மான் கராத்தே படத்தில் பறவை முனியம்மாவுடன் இணைந்து பாடல் ஒன்றை பாடியுள்ளாராம் சிவகார்த்திகேயன்.
சிவகார்த்திகேயன் தற்போது தான் நடித்துவரும் ‘மான் கராத்தே’ படத்தில் பீட்டர் என்ற நகரத்து வாலிபனாக நடிக்கிறார்.
இதற்காக தனது ஹேர்ஸ்டைல், நடை, உடை எல்லாவற்றிலும் வித்தியாசம் காட்டி நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.
காரணம் இந்தப்படத்தின் பீட்டர் கேரக்டர் அதையெல்லாம் பிரதிபலிக்கிறதாம்.
இதற்கேற்ற மாதிரி படத்தில் ‘ராயபுரம் பீட்டரு’ என்கிற ஓப்பனிங் பாடலும் வைத்திருக்கிறார் படத்தின் இயக்குனர் திருக்குமரன்.
அனிருத் இசையமைத்துள்ள இந்தப்பாடலை பரவை முனியம்மாவுடன் சிவகார்த்திகேயனும் இணைந்து பாடியுள்ளார்,
இந்தப்பாடலை ராயபுரம், காசிமேடு ஆகிய பகுதிகளில் ஐந்து நாட்களில் படமாக்க திட்டமிட்டுள்ளார்களாம்.
0 comments:
Post a Comment