Monday 17 March 2014

அஜித்தின் பாப்புலாரிட்டி நீர்க்குமிழியா..?



இப்போது சமீபகாலமாக இணையதளத்திலும் பத்திரிகைகளிலும் அஜித்துக்கு அபரிமிதமான செல்வாக்கு இருப்பது போல் காட்டப்படுகிறது. அது நிஜமாகவும் இருக்கலாம். ஆனால் இப்போது இவருக்கு வந்திருக்கும் இந்த திடீர் செல்வாக்கு ரஜினி, எம்.ஜி.ஆர் போல் ‘திரையில் முகம் காட்டினாலே படம் ஓடிவிடும்’ என்பது போன்ற செல்வாக்கா? ஒரு மிகச்சிறிய எனக்குத்தெரிந்த விதத்தில் அஜித்தின் செல்வாக்கை அனுகியிருக்கிறேன். பார்க்கலாம்..

சுமார் எட்டு வருடங்களுக்கு முன், அதாவது அஜித்தின் ஜனா என்கிற படம் ரிலீசான மே 1, 2004, விஜய்யின் கில்லி ரிலீசான ஏப்ரல்17, 2004ம் நாளில் இருந்து ஆரம்பிப்போம். வில்லன் என்கிற வெற்றிப் படத்துக்குப் பிறகு கார் ரேஸ் மோகத்தில், அதில் சாதிக்க வேண்டும் என்கிற வெறியில் சினிமாவை கொஞ்ச காலம் மறந்து இருந்தார் அஜித். ரசிகர்களின் வற்புறுத்தலுக்காகவும் தன் கார் ரேஸ் செலவுக்காகவும் சரியா கதையை தேர்ந்தெடுக்காமல், ‘ஆஞ்சனேயா’, ‘ஜனா’ என்று வரிசையாக சறுக்க ஆரம்பித்தார். வில்லன் படம் கொடுத்த வெற்றியை அவரால் தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை.

இந்த நேரத்தில் தான் வசீகரா, பகவதி என்று மிகவும் சுமாரான படங்கள் கொடுத்துக்கொண்டிருந்த விஜய் ‘திருமலை’ என்று ஒரு ஹிட் கொடுத்தார். சொல்லப்போனால் அவர் தந்தை, விஜய்க்கு ஒரு பாராட்டு விழா நடத்தினார், தொடர்ந்து 4 படங்கள் 100நாட்களை கடந்து ஓடின என்று (ப்ரண்ட்ஸ் - 175 நாள், குஷி - 150 நாள், ப்ரியமானவளே - 125 நாள், பத்ரி - 100 நாள்).. அதற்குப் பின் தான் விஜய் சறுக்க ஆரம்பித்தார்

வசீகரா, தமிழன், புதிய கீதை என்று.. கட்டாய வெற்றி தேவை என்கிற சூழலில் அவருக்கு இயக்குனர் ரமணா மூலம் அமைந்தது திருமலை வெற்றி. திருமலை ரிலீஸ் ஆன அதே நாளில் வந்தது தான் ஆஞ்சநேயா.. ‘வில்லன்’ பட வெற்றியை அஜித்துக்கு தக்க வைத்துக்கொள்ளத்தெரியவில்லை. அப்போது அவர் பேட்டிகளும் மிகவும் ‘ரா’வாக இருக்கும். ’நான் தான் அடுத்த சூப்பர் ஸ்டார், ‘எனக்கு சினிமாவ விட ரேஸ் தான் முக்கியம்’ என்று மனதில் பட்டதை எல்லாம் சொல்லி செமத்தியாக தன் இமேஜை கெடுத்துக்கொண்டார். இது நடந்தது 2003 தீபாவளியில்.

பின் 2004 சித்திரையில் தான் அந்த மாபெரும் வெற்றியும் படு மோசமானா தோல்வியும் நடந்தன. விஜய்க்கு கில்லி, அஜித்துக்கு ஜனா. ”ஜனா - the power machine னு பேர் வச்சதுக்கு பதிலா, ஜனா - the xerox machineனு வச்சிருக்கலாம்” என்று ஒரு பத்திரிகை ஓபனாகவே அசிங்கப்படுத்தியது. எல்லா சேனல் பத்திரிகைகளில் விஜய் பேட்டி, கில்லி டீம் பேட்டி என்று கலைகட்ட ஆரம்பித்தது.

அஜித்தை சீண்டுவாரில்லை. அதே வருடத்தில் விஜய்க்கு உதயா என்றொரு ஃப்ளாப் வந்தாலும், கில்லியின் வெற்றி அதை மறைத்துவிட்டது. வருட கடைசியில் ‘மதுர’ படம் வந்து ரசிகர்களை திருப்திப்படுத்தி ஓரளவு வெற்றியும் பெற்றது. ஆனால் அஜித்துக்கு அந்த வருட தீபாவளிக்கு வந்த ‘அட்டகாசம்’ ரசிகர்களை கூட சற்று ஏமாற்றிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

இந்த நேரத்தில் தான் விஜய்க்கு என்று ஒரு மாஸ் உருவானது. அவர் என்ன நடித்தாலும் படம் ஹிட் என்கிற பெயர் வந்தது. 2005ல் அவர் ஹீரோவாக நடித்து வெளிவந்த 3 படங்களும் (திருப்பாச்சி, சச்சின், சிவகாசி) வெற்றி பெற்றன. சச்சின் சுமாரான வெற்றி தான்.

ஏன்னா அது சந்திரமுகியோடு போட்டி போட்டது.  அஜித் நடித்து இந்த வருடம் மிகப்பெரும் எதிர்பார்ப்போடு வந்த “ஜீ” அட்டர் ஃப்ளாப் ஆனது. தொடர்ந்து இரண்டு வருடங்களாக அஜித்துக்கு ஒரு படம் கூட ஹிட் இல்லை.

விஜய்க்கு கிட்டத்தட்ட அனைத்துப்படங்களும் ஹிட். அடுத்த ரஜினி, வசூல் மன்னன் என்றெல்லாம் பேச ஆரம்பித்துவிட்டார்கள். அஜித்துக்கு எப்பவுமே இருக்கும் “ஓப்பனிங் கிங்” என்கிற பட்டம் கூட ஆட்டம் காண ஆரம்பித்தது.

2006ல் இருவரும் தைப்பொங்களில் பரமசிவன், ஆதி என்று மோதினார்கள். இரண்டு படங்களுமே தோல்வி என்றாலும், ஆதியை விட பரமசிவன் நன்றாக ஓடியது. 2006ன் ஆதியே சறுக்கியதால் விஜய் அந்த வருடம் அடுத்து படம் நடிக்காமல் காத்திருந்தார். அஜித்துக்கு இதே வருடத்தில் வந்த திருப்பதி ஏ.வி.எம். என்கிற பேனர் தயாரித்த காரணத்தால் 100நாட்கள் ஓட்டப்பட்டது. வருமா வராதா என்று காக்கவைத்த ‘வரலாறு’ தீபாவளிக்கு வந்து சக்கை போடு போட்டது. தான் ஒரு அஜித் ரசிகன் என்று கூறவே வெட்கப்பட்டவர்கள் இப்போது தான் கொஞ்சமாக வெளியே தைரியமாக சொல்ல ஆரம்பித்தார்கள். இந்த முறையும் அஜித் சறுக்கும் போது கே.எஸ். ரவிக்குமார் தான் வெற்றி கொடுத்து காப்பாற்றினார்.

