தூங்கிக் கொண்டிருந்த போது டைரக்டர் ரூம் கதவைத் தட்டி சில்மிஷ வேலைகளில் ஈடுபட முயற்சி செய்ததால் படப்பிடிப்பில் பரபரப்பு ஏற்பட்டது.
‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்திற்காக தேசிய விருதை வாங்கிய சீனு ராமசாமி தற்போது ‘இடம் பொருள் ஏவல்’ என்ற படத்தை டைரக்ட் செய்து வருகிறார். விஷ்ணு, விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்து வரும் இந்தப் படத்தில் ஹீரோயினாக மனீஷா யாதவ் நடித்து வருகிறார்.
இந்தப் படத்தை டைரக்டர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் பட நிறுவனம் தயாரித்து வருகிறது.
சில வாரங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட இதன் படப்பிடிப்பு தற்போது திண்டுக்கல்லில் நடைபெற்று வருகிறது.
மேற்படி படப்பிடிப்பில் கடந்த மூன்று நாட்களாக நடித்து வந்த ஹீரோயின் மனீஷா யாதவ் இப்போது திடீரென்று அந்தப் படத்திலிருந்து விலகி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதன் பின்னணியை விசாரித்த போது, டைரக்டர் சீனு ராமசாமி ஹீரோயின் மனீஷாவிடம் சில்மிஷ வேலைகளில் ஈடுபட்ட சமாச்சாரம் தெரிய வந்தது.
மேற்படி படத்தின் நேற்று முந்தினம் பகல் படப்பிடிப்பு முடிந்தவுடன் மாலையில் தன்னுடைய ஹோட்டல் ரூமுக்கு ஓய்வெடுக்க சென்றிருக்கிறார் மனீஷா.
அப்போது அவர் ஆழந்த தூக்கத்தில் இருந்தபோது திடீரென்று யாரோ மெதுவான சத்தத்துடன் ரூம் கதவை தட்டியிருக்கிறார்கள். இதனால் திடுக்கிட்டு எழுந்த மனீஷா வேகமாகச் சென் கதவைத் திறந்து பார்த்திருக்கிறார். அங்கே டைரக்டர் சீனு ராமசாமி சிரித்த முகத்தோடு நின்று கொண்டிருந்தாராம்.
அப்போது அவர் ஹீரோயின் மனீஷாவிடம் சில்மிஷ வேலைகளில் ஈடுபட முயற்சித்ததாவும், உடனே பதறிப்போன அவர் வேகமாக கதவை அடைத்துக் கொண்டு ரூமில் உட்கார்ந்து கதறி கதறி அழுததால் டைரக்டர் சீனு நல்ல பிள்ளையாக அந்த இடத்தை விட்டு எஸ்கேப் ஆகி விட்டதாவும் சொல்லப்படுகிறது.
நேற்று காலை வழக்கம் போல மனீஷா படப்பிடிப்புக்கு வந்தபோது உனக்கு சரியாக நடிப்பு வரவில்லை. அதனால் நீ என் படத்துக்கு வேண்டாம் என்று தனது உதவியாளர்கள் மூலம் தகவல் சொல்லி அனுப்பியிருக்கி்றாராம் சீனு. உண்மையான காரணத்தை புரிந்த கொண்ட மனீஷாவும் எந்த பதிலும் சொல்லாமல் காரில் ஏறி கிளம்பி சென்னை வந்து விட்டாராம்.
இப்போது அவசரம் அவசரமாக வேறு ஒரு ஹீரோயினைத் தேடி வருகிறார் சீனு. ஆனால் அவரின் இந்த சில்மிஷ வேலைகளைக் கேள்விப்படும் ஹீரோயின்களோ அவருடைய படத்தில் நடிக்க தயக்கம் காட்டுகிறார்கள்.
இதற்கு முன்பும் டைரக்டர் சீனு ராமசாமி ‘நீர்ப்பறவை’ படத்துக்காக நடிகை பிந்து மாதவியை கமிட் செய்தபோது இதேபோல அவரிடம் சில்மிஷ வேலை பிரச்சினையில் பிந்துமாதவி அந்தப்பட வாய்ப்பையே உதறிவிட்டு வந்து விட்டார்.
அதன்பிறகு தான் அந்தப் படத்தில் சுனேனாவை கமிட் செய்து எந்தப் பிரச்சனையும் செய்யாமல் ஒழுங்காக படப்பிடிப்பை நடத்தி முடித்திருக்கிறார்.
டைரக்டர் பாலாஜி சக்திவேலின் வழக்கு எண் 18/9 படத்தில் சிறந்த நடிப்பை வெளிக்காட்டி ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்ற மனீஷாவுக்கு நடிக்கத் தெரியவில்லை என்று சீனுராமசாமி சொல்வதை நம்புவதும் கஷ்டமாகத்தான் இருக்கிறது.
படப்பிடிப்பிலிருந்து இப்படி ஒரு தகவல் வந்தாலும் இதெல்லாம் உண்மையா? என்று ஹீரோயின் மனீஷாவைக் கேட்டால், முதலில் விஜய் சேதுபதிக்குத்த்தான் நான் ஜோடி என்றார் டைரக்டர்.
அவரோடு சில சீன்களையும் எடுத்தார். ஆனால் திடீரென்று இன்னொரு ஹீரோவான விஷ்ணுவுக்கு ஜோடியாக நடிக்கச் சொல்கிறார். அதனால் தான் நான் கடுப்பாகி வந்து விட்டேன் என அவர் தரப்பில் சேஃப்பாக ஒரு அறிக்கை விட்டிருக்கிறார்.