடவோ
மடி மீது தலை வைத்து இளைப்பாறவோ
முகத்தோடு முகம் வைத்து முத்தாடவோ
கண்ஜாடை கவி சொல்ல இசை பாடவோ

இவை பழைய (கிராம போன்) இசைத் தட்டுக்களில் இடம்பெற்ற வரிகள் சென்சாரின் வலியுறுத்தலாலோ என்னவோ, திரையில், இந்தச் சரணம் முழுவதுமாக மாற்றப்பட்டது. வாலியின் கற்பனை, உச்சியில் பறந்த வேளையில் நமக்குக் கிடைத்தது ஒரு கூடுதலான சரணம்.

எழிலோடு எழில் சேர்த்து இமை மூடவோ
எனக்கென்று சுகம் வாங்கத் துணை தேடவோ
மலர் மேனித்தனைக் கண்டு மகிழ்ந்தாடவோ
மணக்கின்ற தமிழ் மண்ணில் விளையாடவோ
கண்ஜாடை கவி சொல்ல இசை பாடவோ

பாடல் ஒரு சிறிய ஹம்மிங்குடன் முடிகிறது. இந்த ஹம்மிங் சற்று அழுத்தமாக அமைந்திருப்பதைக் கவனிக்கலாம். நாயகியின் தயக்கமான துவக்கம் முழுமையான ஆனந்தத்தில்முடிவதை ஹம்மிங் மாறுபாடு உணர்த்துகிறது. நாயகியின் சுய அறிமுகம், தன் விருப்பத்தை மெலிதாக வெளிப்படுத்துதல் நாயகனுடன் இணைதல் என்று மூன்று நிலைகளில் சரணங்களை அமைத்திருப்பது வாலியின் சிறப்பு.

பெரும்பாலும், நாயகனுக்கு ஒரு விதமான பல்லவி, நாயகிக்கு சற்றே வேறுபாடான பல்லவி (அனுபல்லவி?) என்று அமைக்கும்மெல்லிசை மன்னார், இந்தப் பாடலில் நாயகன் நாயகி இருவருக்கும்ஒரே விதமான பல்லவியை அமைத்து (வரிகள் வேறுபட்ட போதிலும்) இருவருக்கும் வெவ்வேறு விதமான சரணங்களை அமைத்திருப்பது புதுமை.


இந்தப் பாடலைக் கேட்கும் போது இது காற்றினிலே வரும் கீதம் என்ற உணர்வை ஏற்படுத்துகிறது. ஒரு இனிமையான தென்றல் நம்மைத் தீண்டி விட்டுப் போவது போன்ற உணர்வு!மெல்லிசை மன்னரின் மாணிக்கக் கற்கள் பதித்த வாலியின் வைர வரிகளைக் கொண்டது இந்தப் பாடல்.

சில கண்டிபிடிப்புகள் உருவான கதைகளை அறிந்து கொள்வோம்..!



காலணிகள், பேக்குகள் போன்றவற்றில் உள்ள ‘வல்க்ரோ’ என்ற ஒட்டும் பட்டையைப் பார்த்திருப்பீர்கள். அது எப்படி உருவானது தெரியுமா?
...
ஜார்ஜெஸ் டீ மெஸ்ட்ரால் என்ற பிரெஞ்சு என்ஜினீயர் காட்டுப் பகுதியில் நடந்துகொண்டிருந்தார். அப்போது தனது சாக்ஸில் காட்டுத் தாவரங்களின் விதைகளும், முட்களும் ஒட்டிக்கொள்வதைக் கவனித்தார்.

ஓர் உருப்பெருக்கியை எடுத்துக்கொண்டார். தாவரத்தின் பகுதிகளால் எப்படி இப்படி ஒட்டிக்கொள்ள முடிகிறது என்று ஆராய்ந்தார். அப்போது, துணியில் ஒட்டிக்கொள்ளும் வகையில் அவற்றில் சிறிய முட்கள் இருப்பதைக் கண்டுபிடித்தார். அதே யோசனையைக் கொண்டு, ஒட்டும் பட்டையை உருவாக்க முடியுமா என்று மெஸ்ட்ரால் சிந்தித்தார். அதற்காகப் பல ஆண்டு காலம் உழைத்தார்.