ஆனால் அஜித்தால் இந்த வெற்றியையும் தக்க வைக்க முடியவில்லை. 2007 தைப்பொங்கலில் அஜித் ஆழ்வாராக வந்து, வந்த சுவடே தெரியாமல் போய்விட்டார். விஜய் போக்கிரியாக வந்து ரெக்கார்ட் பிரேக் ஹிட் கொடுத்தார்.

இந்த சூழலில் தான் சூர்யா வரிசையாக கஜினி, ஆறு, சில்லுனு ஒரு காதல், வேல் என்று வித்தியாசமான கதைகளில் நடித்து ’விஜய்க்கு நான் தான் சரியான போட்டி’ என்று வேகமாக முன்னேறினார். அஜித்தை அவர் ரசிகர்களைத்தவிர எல்லாரும் மறந்து விட்டார்கள். விஜய் மேலும் “ஒரே மாதிரி நடிக்கிறார்” என்கிற குற்றச்சாட்டும் வலுக்க ஆரம்பித்தது. 2007ல் பொங்களுக்கு வந்த வேல் என்கிற ஒரே ஒரு படத்தில் நடித்தாலும் அந்த வருடம் முழுக்க தாங்குவது போன்ற ஹிட்டை கொடுத்தார் சூர்யா. விஜய் தன் நடிப்புத்திறமையை (!!!!) காட்ட அழகிய தமிழ் மகன் படத்தில் நடித்தார். விஜய்யின் “என்ன நடித்தாலும் ஓடும்” என்கிற பிம்பம் இந்த இடத்தில் தான் உடைய ஆரம்பித்தது.

அஜித் வருடத்தின் முடிவில் பில்லா என்னும் பிளாக்பஸ்டர் கொடுத்து தப்பித்துவிட்டார். ஆனால் விஜய் அழகிய தமிழ் மகன் என்கிற ஒரே படத்தின் மூலம் எஸ்.எம்.எஸ் ஜோக் வரை வம்புக்கு இழுக்கப்பட்டார்.

2008, 2009, 2010ல் வரிசையாக குருவி, வில்லு, வேட்டைக்காரன், சுறா என்று விஜய் அடுத்தடுத்து ஃப்ளாப்களை கொடுத்து, ஒரு காலத்தில் அஜித் ரசிகர்கள் தங்களை அஜித் ரசிகன் என்று சொல்லிக்கொள்ள எப்படி கூச்சப்பட்டார்களோ, கிண்டலுக்கு பயந்தார்களோ அதே நிலை இப்போது விஜய்க்கு வந்துவிட்டது. அதுவும் எந்த ஒரு நடிகனும் தன்னுடைய 50வது படத்தை சுறா மாதிரி கொடுக்க மாட்டான். அஜித் வழக்கம் போல பில்லா வெற்றியை தக்க வைக்க முடியாமல் ஏகன், அசல் என்று ஃப்ளாப் கொடுத்தாலும், அவருக்கு என்று இருக்கும் கூட்டம் தைரியமாகவே இருந்தது. ஏன்னா, விஜய்யும் இப்போ ஃப்ளாப் லிஸ்டில் தானே இருக்கிறார்.

இரு முக்கிய ஹீரோக்கள் தொடர்ந்து ஃப்ளாப் கொடுத்தாலும் “என்ன நடிச்சாலும் ஹிட்டு ஆகும்” என்கிற இடம் ஒருவருக்கு போய்த்தானே ஆக வேண்டும். அது இப்போது இருந்தது சூர்யா கையில். விஜய்க்கு எப்படி 2004, 2005 உச்சத்தில் இருந்ததோ சூர்யாவுக்கு 2008ல் இருந்து 2010 வரை அதே உச்சம் இருந்தது.

விஜய் படத்துக்கு அஜித் ரசிகர்களும் அஜித் படத்துக்கு விஜய் ரசிகர்களும் பெரும்பாலும் போக மாட்டார்கள். ஆனால் அஜித், விஜய் இருவரின் ரசிகர்களும் சூர்யா படத்துக்கு போனார்கள். சூர்யாவிற்கென்று தனிப்பட்ட ரசிகர் பட்டாளம் கம்மி என்றாலும் அவருக்கு,  குடும்ப ரசிகர்கள் நிறைய இருந்தனர். குடும்பம் குடும்பமா அவர் படத்தை பார்க்க ஆரம்பித்தனர். அவரும் வாரணம் ஆயிரம், அயன், ஆதவன், சிங்கம் என்று பாக்ஸ் ஆபிஸை சிதறடித்துக்கொண்டிருந்தார்.


ஆனாலும் சூர்யாவுக்கும் அந்த “என்ன நடிச்சாலும் ஹிட்டு ஆகும்” என்கிற நீர்க்குமிழ் உடைய ஆரமபித்தது. அவரே அதற்கு காரணம். எல்லா வாரமும் எதாவது ஒரு பத்திரிகையில் பேட்டி, ஊறுகாய், தேங்காய் எண்ணெய், துணிக்கடை என்று எதையும் விட்டு வைக்காமல் விளம்பரம், தன்னடக்கம் என்கிற பெயரில் சுயபுகழ்ச்சி என்று வழமையான ஒரு நடிகன் தான் தானும் என்பதை நிரூபிக்க ஆரம்பித்தார். ”சூர்யா முகம் போர் அடிக்க ஆரம்பித்துவிட்டது”,  என்று மக்களே வெளிப்படையாக பேச ஆரம்பித்துவிட்டார்கள். சிங்கம் படத்துக்குப்பிறகு அவர் 2011 தீபாவளிக்கு நடித்த ஏழாம் அறிவு எதிர் பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

சரி, இப்போது சூர்யாவிடமும் “என்ன நடிச்சாலும் ஹிட்” பட்டம் இல்லை. அஜித்தும் ஃப்ளாப் கொடுத்துவிட்டார். விஜய், காவலன் என்று ஒரு சுமாரான வெற்றிப்படத்தில் நடித்திருந்தாலும், வேலாயுதம் மறுபடியும் பழைய மாதிரி எஸ்.எம்.எஸ் ஜோக்குகளுக்கு அவரை ஹீரோவாக்கியது. அந்தப்பட்டம் அடுத்த லெவலில் இருக்கும் விக்ரமுக்கோ, சிம்புவுக்கோ தனுஷுக்கோ போகாமல் யாருமே எதிர்பாரா வண்ணம் சூர்யாவின் தம்பி கார்த்திக்கு சென்றது.

கார்த்தி நடித்திருப்பது இது வரை ஆறே ஆறு படம் தான். ஆனாலும் தன்னுடைய மூன்றாவது படத்தில் இருந்தே அவர் என்ன நடித்தாலும் ஓடும் என்கிற பிம்பம் வர ஆரம்பித்துவிட்டது. மக்களுக்கும் அவரின் அசால்ட்டான அலட்டல் இல்லாத நடிப்பு மிகவும் பிடித்துப்போய் விட்டது. 2011ல் அவர் நடித்த சிறுத்தை அனைவரையும் கவர்ந்து அவரையும் முன்னணி நடிகர்கள் லிஸ்ட்டில் சேர்த்தது.

