Monday 17 March 2014

சிவகார்த்திகேயன் சேட்டைகள்...! சிந்தியுங்கள் தயாரிப்பாளர்களே..?



ஹன்ஷிகா நல்ல நெய்க்குழந்தை மாதிரி கொழுகொழுன்னு இருக்காங்க, எப்படியாவது என்னை ஹன்ஷிகாவுக்கு மேட்ச்சா காட்டணும்னு நெனைச்சு கேமராமேன் சுகுமார் சார் இதுக்குன்னே வெளிநாட்டுக்குப் போய் 20 லைட்டுகளை வாங்கிட்டு வந்தார்.

இதுவரைக்கும் நான் நடிச்ச படங்கள்ல எல்லாம் எனக்கு ஒரே ஒரு அசிஸ்டெண்ட் மட்டும் தான் இருப்பாங்க. நானே கண்ணாடியை பார்த்துட்டு, முடியை களைச்சி விட்டுட்டு, கேமரா முன்னாடி போய் நின்னுடுவேன்.

ஆனா இப்போ பார்த்தா ஒரு 10 பேர் எங்கூடவே வருவாங்க. இவர் யாருன்னு கேட்டா அவர்தான் உங்களோட முடியை டிஸைன் பண்ணுவாருன்னு சொல்வாங்க, அவரு யாருன்னு கேட்டா அவரு தான் உங்க சட்டை பட்டன்களை எல்லாம் கரெக்ட்டா போட்டு விடுவாருன்னு சொல்வாங்க.

அப்போ இவருன்னு யாருன்னு இன்னொருத்தரை கேட்டா உங்களுக்கு மேக்கப் போட்ட பின்னாடி முகத்துல லைட்டாக்கூட ஆயில் வரம பார்த்துப்பாருன்னு சொல்வாங்க. என்னடா இது நம்மளை ”மைக்கேல் ஜாக்சன் பாப்பா மாதிரி” பார்த்துக்கிட்டாங்க. இதையெல்லாம் பார்த்தப்போ எனக்கே நல்லாருக்கேன்னு தோணுச்சு. என்றார்.

சிந்தியுங்கள் தயாரிப்பாளர்களே..?


சிவகார்த்திகேயன் என்ற ஒரே ஒரு ஹீரோவுக்காக சுமார் 50-க்கும் மேற்பட்ட ‘குண்டர்கள்’ சத்யம் தியேட்டரை சூழ்ந்து கொண்டு அடாவடித்தனம் செய்ததால் ஆடியோ பங்ஷனில் பரபரப்பு ஏற்பட்டது.


தமிழ்சினிமாவில் வளர்ந்து வரும் ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார் சிவகார்த்திகேயன். இவரை ஹீரோவாகப் போட்டு சில கோடிகளை செலவழித்தால் போதும். பல கோடிகளை கல்லா கட்டி விடலாம் என்பது தான் தயாரிப்பாளர்களின் பெருங்கனவு.


இதனால் சிவகார்த்திகேயன் கேட்கும் சம்பளம் எவ்வளவு பெரிய தொகையாக இருந்தாலும் அவரை வைத்து படமெடுக்க தயாரிப்பாளர்கள் க்யூவில் நிற்கிறார்கள்.


அதிலும் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் எஸ்.மதன் சிவகார்த்திகேயனை தனது கம்பெனி ஆர்டிஸ்ட்டைப் போலவே ஆக்கி விட்டார். தொடர்ந்து சிவகார்த்திகேயனின் கால்ஷீட்டை மொத்தமாக வாங்கி வைத்துக் கொண்டு அடுத்தடுத்து மினிமம் பட்ஜெட் படங்களை தயாரித்து வருகிறார்.


சிவகார்த்திகேயனை வைத்து மதன் தயாரித்த எல்லா படங்களுமே நல்ல வசூலைக் கொடுத்து வருகிறது. இதனால் சிவகார்த்திகேயனுக்கு சம்பளம் தவிர கார் வாங்கிக் கொடுப்பது, அவரது சொந்த விஷயங்களுக்காக கோடிக்கணக்கில் பணத்தை செலவு செய்வது என்று அவரை அப்படியே வளைத்துப் போட்டிருக்கிறார்.

0 comments:

Post a Comment