ஒரு முயற்சியாக, இரண்டு துண்டுத் துணிகளைப் பயன்படுத்திப் பார்த்தார். ஒன்றில், நூற்றுக்கணக்கான சிறு கொக்கிகள் இருந்தன. மற்றொன்றில், நூற்றுக்கணக்கான சிறு வளைவுகள் இருந்தன. இரண்டையும் சேர்த்தபோது அவை அட்டகாசமாகப் பற்றிக் கொண்டன. இழுத்தால், இரண்டு துணிகளும் பிரிந்தன. தனது கண்டு
பிடிப்புக்கு ‘வல்க்ரோ’ என்று பெயரிட்ட டீ மெஸ்ட்ரால், 1957-ல் அதற்குக் காப்புரிமை பெற்றார்.

அதற்குப் பிறகு, ஸ்நூக்கர், ஸ்னோசூட் போன்ற சிறப்பு உடைகளிலும் இவை பயன்படுத்தப்பட்டன. விண்வெளி வீரர் உடையிலும், செயற்கை இதயத்திலும் பயன்படுத்தப்படும் பெருமையும் ‘வல்க்ரோ’வுக்கு உண்டு.

சோப்

குளியலறைகள் கட்டப்படும் முன்பே சோப்பு கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், பரவலாகப் பயன்பாட்டுக்கு வந்தது பல ஆண்டுகாலம் கழித்துத்தான்.

ஆரம்பத்தில், எண்ணை, மணலைக் கலந்து தேய்த்துக் குளித்தனர். சிலர், வேலையாட்களை வைத்து மரக்கிளைகளால் உடலைத் தேய்த்துவிடக் கூறினர்.

சோப்புகளில் குறிப்பிடத்தக்கது, 1789-ல் ஆண்ட்ரு பியர்ஸ் கண்டுபிடித்த, கண்ணாடி போன்ற சோப். அடுத்து, மிதக்கும் சோப் போன்ற பலவித சோப்புகள் வந்துவிட்டன.

சக்கரம்

உலகை நகர வைத்த முக்கியக் கண்டுபிடிப்பு, சக்கரம். தற்போது ஈராக் நாடாக உள்ள மெசடோமியாவில் வாழ்ந்த சுமேரியர்கள் கி.மு. 3000 ஆண்டுவாக்கில் சக்கரத்தைக் கண்டுபிடித்ததாகக் கூறப்படுகிறது. சக்கரம் இல்லையேல் இன்றைய உலக இயக்கமே இல்லை.

‘டூத் பிரஷ்’

1400-ல் சீனர்களால் கண்டுபிடிக்கப்பட்டது இது. முதலில் விலங்குகளின் முடியைப் பயன்படுத்தினர். பன்றியின் முடியைக் கூடப் பயன்படுத்தி உள்ளனர். 1938-ல் முதல் நைலான் டூத்பிரஷ் உருவாக்கப்பட்டது.

‘பற்பசை’ எனப்படும் ‘டூத் பேஸ்ட்’, நூறு ஆண்டுகளுக்கும் மேலாகவே புழக்கத்தில் உள்ளது. அதை ஒரு டியூப்பில் அடைத்து விற்கலாம் என்பதை 1892-ல் வாஷிங்டன் ஷெப்பீல்டு என்ற பல் மருத்துவர் கண்டுபிடித்தார்.

எப்டித்தான் திருடுறாங்களோ..? - இணையத்தில் வெளியான வாலு பாடல்கள்..!



சிம்பு, ஹன்சிகா நடிப்பில் மிக நீண்டகாலமாக உருவாகிவரும் வாலு திரைப்படத்தின் ஆடியோ திருட்டுத்தனமாக இணையத்தில் வெளியாகியுள்ளதால் வாலு படக்குழு கடும் வருத்தத்தில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

அறிமுக இயக்குனர் விஜய் சந்தர் இயக்கத்தில் நிக் ஆர்ட்ஸ் எஸ்.எஸ்.சக்ரவர்த்தி தயாரித்துவரும் வாலு திரைப்படம் பல்வேறு பிரச்னைகளைச் சந்தித்துவருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்புக்கள் இடையில் சிலகாலம் நிறுத்தப்பட்டு மீண்டும் தொடங்கியது. தற்பொழுது பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு படப்பிடிப்பு நிறைவடையும் தருவாயில் இருக்கிறது.