கிட்டத்தட்ட தன் அண்ணன் செய்த அதே தவறை தம்பி கார்த்தியும் செய்ய ஆரம்பித்தார். எல்லா மேடைகளிலும் தோன்றி “என்ன மாமா சௌக்கியமா?” என்று நியூஸ் வாசிக்கும் பெண் “இன்றைய முக்கியச்செய்திகள்” என்று சொல்வதை போல் திரும்ப திரும்ப சொல்லி வந்தார். பேச்சிலும் கொஞ்சம் அலட்டல் தெரிய ஆரம்பித்தது. முன்னணியில் இருக்கும் நான்கு நடிகர்களுக்கும் (அஜித், விஜய், சூர்யா, கார்த்தி) 2011 ஓரளவு நல்ல வருடமாகவே இருந்தது. கார்த்தி வருட ஆரம்பத்தில் சிறுத்தை நடித்திருந்தார். ஆனால் வருடத்தின் பின் பகுதியில் வந்த மற்ற மூவரின் படங்கள் சிறுத்தையின் ஆக்ரோஷத்தை குறைத்தன. அதுவும் அஜித்தின் மங்காத்தா, எந்திரனுக்கு அடுத்தபடியாக வசூலில் சாதனை புரிந்தது.

விஜய், சூர்யா, கார்த்தி என்று அனைவரும் மறக்கடிக்கப்பட்டு எங்கு பார்த்தாலும் “தல”, “அஜித்” என்றே எல்லா பக்கமும் பேச்சுக்கள் வந்தன. மங்காத்தாவில் அஜித்தின் இமேஜ் பார்க்காத நடிப்பும், அவரின் இயல்பான உண்மையான சுபாவமும் பலருக்கும் பிடித்திருந்தது. அஜித் என்கிற நடிகனை விட பலரும் அஜித் என்கிற மனிதனை ரசிக்க ஆரம்பித்திருந்தார்கள். இவை அனைத்திற்கும் மூல காரணம் ஃபேஸ்புக் மற்றும் ப்ளாக் தான்.

பலரும் அஜித்தைப் பற்றி அதிரிபுதிரியாக தங்களுக்குத்தெரிந்த உண்மைகளை பேச ஆரம்பித்தார்கள். அதை ஒவ்வொருவரும் share செய்து share செய்து பரவலாக அனைவருக்கும் அவரின் குணம் புரிந்தது. இது போக கலைஞரின் பாராட்டு விழாவில் தைரியமாக “உங்க functionக்கு வரச்சொல்லி எங்கள மிரட்டுறாங்க ஐயா” என்று அவர் பேசியது, இத்தனை நாள் அவர் மீது காரணமே இல்லாமல் வெறுப்பை உமிழ்ந்த பத்திரிகைகளுக்கு கூட அவரை பாராட்ட ஒரு காரணமாய் அமைந்தன. இது அவருக்கும் பொது மக்களிடம் இருந்து கூட மிகுந்த வரவேற்பை பெற்றுத்தந்தது.

ரசிகர் மன்றத்தை கலைத்தது, அல்டிமேட் ஸ்டார் பட்டத்தை துறந்தது, பேட்டி கொடுக்க மாட்டேன், விழாக்களில் கலந்து கொள்ள மாட்டேன், படத்தை விளம்பரப்படுத்தி பேச மாட்டேன் என்று அவர் அடம் பிடித்தது, என்று அவர் செய்யும் ஒவ்வொன்றும் பொது மக்களிடம் அவரை உண்மையாக கொண்டு சேர்த்தன. ஒரு காலத்தில் திமிராக இருக்கிறார் என்று அவரை வெறுத்தவர்கள், இன்று அதே திமிருக்காக அவரை விரும்ப ஆரம்பித்துவிட்டனர். அஜித் என்று பேசினால் அவரைப் பிடிக்காதவர்கள் கூட அவரின் நல்ல பண்புகளைப் பற்றி பேசும் சூழல் தான் கடந்த ஒன்னரை ஆண்டுகளாக இருந்து வருகிறது.

இது வரை அவரின் கேரியரில் பார்த்தால், “என்ன நடித்தாலும் ஹிட்டு” என்கிற வட்டத்திற்குள் அவர் வந்ததே இல்லை. ஆனால் எப்போதும் முன்னணி நடிகர் லிஸ்டில் இருந்து கொண்டே இருப்பார். அவரின் படங்கள் தொடர்ந்து ப்ளாப் ஆனாலும், அவரின் அடுத்த படத்துக்கு முந்தைய படத்தை விட அதிக எதிர்ப்பார்ப்பு இருக்கும். அது அஜித் என்கிற நடிகனுக்காக இல்லை. அஜித் என்னும் நிஜ வாழ்க்கையில் நடிக்கத்தெரியாத ஒரு உண்மையான மனிதனுக்காக. பில்லா 2 ட்ரைலர் வெளியிட்ட ஒரே நாளில் 3லட்சம் ஹிட்ஸ் வந்துள்ளது. எந்திரனுக்கு கூட இப்படி ஒரு ரெஸ்பான்ஸ் இருந்ததா என்று எனக்கு தெரியவில்லை.

 ஒரு வேளை படம் ஓடாமல் போனாலும் யாரும் முன்பு மாதிரி அஜித்தை குறை சொல்லவோ கிண்டல் செய்யவோ மாட்டார்கள். அவரின் பக்குவம் மக்களுக்கும் ரசிகர்களுக்கும் கூட வந்துவிட்டது. அஜித், படமே நடிக்காமல் போனாலும் அவர் மீது மக்களுக்கு இதே அபிப்பிராயம் தொடரும். அவர் நடிகன் என்கிற படியை தாண்டி பக்குவமான மனிதன் என்கிற இடத்தில் அனைவரும் ஆதர்சமாக பார்க்கும் ஒரு இடத்தில் இருப்பதாகவே கருதுகிறேன். அதனால் மற்ற நடிகர்களுக்கு இருந்தது போல், இவருக்கு இப்போது வந்திருக்கும் பாப்புலாரிட்டி “நீர்க்குமிழி” இல்லை. அவரின் எதிர்நீச்சலுக்கு கிடைத்த வைர கிரீடம். அதை யாராலும் உடைக்கவும் முடியாது, அழுக்குப்படுத்தவும் முடியாது..

அஜித் ஆரம்பத்தில் இருந்து இப்போது வரை தன் குணத்தையோ செயல்பாடுகளையோ மாற்றிக்கொண்டதே இல்லை. ஆனால் மக்களை அவர் மாற்றிவிட்டார். தன்னுடைய வெளிப்படையான பேச்சிற்காக கிண்டலும் அசிங்கமும் செய்த மக்களே, இன்று அதே வெளிப்படையான பேச்சுக்காவே அவரை ரசிப்பது, நிஜமாகவே அஜித் என்ற மனிதனுக்கு கிடைத்திருக்கும் மாபெரும் வெற்றி. ஒரு படம் வெற்றி அடைவதை விட, ஒரு மனிதன் என்கிற அளவில் அஜித் பெற்றிருக்கும் இந்த வெற்றி இதுவரை சம காலத்தில் எந்த நடிகருக்கும் கிடைக்காதது. அஜித் ரசிகன் என்று சொல்லிக்கொள்வதில் பெருமை அடைகிறேன். நீ எப்பவும் டாப் தான் ‘தல’....

பால் நடிகையை ஓரங்கட்டும் இயக்குனர்...!



தமிழ் மற்றும் தெலுங்கில் ஓரளவு நல்ல அறிமுகத்தைப் பெற்றிருக்கும் நடிகை அமலா பால் வசம் தற்பொழுது ஓரிரு படங்களே இருப்பதால் பிரபல நடிகர் மற்றும் இயக்குனர்களிடம் வாய்ப்பினைக் கேட்டுவருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


முன்பே தமிழுக்கு அறிமுகமாகியிருந்தாலும் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான மைனா திரைப்படத்தின் மூலம்தான் தமிழக மக்களிடம் ஓரளவு
பரீச்சயமானார் அமலா பால்.


