Tuesday 11 March 2014

ரஜினியை புகழும் சரத்குமார் - திடுக்கிடும் பின்ன்னி...!



ரஜினிகாந்த் தமிழரா? இல்லையா? என்று கோச்சடையான் ஆடியோ பங்ஷனில் கவிஞர் வைரமுத்துவின் பேச்சுக்கு நடிகர் சரத்குமார் தக்க பதிலடி கொடுத்தார் .

கோச்சடையான் ஆடியோ பங்ஷனில் கலந்து கொண்டார் கவிஞர் வைரமுத்து. விழாவில் அவர் பேசும்போது :

இந்த 65 வயதிலும் அவருக்கு 25 வயதுடைய ரசிகர்கள் கிடைத்திருக்கிறார்கள். இது வேறு எந்த நடிகருக்கும் கிடைக்காதது. ரஜினி 4 தலைமுறைகளைக் கடந்து வந்திருக்கிறார்.

கருப்பு வெள்ளை, வண்ணம், 3டி அனிமேஷன், இப்போது கேப்சர் மோஷன் டைப் என்று இவர் கடந்து வந்த பாதையை இந்திய அளவில் வேறு எந்த நடிகரும் தொட்டதில்லை.

இவரைப் போன்று சிகரம் தொட்டவரும் வேறு எவரும் இல்லை. இதற்கு இவருடைய உழைப்பு மட்டுமே காரணமில்லை.. இவரை விட உழைத்தவர்கள் நிறைய பேர் இங்கே இருக்கிறார்கள்.

உழைப்பையும் தாண்டிய இவருடைய மனித நேயம்தான் இவரை இங்கே இத்தனையாண்டுகளாக நிலை நிறுத்தியிருக்கிறது. ரஜினி நடித்த ‘பாபா’ படம் சரியாகப் போகவில்லை.

 உடனே விநியோகஸ்தர்களை அழைத்து என்னால் நீங்கள் நஷ்டமடைய வேண்டாம். இந்தாருங்கள் உங்களுடைய நஷ்டத்தொகை என்று அதைத் திருப்பிக் கொடுத்தார். இது அவரது மனித நேயம்.

ரஜினி சமயோசித புத்தியுடையவர். அறிவுக் கூர்மை மிக்கவர். அதற்கு என்னால் பல உதாரணங்களை சொல்ல முடியும். ஆனால் ஒரே ஒரு உதாரணம் மட்டும் சொல்கிறேன்..

 ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற சர்ச்சைகள் கிளம்பிய காலம் அது. அப்போது அவர் ஒரு பேட்டியளிக்கிறார். அதிலே ஒரு நிருபர் கேள்வி கேட்கிறார். அந்தக் கேள்விக்கு ரஜினி அளித்த பதில் என்னை அசர வைத்தது.

அப்படியொரு புத்திசாலித்தனமான பதில் அது.. பத்திரிகையாளர் கேட்ட கேள்வி “ஒரு தமிழன்தான் தமிழ்நாட்டை ஆள வேண்டும்னு சொல்றாங்களே..?” இது மிகவும் சிக்கலான கேள்வி.. ரஜினியின் பூர்விகம் மகாராஷ்டிரா.. பிறந்தது கர்நாடகாவில்.. ஆனால் புகழ் பெற்றது தமிழ்நாட்டில்.. என்ன பதில் சொல்வார்..?


எப்படிச் சொன்னாலும் சிக்கலாச்சே என்று பதைபதைப்புடன் இருந்தேன். ரஜினி சொன்னார்.. “அதுவும் சரிதான்.. நல்லவேளை நாடார், முதலியார், செட்டியார்கள் முதலமைச்சராக வேண்டும் என்று சொல்லாமல் தமிழன் முதல்வராக வேண்டும் என்று சொன்னார்களே அதுவரைக்கும் சந்தோஷம்..” என்றார்..

இப்படித்தான் எம்.ஜி.ஆரை ‘மலையாளி’ என்றார்கள்.. அடுத்து ரஜினியை ‘கன்னடர்’ என்கிறார்கள்.. ஆனால் இவர்கள் அதையெல்லாம் கடந்த மனிதர்கள்.. தங்களது பேச்சு, பழக்கவழக்கத்திலேயே தமிழர்களாக மாறிப் போனவர்கள். ரஜினிக்கும் ஒன்று சொல்லிக் கொள்கிறேன்..

உங்களுடைய ரசிகர்களை நீங்கள் அதிகம் காக்க வைக்காதீர்கள்.. வருடத்திற்கொரு படம் கொடுங்கள். இந்தப் படத்தை முதலில் சிறுவர்களிடத்தில் கொண்டு போங்கள்.. அதற்குப் பின்பு ரசிகர்கள் பார்த்துக் கொள்ளலாம். சிறுவர்கள் அதிகம் பார்க்க வேண்டிய படம் அது. அந்த வகையில் இதனை முன்னிறுத்துவதுதான் சிறந்தது…” என்றார்.

இதற்கு பதில் சொன்ன நடிகர் சரத்குமார் வைரமுத்து திடீரென்று ரஜினி தமிழரா? இல்லையா? என்ற சந்தேகத்தை கிளப்பி விட்டிருக்கிறார். அப்படி அவர் கேட்க வேண்டியதன் அவசியம் இப்போது ஏன் வந்தது என்று தெரியவில்லை.

அவர் எப்போதோ தமிழராகி விட்டார். அப்படி இருக்கும் போது வைரமுத்து ஏன் இப்படி பேசினார் என்று தெரியவில்லை என்று வைரமுத்து துடுக்குப் பேச்சுக்கு பதிலடி கொடுத்தார்.

0 comments:

Post a Comment