இப்படத்தின் இசை வெளியீடு கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இசைத்தட்டுக்களை வெளியிடும் உரிமையைப் பெற்றுள்ள சோனி மியூசிக் நிறுவனம் மேலும் கால அவகாசம் கேட்டதால் இப்படத்தின் இசை வெளியீடு மறுதேதி அறிவிக்கப்படாமல் தள்ளிவைக்கப்பட்டது.

அடுத்தவாரத்தில் வெளியாகும் எதிர்பார்க்கப்பட்டுவந்த இப்படத்தின் ஆடியோ திடீரென இணையத்தில் திருட்டுத்தனமாக வெளியாகியிருப்பதால் படக்குழுவும், சிம்பு ரசிகர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

 இப்படத்தின் அதிகாரப்பூர்வ இசை வெளியீடு எப்பொழுது நிகழும் என்று குழப்பம் நிலவிவருகிறது.

பெண்களே உங்கள் அக்குள் கருமையாக இருக்கின்றதா..? கவலை வேண்டாம்..!



அக்குள் கருமையை இயற்கை முறையில் போக்குவதற்கு என்ன செய்ய வேண்டுமென்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

01. எலுமிச்சை

அக்குளில் உள்ள கருமையைப் போக்குவதற்கு எலுமிச்சை ஒரு சிறந்த பொருள். ஏனெனில் அதில் ப்ளீச்சிங் தன்மை இருப்பதால், எலுமிச்சையைக் கொண்டு தினமும் அக்குளில் தேய்த்து, ஊற வைத்து கழுவினால், அக்குளில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, அக்குள் வெள்ளையாவதோடு, அக்குள் துர்நாற்றத்தில் இருந்து விடுபடலாம்.

02. மஞ்சள், தயிர்

மஞ்சள் மற்றும் தயிரில் இயற்கையாகவே ப்ளீச்சிங் தன்மை நிறைந்துள்ளது. எனவே சருமத்தில் உள்ள கருமையைப் போக்க, மஞ்சளை தயிரில் கலந்து, அக்குளில் தேய்த்து ஊற வைத்து கழுவினால், அக்குள் கருமையை நிச்சயம் போக்கலாம்.

03. தயிர், எலுமிச்சை

தயிர் மற்றும் எலுமிச்சை சாற்றை ஒன்றாக கலந்து, அக்குளில் தடவி 10 நிமிடம் ஸ்கரப் செய்து, குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும். இந்த முறையை தொடர்ந்து வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

04. வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காயை அரைத்து 1/2 கப் சாறு எடுத்து, அதில் சிறிது உருளைக்கிழங்கை அரைத்து கலந்து, அக்குளில் தடவி சிறிது நேரம் ஸ்கரப் செய்து, 10-15 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால், நல்ல வித்தியாசம் தெரியும்.

05. சந்தனப்பவுடர், பால்

சந்தனப் பவுடரை பால் ஊற்றி பேஸ்ட் போல் செய்து, அதில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, அக்குளில் தடவி காய வைத்து, குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும். இதனை வாரத்திற்கு 2-3 முறை செய்தால், அக்குள் வெள்ளையாகும்.

06. குங்குமப்பூ

குங்குமப்பூவை பாலில் ஊற வைத்து, அதனை அக்குளில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, ஈரமான பஞ்சு கொண்டு துடைத்து, பின் நீரில் கழுவ வேண்டும். இந்த செயலை தினமும் செய்து வந்தால், அக்குளில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கி, அக்குள் வெள்ளையாகிவிடும்.

07. கடலைமா, பால், மஞ்சள்

கடலைமா, பால், மஞ்சள் ஆகியவற்றை கலந்து பேஸ்ட் போல் செய்து, குளிக்கும் முன் அக்குளில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளித்தால், அக்குள் கருமை நீங்கிவிடும்.