அதன் பிறகு இவர் நடிப்பில் வெளியான சில படங்கள் பெரிதாகப் பேசப்படாவிட்டாலும், இளையதளபதி விஜயுடன் இவர் நடித்த தலைவா மற்றும் சமீபமாக வெளியாகியிருக்கும் நிமிர்ந்து நில் ஆகிய திரைப்படங்கள் இவருக்கு பெரும் பெயரைத் தந்துள்ளன.


தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்துவந்தாலும் தற்பொழுது தனுஷுடன் இவர் நடிக்கும் வேலையில்லாப் பட்டதாரி மற்றும் மலையாளப்படமான லைலா ஓ லைலா ஆகிய இரண்டு படங்கள்தான் இவர் கைவசம் இருக்கின்றன.


 இதனால் பிரபல இயக்குனர்கள் மற்றும் நடிகர்களிடம் புதிய படங்களுக்கான வாய்ப்புக்களைக் கேட்டு தூதனுப்பிவருவதாகக் கிசுகிசுக்கள் பரவியுள்ளன.


சமுத்திரக்கனி இயக்கத்தில் ஜெயம் ரவியுடன் இவர் நடித்த நிமிர்ந்து நில் திரைப்படத்தினைத் தொடர்ந்து மீண்டும் சமுத்திரக்கனி இயக்கும் படத்தில்
இரட்டை வேடத்தில் நடிக்கவிருப்பதாகவும் சமீபத்திய செய்திகள் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தனக்குத் திருமணம் நடக்குமா இல்லையா என்று கூடத் தெரியவில்லை - புலம்பும் சிம்பு..!



சமீபமாக தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றுக்குப் பேட்டியளித்துள்ள சிம்பு தனது நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் குறித்த மிகவும் தெளிவான விளக்கங்களை அளித்துள்ளார்.

ஹன்சிகாவுடனான காதல் முறிவு மற்றும் நயன்தாராவுடன் மீண்டும் இணைந்து நடிப்பது குறித்து ஊடகங்களிலும், பொதுமக்கள் மத்தியிலும் நிலவிவரும் கருத்துக்கள் மற்றும் கேலிகளுக்கும் பதிலளித்த சிம்பு தனக்கு சினிமாவில் நடிக்கும் ஆர்வம் குறைந்துவருவதாகவும் தெரிவித்தார்.

சினிமாவில் நடிப்பதை விட்டுவிட்டு, சினிமாவைத் தாண்டி மக்களுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் எண்ணம் எழுந்துவருவதாகவும்,சினிமாவில் இருந்துகொண்டு தனது எதிர்காலத்தை வீணடிக்கிறேனோ என்ற எண்ணம் தற்பொழுது மேலோங்கி வருவதாகவும் கூறினார்.

மேலும் தனக்கு இப்பொழுது போட்டி, பொறாமை மற்றும் கோபம் முதலிய எல்லா உணர்வுகளும் அறவே இல்லை என்றும் இதனாலேயே தன்னால் தனுஷுடன் நட்புடன் பழகமுடிகிறது என்பதையும் தெளிவாகக் கூறியுள்ளார்.

தனது காதல் முறிவுகளைக் குறித்து சமூக ஊடகங்களில் மிகவும் கிண்டலடிப்பதாகக் கூறி வேதனைப்பட்ட சிம்பு, எல்லா விசயங்களிலும் சரியான
முடிவுகளை எடுக்கும் தான் காதல் விசயங்களில் மட்டும் தவறான முடிவுகளை எடுத்துவிடுவதாகவும் வேதனையுடன் கூறினார்.

தனக்குத் திருமணம் நடக்குமா இல்லையா என்று கூடத் தெரியவில்லை என்று கூறிய சிம்பு, ஒருவேளை தான் திருமணம் செய்து கொண்டால், அந்தப் பெண் ஒரு பெண்ணைப் போல இருக்க வேண்டும் என்றும், இக்காலத்துப் பெண்கள் ஆண்களைப் போல நடந்துகொள்கிறார்கள் என்றும் கூறியுள்ளார்.

தற்போதைக்கு தனக்கு மிகவும் நெருங்கிய நண்பனாக அனிருத் மற்றும் பிரேம்ஜி ஆகியோர் இருப்பதாகக் கூறியுள்ள சிம்பு, இன்றைய இளம் தலைமுறை நாயகர்களில் தன்னை மிகவும் கவர்ந்தவராக விஜய் சேதுபதியைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தனது படம் வெளியாகி இரண்டு வருடங்களுக்கும் மேலான பிறகும் தன்னை விடாது பிடித்திருக்கும் தனது ரசிகர்களின் எதிர்பார்ப்பினை இவ்வருடத்தில் வெளியாகும் படங்கள் பூர்த்தி செய்யும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பிரிந்தவர்களை சேர்த்த தல...! தல' டக்கரு டோய்...!



கவுதம் மேனன் - ஹாரிஸ் ஜெயராஜ் மோதல் முடிவுக்கு வரும் என தெரிகிறது. மின்னலே படம் தொடங்கி கவுதம் மேனனின் எல்லா படத்துக்கும் இசையமைத்தார் ஹாரிஸ் ஜெயராஜ்.


திடீரென சென்னையில் ஒரு மழைக்காலம் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மானை ஒப்பந்தம் செய்தார் கவுதம். இது ஹாரிசுக்கு பிடிக்கவில்லை.


இதற்கிடையில் வாரணம் ஆயிரம் படத்தில் பணியாற்றியபோது இருவருக்கும் இடையே பணப் பிரச்னையும் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் மோதிக் கொண்டனர்.


ஒருவரை தாக்கி ஒருவர் கருத்து தெரிவித்து விலகினர். இந்நிலையில் இப்போது இருவரும் சேர்ந்து பணியாற்ற திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அஜீத் நடிக்கும் படத்தை கவுதம் மேனன் இயக்க உள்ளார். இந்த படத்துக்கு இசையமைக்க முதலில் ரஹ்மானிடம்தான் கவுதம் பேசினார். ஆனால் மற்ற படங்களில் ரஹ்மான் பிசியாக இருக்கிறார்.


இதனால் இந்த படத்துக்கு அவர் இசையமைப்பது சந்தேகம் என கூறப்படுகிறது. இதனால் மீண்டும் ஹாரிசுடன் இணைய கவுதம் விரும்புகிறாராம்.


சமீபத்தில் பெரிய ஹிட் எதுவும் தராத ஹாரிசும் கவுதம் படத்தில் அஜீத் நடிப்பதால் அதில் இணைவது மூலம் ஃபாமுக்கு திரும்பலாம் என நினைக்கிறாராம். இது தொடர்பாக இருவர் தரப்பிலும் பேச்சு தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

கோச்சடையான் ரிலீஸ் நாளில் பிறக்கும் குழந்தைகளுக்கு வெள்ளி டாலர்...!



தமிழ்நாடு ரஜினிகாந்த் பொது தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆலோசனை கூட்டம் ஆர்.வி குமாரசாமி திருமணமண்டபத்தில் நடைபெற்றது.


கூட்டத்திற்கு எஸ்.எஸ்.முருகேஷ் தலைமை தாங்கினார், கவுரிகனகு, மாரிமுத்து முன்னிலை வகித்தனர். நடராஜ் வரவேற்று பேசினார்.


தெற்கு மாவட்ட தலைவர் செல்வம், செயலாளர் கார்த்தி, பொருளாளர் நாகேந்திரன், வடக்கு மாவட்ட தலைவர் தென்றல் செயலாளர் சுதாகர், பொருளாளர் தங்கராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


இக்கூட்டத்தில் காந்தி வேடம், ரஜினி வேடம் அணிந்து மேடையில் தொண்டர்கள் தோன்றினர். 200க்கும் மேற்பட்டவர்கள் முகத்தில் ரஜினியின் மாஸ்க் அணிந்திருந்தனர்.


கூட்டத்தில் கோச்சடையான் திரைப்படத்தை வரவேற்கும் வகையில் பிரமாண்டமான ரதம் தயாரித்து அதை தமிழகம் முழுவதும் பவனி வர செய்து கோச்சடையான் திரைப்படத்தை வெற்றி பெற செய்ய வேண்டும்.


திரைப்படம் வெளிவரும் அன்று திருப்பூர் அரசு மருத்துவ மனையில் பிறக்கும் ஆண், பெண் குழந்தைகளுக்கு ரஜினிகாந்த் படம் பொறித்த வெள்ளி டாலர்களை வழங்குவது.


கோச்சடையான் திருட்டு சி.டி வெளிவராமல் தடுக்க ஆண், பெண் கொண்ட திருப்பூர் மாவட்டம் முழுவதும் அமைப்பது என தீர்மானிக்கப்பட்டது. கலைமணி நன்றி கூறினார். 

சிவகார்த்திகேயன் சேட்டைகள்...! சிந்தியுங்கள் தயாரிப்பாளர்களே..?



ஹன்ஷிகா நல்ல நெய்க்குழந்தை மாதிரி கொழுகொழுன்னு இருக்காங்க, எப்படியாவது என்னை ஹன்ஷிகாவுக்கு மேட்ச்சா காட்டணும்னு நெனைச்சு கேமராமேன் சுகுமார் சார் இதுக்குன்னே வெளிநாட்டுக்குப் போய் 20 லைட்டுகளை வாங்கிட்டு வந்தார்.

இதுவரைக்கும் நான் நடிச்ச படங்கள்ல எல்லாம் எனக்கு ஒரே ஒரு அசிஸ்டெண்ட் மட்டும் தான் இருப்பாங்க. நானே கண்ணாடியை பார்த்துட்டு, முடியை களைச்சி விட்டுட்டு, கேமரா முன்னாடி போய் நின்னுடுவேன்.

ஆனா இப்போ பார்த்தா ஒரு 10 பேர் எங்கூடவே வருவாங்க. இவர் யாருன்னு கேட்டா அவர்தான் உங்களோட முடியை டிஸைன் பண்ணுவாருன்னு சொல்வாங்க, அவரு யாருன்னு கேட்டா அவரு தான் உங்க சட்டை பட்டன்களை எல்லாம் கரெக்ட்டா போட்டு விடுவாருன்னு சொல்வாங்க.

அப்போ இவருன்னு யாருன்னு இன்னொருத்தரை கேட்டா உங்களுக்கு மேக்கப் போட்ட பின்னாடி முகத்துல லைட்டாக்கூட ஆயில் வரம பார்த்துப்பாருன்னு சொல்வாங்க. என்னடா இது நம்மளை ”மைக்கேல் ஜாக்சன் பாப்பா மாதிரி” பார்த்துக்கிட்டாங்க. இதையெல்லாம் பார்த்தப்போ எனக்கே நல்லாருக்கேன்னு தோணுச்சு. என்றார்.

சிந்தியுங்கள் தயாரிப்பாளர்களே..?


சிவகார்த்திகேயன் என்ற ஒரே ஒரு ஹீரோவுக்காக சுமார் 50-க்கும் மேற்பட்ட ‘குண்டர்கள்’ சத்யம் தியேட்டரை சூழ்ந்து கொண்டு அடாவடித்தனம் செய்ததால் ஆடியோ பங்ஷனில் பரபரப்பு ஏற்பட்டது.


தமிழ்சினிமாவில் வளர்ந்து வரும் ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார் சிவகார்த்திகேயன். இவரை ஹீரோவாகப் போட்டு சில கோடிகளை செலவழித்தால் போதும். பல கோடிகளை கல்லா கட்டி விடலாம் என்பது தான் தயாரிப்பாளர்களின் பெருங்கனவு.


இதனால் சிவகார்த்திகேயன் கேட்கும் சம்பளம் எவ்வளவு பெரிய தொகையாக இருந்தாலும் அவரை வைத்து படமெடுக்க தயாரிப்பாளர்கள் க்யூவில் நிற்கிறார்கள்.


அதிலும் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் எஸ்.மதன் சிவகார்த்திகேயனை தனது கம்பெனி ஆர்டிஸ்ட்டைப் போலவே ஆக்கி விட்டார். தொடர்ந்து சிவகார்த்திகேயனின் கால்ஷீட்டை மொத்தமாக வாங்கி வைத்துக் கொண்டு அடுத்தடுத்து மினிமம் பட்ஜெட் படங்களை தயாரித்து வருகிறார்.


சிவகார்த்திகேயனை வைத்து மதன் தயாரித்த எல்லா படங்களுமே நல்ல வசூலைக் கொடுத்து வருகிறது. இதனால் சிவகார்த்திகேயனுக்கு சம்பளம் தவிர கார் வாங்கிக் கொடுப்பது, அவரது சொந்த விஷயங்களுக்காக கோடிக்கணக்கில் பணத்தை செலவு செய்வது என்று அவரை அப்படியே வளைத்துப் போட்டிருக்கிறார்.

டைரக்டர் மணி ரத்னத்தை வற்புறுத்திய நடிகை...!



அரவிந்த்சாமி, மது பாலா ஜோடியாக நடித்து 1992–ல் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிய படம் ‘ரோஜா’. மணி ரத்னம் இயக்கினார்.


இந்த படத்தில்தான் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பாளராக அறிமுகமானார். இதன் மூலம் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதையும் பெற்றார். மேலும் பல விருதுகள் இப்படத்துக்கு கிடைத்தன.


‘‘சின்ன சின்ன ஆசை சிறகடிக்க ஆசை’’, ‘‘காதல் ரோசாவே எங்கே நீ எங்கே’’, ‘‘புது வெள்ளை மழை’’, ‘‘தமிழா தமிழா’’, ‘‘ருக்குமணி ருக்குமணி’’ போன்ற இனிமையான பாடல்கள் இதில் இடம் பெற்றுள்ளன.


இந்த படத்தின் 2–ம் பாகத்தை எடுக்க வேண்டும் என்று மதுபாலா வற்புறுத்தி உள்ளார். அவர் கூறியதாவது:–


‘ரோஜா’ படம் தயாரான போது நான் இளம்பெண்ணாக இருந்தேன். அதிகாலை 4 மணி 5 மணி என்றெல்லாம் படப்பிடிப்பு நடந்தது. எதுவும் புரியாமலேயே அப்படத்தில் நடித்தேன். அந்த படம் வெளியான பிறகு எல்லோரும் என்னை ரோஜா என்றே அழைத்தனர்.