08. உருளைக்கிழங்கு

இது மிகவும் எளிமையான ஒரு ஸ்கரப். அதற்கு உருளைக்கிழங்கை அரைத்து, அதனை தினமும் காலையில் அக்குளில் தடவி ஸ்கரப் செய்து, பின் குளித்தால், கருமையான அக்குளில் இருந்து விடுபடலாம். 

இரும்புச்சத்து அதிகமுள்ள வெந்தயக் கீரை..!



இந்திய பாரம்பரிய மருத்துவத்தில் வெந்தயக் கீரைகள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. மருந்துப் பொருளாக மட்டுமில்லாமல் சமையல் பதார்த்தங்களிலும் வெந்தயக் கீரையின் பங்கு உண்டு. அதிலுள்ள சத்துக்களை பட்டியல் போடுவோமா...

* வெந்தயக் கீரைகள் ஈரபதமிக்க நிலங்களில் செழித்து வளரக் கூடியவை. இது பேப்பேசியே என்ற தாவர குடும்பத்தை சேர்ந்தது. இதன் அறிவியியல் பெயர் 'ட்ரிகோனலீலா பியோநம் கிரேசியம்'.

* வெந்தயக் கீரைகள் இரும்புச் சத்துப் பொருட்களை அதீத அளவில் கொண்டு உள்ளன. இரும்புச் சத்துப் பொருட்கள் உடலில் ஏற்படும் ரத்தசோகை நோயான அனீமியா வராமல் தடுப்பதோடு, உடலுக்கு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது.

* ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவுகளை சீரான விகிதத்தில் பாதுகாக்க வெந்தயக்கீரை உதவுகிறது.

* 'வைட்டமின்-கே' சத்துப் பொருட்கள் கணிசமான அளவில் நிறைந்துள்ளன. இவை கண்களின் பார்வைத் திறனை அதிகரிப்பதோடு,பார்வைக் கோளாறுகளை சரி செய்யவும் உதவுகின்றன.

* வெந்தயக் கீரைகளை தினசரி உணவில் சேர்ப்பது உடலில் ஏற்படும் புரதக்குறைபாட்டை போக்கி வலிமை சேர்க்கும்.

* நிட்டானிக் அமிலம் இதில் உள்ளது. இது தலைமுடி உதிர்தல், தலைமுடி வலுவின்மை போன்ற குறைபாடுகளை போக்கும் திறன் பெற்றது.

* உடலுக்கு கேடு விளைவிக்கும் கூடுதல் கொழுப்புப் பொருட்களை செரிக்க செய்யும் ஆற்றல் வெந்தயக் கீரைக்கு உண்டு. இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் உடலில் கொழுப்பின் அளவு சீராக பராமரிக்கப்படுகிறது.

* பெண்களுக்கு உடல் ரீதியாக பல்வேறு நன்மைகள் கிடைக்கச் செய்கிறது வெந்தயக்கீரை. குறிப்பாக கர்ப் பிணி பெண்களுக்கு தாய்ப்பாலை பெருக்கவும், பிரசவ கால நன்மைக்கும் இவை பெரிதும் உதவுகின்றன.

* பொட்டாசியம், சோடியம் போன்ற சத்துப் பொருட்கள் குறிப்பிட்ட அளவுகளில் இருப்பதால் மாரடைப்பு ஏற்படாமல் தடுக்கிறது.

* வெந்தயக் கீரைகள் உணவு செரிமானத்தில் பெரும் பங்கு வகிக்கின்றன. உட்கொள்ளும் உணவினை சீராக செரிக்க செய்யவும், குடலில் தங்கியுள்ள ஆக்சிஜன் பிரீரேடிக்கல் நச்சுகளை வெளியேற்றவும் இவை பயன்படுகின்றன.

* கீரையில் உள்ள புரதப்பொருட்களான சாப்போனின், மியூக்கலேஜ் போன்றவை பெருங்குடல் புற்றுநோய் வராமல் தடுக்க வல்லது.