பொதுவாக படங்களில் நடிக்கும் நடிகைகளின் கேரக்டர்கள் ஞாபகம் இருப்பது இல்லை. ஆனால் ரோஜா படத்தில் எனது கேரக்டர் மக்கள் மனதில் பதிந்து விட்டது. இதற்காக மணிரத்னத்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.


இந்தியில் டான், கிரிஷ் படங்களின் இரண்டாம் பாகம் வந்துள்ளது. அதுபோல் ரோஜா படத்தின் இரண்டாம் பாகத்தையும் மணிரத்னம் இயக்க வேண்டும். வாயை மூடி பேசவும் என்ற தமிழ் படத்தில் நான் மீண்டும் நடிக்கிறேன்.

தும்மல் வந்தால் அதற்கு வைத்தியம் உங்கள் சுண்டு விரல்தான்..!



நமது உடல் தம்மை தாமே தற்காத்துக்கொள்ள/சுத்தப்படுத்திக்கொள்ள மூக்கு வழியாகவும், வாய் வழியாகவும் நுரையீரலில் உள்ள காற்றை, மிக வேகமாக வெளியேற்றும் ஒரு அற்புதமான செயல்தான் தும்மல்.

மூச்சுக்குழல், நுரையீரல், மார்பில் தேவை இல்லாத பொருட்கள் (தூசிகள், துகள்கள்) நுழைந்தாலோ, சேர்ந்தாலோ ஊடுருவாமல் தடுக்க மார்பு மற்றும் தொண்டை தசைகள் சுருங்கி வாய் வழியாக தும்மல் மூலமாக அவைகள் வெளியேற்றப்படுகின்றன.

நுரையீரலில் இருந்து வெளிப்படும் நாம் போடும் (தும்மல்) காற்று சுமார் நூற்று ஐம்பது கிலோ மீட்டர் வேகத்தில் வெளிப்படும் .

 உள்ளே நுழைந்த தூசிகள், துகள்கள், கிருமிகள் எல்லாம் அந்த காற்றோடு சேர்ந்து வெளியேற்றப்படும். ஆகவே தும்மலை அடக்கக் கூடாது.

ஆனால் அதே சமயத்தில் ஒரு மீட்டிங், திருமணம், ஹோட்டலில் இருந்தாலோ, கைகுழைந்தைகள் அல்லது அதிக நோயினால் பாதிக்கப்படவரை உடல்நலம் விசாரிக்கச் சென்றிருந்தாலோ சிலர் தொடர்ச்சியான தும்மலால் அவதிப்படுவர்...

அம்மாதிரி நேரங்களில் தும்மலை அடக்க நாம் இடதுகை சுண்டுவிரலை வலது கையால் பிடித்து பின்பக்கமாக இழுக்கவும்.(கோலி அடிப்பதுபோல) அப்படி இழுக்கும்போது தும்மல் பத்து, இருபது வினாடிக்குள் கட்டுக்குள் வரும்.

ஆனால் இந்த முறையை அடிக்கடி உபயோகப்படுத்தக் கூடாது.

 ஏனென்றால் நம் உடலில் இருக்கவே கூடாத கழிவுகளை வெளியில் தள்ள நாம் உடலே முயற்சிக்கும் போது அதை தடுத்து நிறுத்தி, நம் உடலை நாமே கெடுத்துக் கொள்ள கூடாது.

அதிகமாக தும்முகிறவர்கள் தும்மலின் காரணம் என்ன என்பதைக் கண்டுபிடித்து மருந்துகள், மாத்திரைகள் துணையின்றி சரி செய்துக் கொள்ள வேண்டும்.

சுண்டுவிரல்தானே அதால என்ன செய்யமுடியும்னு நினைக்காதீங்க.. மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெருசுங்க.... காசா.. பணமா..... முயற்சித்துதான் பாருங்களேன்...

தலையில் நீர்கோர்த்து தலைபாரமா..? - இதைப்படிங்க..!



தலையில் நீர்கோர்த்து கொண்டு அவதிப்படுபவர்களுக்கு ஒரு எளிய வைத்தியம்...

இரண்டு டீஸ்பூன் மஞ்சள் தூளுடன், கால் டீஸ்பூன் அளவு சுண்ணாம்பை

(வெற்றிலைக்கு போடும் சுண்ணாம்பு) குழைத்து நெற்றியிலும், மூக்கின் மீதும்

பத்து போட்டால்.... நன்கு தூக்கம் வருவதுடன், எழும்போது தலையில் நீர்

கோர்த்ததால் உண்டான தலைபாரம் மற்றும் வலியும் போய் விடும்....



மஞ்சள்-சுண்ணாம்பு பத்துக்கும்.... அக்குபஞ்சருக்கும் என்ன தொடர்பு என்று

கேட்காதீர்கள்... வேறு ஒரு தேடலின் போது ஒரு சித்தர் தம்முடைய பாடலில்

பரி பாஷையில் சொல்லி இருந்ததை இங்கே தெளிவாக சொல்லி

இருக்கிறேன்....

அடுத்தடுத்த வெற்றிகள் குவிந்ததும் உஷார் ஆன விஜய் சேதுபதி..!



சினிமாவில் அடுத்தடுத்து வெற்றிகள் கிடைத்தாலும் தனது சம்பளத்தை இன்னும் உயர்த்தாமல் உள்ளாராம் விஜய் சேதுபதி.

 தென்மேற்குப் பருவக்காற்று படம் மூலம் அறிமுகமானவர் விஜய் சேதுபதி. முதல் படத்திலேயே மிகப் பெரிய பாராட்டு கிடைத்தது.

அதற்கு முன் சில படங்களில் துணை நடிகராக நடித்து போராடித்தான் ஹீரோவானார்.

அடுத்து சுந்தர பாண்டியன் படத்தில் நெகடிவ் பாத்திரத்தில் நடித்தார். அந்தப் படம் பெரிய வெற்றியைப் பெற்றது.

அடுத்து வெளியான பீட்சாவில் அவர் ஹீரோ. படம் பிரமாத வெற்றி.

அடுத்தடுத்து அவர் ஹீரோவாக நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம், சூது கவ்வும் போன்ற படங்கள் பாக்ஸ் ஆபீஸில் பெரிய லாபம் பார்த்தன.

இந்த நேரத்தில் அவர் சம்பளம் ரூ 2.5 கோடி என்று கூறப்படுகிறது.

 பொதுவாக இத்தனை வெற்றிப் படங்களை அடுத்தடுத்து கொடுக்கும் ஹீரோக்கள் சம்பளத்தை கணிசமாக ஏற்றிவிடுவார்கள்.

ஆனால் விஜய்சேதுபதி அமைதியாக அதே சம்பளம்தான் வாங்குகிறாராம்.

 இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா பற்றி எதிர்மறை விமர்சனங்கள் வந்தாலும் அந்தப் படம் நன்றாகவே ஓடி லாபம் சம்பாதித்தது.

அடுத்து விஜய் சேதுபதியின் ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் போன்ற படங்கள் வெளியாக உள்ளன.

 இந்தப் படங்கள் வந்த பிறகே, தனது சம்பளத்தை உயர்த்தப் போகிறாராம் விஜய் சேதுபதி.

எல்லாவற்றையும் சரி ஆக்கும் இணையதளம்..!



வாழ்க்கை பிரச்சனைகளை எல்லாம் தீர்த்துவிடும் மந்திர சாவி எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை. ஆனால் , எல்லா பிரச்சனைகளும் தீர்ந்துவிடும் என்ற உணர்வை தரக்கூடிய இணையதளம் இருக்கிறது.          மேக் -எவ்ரிதிங் ஓகே எனும் அந்த தளம் எல்லாம் சரியாகும் என்ற நம்பிக்கையை தருகிறது.

பிரச்சனைகள் வாட்டும் போதோ அல்லது மோசமான மனநிலையில் இருக்கும் போதோ நமக்கு தேவைப்படுவதெல்லாம், ஆறுதல் வார்த்தைகளும், எல்லாம் சரியாகிவிடும் என்ற நம்பிக்கையும் தான்.

இவை இருந்தால் எந்த பிரச்ச்னையையும் எதிர் கொண்டு வெற்றி பெறலாம்.

மேக் -எவ்ரிதிங் ஓகே இணையதளம் இதை தான் செய்கிறது . இந்த தளத்தில் அப்படி என்ன இருக்கிறது ? ஒரு பட்டன் இருக்கிறது.

மாய பட்டன் என்று வைத்துக்கொள்ளுங்களேன். அந்த பட்டன் மீது எல்லாம் சரி செய்யப்பட்டுவிடும் (மேக் -எவ்ரிதிங் ஓகே ) என எழுதப்பட்டிருக்கும்.

கம்ப்யூட்டர் விசைபலகையின் ஒரு விசை போல இருக்கும் அந்த பட்டனை அழுத்தினால் , எல்லாம் சரி செய்யப்பட்டுக்கொண்டிருக்கிறது என்ற வாசகம வரும்.அதன் பிறகு எல்லாம் சரி செய்யப்பட்டு விட்டதாக குறிப்பிடப்படும்.

 அப்படியும் எதுவும் சரியாகவில்லை என்றால், உங்கள் புரிதல் மற்றும் அணுகுமுறையை மாற்றிக்கொள்ளவும் எனும் ஆலோசனை வழங்கபடுகிறது.

எல்லாவ்ற்றையும் சரி செய்து கொள்வது நம்மிடம் தானே இருக்கிறது. எளிமையான இணையதளம். சுவாரஸ்யமானது. சிந்திக்கவும் வைக்ககூடியது.

இணையதள முகவரி; http://www.make-everything-ok.com/

படக்குழுவினரை வெளியேற்றிவிட்டு, ஹீரோவுக்கு மௌத் கிஸ் கொடுத்த இலியானா..!



Student Of The Year என்ற பாலிவுட் படத்தில் அறிமுகமான நடிகர் வருண் தவான்,அடுத்தாக நடிக்கும் படம் Main Tera Hero, இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல நடிகை இலியானா நடிக்கிறார்.

தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பிரபலம் அடைந்த ஒரு ஹீரோயினி ஒரு புதுமுக நடிகருடன் நடிக்க முதலில் தயங்கியதாகவும், ஆனால் படத்தில் இலியானாவின் கேரக்டர் மிகவும் சிறப்பாக இருந்ததால் இந்த படத்தில் நடிக்க அவர் ஒப்புக்கொண்டதாகவும் தெரிகிறது.

சமீபத்தில் இந்த படத்திற்காக ஒரு லிப் லாக் காட்சி மும்பையில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் படமாக்கப்பட்டது. ஒரு பிரபல நடிகையுடன் லிப் லாக் காட்சியில் நடிக்க தயங்கினார் வருண் தவான்.

கூச்ச சுபாவத்தோடு நடித்ததால் முத்தக்காட்சி சிறப்பாக அமையவில்லை என இயக்குனர் அதிருப்தி அடைந்தார்.

 பின்னர் இயக்குனர் உள்பட படக்குழுவினர்கள் அனைவரையும் வெளியேற்றிவிட்டு, ஒளிப்பதிவாளரை மட்டும் வைத்துக்கொண்டு லிப் லாக் காட்சியை  இலியானாவே இயக்கி படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்துள்ளார்.


இந்த படத்தில் நடிகை நர்கீஸ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பீட்ரு விடுறதல இந்த பொண்ண யாரும் ஜெய்க்க முடியாது...! - நீங்களே கேளுங்க...



சினிமாவில் நடித்த சில படங்களிலேயே பெரிய அளவில் பேசப்பட்டவர் நஸ்ரியா. ஆனால் தனுசுடன் நடித்த நய்யாண்டி படத்தில் தொப்புள் சர்ச்சையை ஏற்படுத்தி அவரது இமேஜை டேமேஜ் பண்ணி விட்டனர்.

அதனால் அதன்பிறகு நஸ்ரியாவை வைத்து படம் பண்ண தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் பயந்து ஒதுங்கினர்.

இருப்பினும் காதலில் சொதப்புவது எப்படி படத்தை இயக்கிய பாலாஜி மோகன் மட்டும் தமிழ், மலையாளத்தில் தான் இயக்கியுள்ள வாய் மூடி பேசவும் படத்துக்கு தைரியமாக அவரை புக் பண்ணி படத்தையும் முடித்து விட்டார்.

இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது. அப்போது, படப்பிடிப்பு தளத்தில் நஸ்ரியா இருந்தால் கலகலப்பாக இருக்கும். யாரையும் பாரபட்சம் பார்க்காமல் அனைவருடனும் ஜாலியாக பேசிக்கொண்டேயிருப்பார்.

அந்தவகையில் ஒரு நிமிடம் அவரை பேசாமல் இருக்க வைப்பது நடக்காத காரியம். ஆனால் அப்படிப்பட்டவரையே இந்த படத்தில் அதிகம் பேசாமல் நடிக்க வைத்திருக்கிறேன். அது எனக்கு பெரிய சவாலாக இருந்தது என்றார் டைரக்டர் பாலாஜி மோகன்.

அதையடுத்து நஸ்ரியா பேசும்போது, நான் எப்போதுமே பர்பாமென்சுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளுக்கு முதலிடம் கொடுப்பேன்.

 அந்தவகையில் இந்த படத்தில் என் நடிப்புக்கு தீனி போடும் நல்ல வேடம் கிடைத்தது.

அதனால் இதற்கு முன்பு தமிழில் நான் நடித்து வெளியான நேரம், ராஜாராணி படங்களில் இருந்து மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறேன்.

கூடவே எனது கோ-ஸ்டார் துல்கர்சல்மானுடன் ஏற்கனவே மலையாளத்திலும் ஒரு படத்தில் நடித்திருக்கிறேன்.

இது அவருடன் எனக்கு இரண்டாவது படம். அதனால் அவரை பேலன்ஸ் பண்ணி நடித்திருக்கிறேன் என்று கூறிய நஸ்ரியா, நான் ஸ்பாட்டில் எப்போதும் பேசிக்கொண்டேயிருந்ததாக சொன்னார்கள்.

அது நிஜம்தான். என்னால் வாயை மூடிக்கொண்டு இருக்கவே முடியாது. எப்போதும் கலகலப்பாக இருக்கவே ஆசைப்படுவேன்.

அதோடு என்னை சுற்றியிருப்பவர்கள் மூடியாக இருந்தாலும் அவர்களையும் என்னைப்போன்றே கலகலப்பாக மாற்றி விடுவேன் என்கிறார் நஸ்ரியா.

அப்பாவின் ஆசையை நிறைவேற்றிய ஸ்ருதிஹாசன்...!



சிவாஜிகணேசன்-கமல்ஹாசன் இருவரும் அப்பா மகனாக நடித்த படம் தேவர்மகன்.


இந்த படத்தில் சிவாஜியை போற்றும்படியாக அமைந்த போற்றி பாடடி பெண்ணே என்ற பாடலை சில குழந்தைகளுடன் இணைந்து இளையராஜாவின் இசையில் பாடியவர் ஸ்ருதிஹாசன்.


அதிலிருந்து தொடர்ந்து பல இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடி வந்த ஸ்ருதி, கமல் நடித்த உன்னைப்போல் ஒருவன் படத்தில் இசையமைப்பாளராகவும் பிரவேசித்தார்.


அதையடுத்து நடிகை என்ற அரிதாரத்தை பூசிக்கொண்டபோதும், தொடர்ந்து பின்னணியும் பாடிவரும் ஸ்ருதி, தற்போது அஸ்ஸாமை சேர்ந்த ஜோய் பரூவா என்பவருடன் இணைந்து ஒரு இசை ஆல்பத்தை உருவாக்கியிருக்கிறார்.


பல மொழிகளிலும் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ள இந்த ஆல்பத்திலுள்ள பாடலை தற்போது தமிழ் மற்றும அஸ்ஸாம் மொழிகளில் பாடியுள்ளனர்.


இதில் தமிழில் பாடல் எழுத கமலிடம், ஸ்ருதி கேட்டுக்கொண்டபோது, உடனே எழுதிக்கொடுத்து விட்டாராம்.


ஆக, கமல்ஹாசன், ஸ்ருதிஹாசன், ஜோய்பரூவா ஆகிய மூவர் கூட்டணியில் பிரமாண்டமாக உருவாகியுள்ள அந்த மியூசிக் ஆல்பம், உலக அளவில் ரசிகர்களை கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாம்.

தல, தளபதியோடு மட்டுமே டீல் வைக்கும் ஏ.ஆர்.முருகதாஸ் ....!



'தீனா' படம் மூலம் ஏ.ஆர்.முருகதாஸுக்கு இயக்குநர் அடையாளம் கொடுத்தவர் அஜித். இப்போது அஜித்தின் அடுத்த படத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் கைகோர்க்கப்போகிறாராம்.


முருகதாஸ் தற்போது விஜய் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பிலும், 'துப்பாக்கி'யின் இந்தி ரீமேக்கான 'ஹாலிடே' படத்தை ரிலீஸ் செய்வதிலும் மும்மரமாக இருக்கிறார்.


இதே நேரத்தில் முருகதாஸ் தெலுங்குப் படம் இயக்கப்போவதாகவும் தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. ஆனால், அதெற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தனது அடுத்தபடம் அஜித்துடன் தான் என தெளிவாகக் கூறிவிட்டார் ஏ.ஆர்.முருகதாஸ்.


படத்தின் பெயர் 'தல' எனக் கூறப்படுகிறது. அஜித்திற்கு 'தீனா' படத்தில் தல என்ற பட்டப்பெயர் வைத்தது ஏ.ஆர்.முருகதாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.


தற்போது கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் அஜித் அதனை முடித்துவிட்டு 'தல' படத்தில் ஏ.ஆர்.முருகதாஸுடன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ட்ரைலரில் நம் வாய்யை மூட வைத்தார் இயக்குனர் பாலாஜி மோகன்...!



காதலில் சொதப்புவது எப்படி திரைப்படத்திற்கு பிறகு துல்கர் சல்மான், நஸ்ரியா நடிப்பில் வாய்யை மூடி பேசவும் திரைப்படத்தை இயக்கி வருகிறார் பாலாஜி மோகன்.


குறும்படத்திலே தனது திறமையை காட்டியவர் பாலாஜி பின் வெள்ளித்திரையிலும் அவரது திறமை வெளிப்பட்டதை காதலில் சொதப்புவது எப்படி திரைப்படத்தை வைத்தே தெரிந்து கொள்ளலாம்.


அவரது இரண்டாவது படமான வாயைமூடி பேசவும் திரைப்படத்தின் இசைவெளியீடு நேற்று சத்யம் சினிமாஸில் வைத்து வெளியிட்டுள்ளனர்.


மணிரத்னம், தெலுங்கு நடிகர் ராணா, செல்வராகவன் ஆகியோர் இதில் கலந்து கொண்டுள்ளனர் காதல் கலந்த காமெடி படமான வாய்யை மூடி பேசவும் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பை எதிர்நோக்கியுள்ளது.


இதில் ட்ரைலரிலேயே படத்தின் சுவாரசியத்தை கூட்டியிருக்கிறார் இயக்குனர் பாலாஜி மோகன், மேலும் இப்படம் மலையாளத்திலும் இதே முக்கிய கதாபாத்திரங்களை வைத்து உருவாக்கப்பட்டு உள்ளது.

பாலாவின் பேச்சால் கலங்கிய விஷால்...!



விஷால் நடிப்பிலும் தயாரிப்பிலும் இயக்குனர் திரு இயக்கியிருக்கும் ’நான் சிகப்பு மனிதன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று(13.03.14) காலை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.


இயக்குனர்கள் பாலா, ஹரி, விஷ்ணுவர்தன், விஜய் மற்றும் விஷாலின் நெருங்கிய நண்பர்களான விஷ்ணு, விக்ராந்த், சாந்தனு, ஜித்தன் ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்ட இவ்விழாவில், வழக்கமான வாழ்த்துகள் மட்டுமல்லாமல் சுவாரஸ்யமான பேச்சுக்களும் இடம்பெற்றன.


இயக்குனர் பாலா பேசியபோது “நான் சிகப்பு மனிதன்’ திரைப்படத்தின் ஹீரோ எப்போதும் தூங்கிக் கொண்டே இருக்கிறார். எனக்கென்னவோ இது என்னை பழிவாங்க விஷாலும், திருவும் இணைந்து யோசித்த திட்டம் என்றே தோன்றுகிறது.


நான் தான் எப்பொழுதும் தூங்கிக்கொண்டே இருப்பேன். காலையில் ஷூட்டிங்கிற்கு ஸ்பாட்டிற்கே 11 மணிக்குத் தான் செல்வேன். இரவு 7.30 மணிக்கு ஷூட்டிங் என்றால் விடியற்காலைக்கு சற்று முன்பு தான் செல்வேன்” என்று கலகலப்பாக பேசினார்.


விஷால் பேசியபோது “ இயக்குனர் பாலாவுக்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். அவன் - இவன் படத்தில் நடித்த சமயத்தில் நான் பலவற்றைக் கற்றுக்கொண்டேன். நான் இரண்டு ஹீரோக்களில் ஒருவனாக நடித்தேன் என்பதை விட 17 நாட்கள் ஒரு ஹீரோயினாக வாழ்ந்தேன் என்று சொல்லலாம்.


ஆரம்பத்தில் எதுவும் தெரியாவிட்டாலும் நாளாக நாளாக நான் ஒரு பெண்ணாகவே மாறிவிட்டேன். ஷூட்டிங்கின் போது கொஞ்சம் கிளாமராக தெரியவேண்டும் என்று கேமராமேன் சில கரெக்‌ஷன் செய்யச்சொன்னபோது,


நடிகைகள் இந்த சமயத்தில் எப்படி உணர்கிறார்கள் என்பதை மனமாற உணர்ந்தேன். தற்போது நடித்துக்கொண்டிருக்கும் நடிகைகளுக்கும் சரி, முன்பு நடித்த நடிகைகளுக்கும் சரி... அனைவருக்கும் நான் தலைவணங்குகிறேன்” என்று கூறினார்.