டைரக்டர் பாலு மகேந்திராவின் இரண்டாவது மனைவி தான் நடிகை மெளனிகா. கடந்த சில வாரங்களுக்கு முன்பு மறைந்த டைரக்டர் பாலுமகேந்திராவின் இறுதிநாளில் அவரது உடலை பார்க்கச் சென்றபோது அவரை டைரக்டர் பாலா தடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
பின்னர் போலீஸ் பாதுகாப்போடும், டைரக்டர் பாரதிராஜாவின் உதவியோடும் மெளனிகா பாலுமகேந்திராவில் உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டுப்போனார். இப்போது அவர் தனக்கும் பாலுமகேந்திராவுக்குமான உறவு, பாலுமகேந்திரா இறந்தபோது நடந்த சம்பவங்கள் பற்றியெல்லாம் பல ஊடகங்களுக்கு பேட்டிகளை கொடுத்து வருகிறார்.
சமீபத்தில் அப்படி ஒரு மீடியாவிடம் பேசிய அவர் டைரக்டர் பாலா மீது பரபரப்பான குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.
இயக்குநர் பாலுமகேந்திரா படங்களில் நடித்த போது நான் அவரை காதலித்தேன். முதலில் மறுத்தார். நான்தான் வற்புறுத்தி அவருடன் சேர்ந்து வாழ ஆரம்பித்தேன்.. பிறகு அவர் என்னை விட்டு விலகிப் போகவில்லை. நானாக அவரை தாலி கட்டும்படி வற்புறுத்தவில்லை. அவர்தான் திடீரென்று ஒருநாள் சிவன் கோவிலில் வைத்து எனக்கு தாலி கட்டினார்.
பாலுமகேந்திராவுக்கும் எனக்கும் 28 வருட தாம்பத்ய வாழ்க்கை இருக்கிறது. அவர் என்னை அன்புடன் பார்த்துக் கொண்டார். அப்படிப்பட்ட என்னை பாலுமகேந்திரா மரணம் அடைந்த போது பார்க்க வரக்கூடாது என்று இயக்குநர் பாலா தடுத்தார். நான் வரக்கூடாது என்று சொல்ல பாலாவுக்கு என்ன உரிமை இருக்கிறது?
பாலுமகேந்திரா உடல் வைக்கப்பட்டு இருந்த இடத்துக்கு நான் சென்றால் என்னை அடித்து விரட்டவும் ஆட்களை நிறுத்தி இருந்தார். பாலா விதித்த தடையை மீறி என் கணவரின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்த டைரக்டர் பாரதிராஜா உதவி செய்தார். எனக்கும் பாலுமகேந்திராவுக்குமான உறவு தவறானதாக இருந்து இருந்தால் அவர் உயிரோடு இருக்கும் போதே என்னை பாலுமகேந்திராவிடம் இருந்து பிரிக்க பாலா முயற்சி செய்து இருக்கலாமே…? அப்போது விட்டுவிட்டு இப்போது என்னை தடுப்பது எந்த விதத்தில் நியாயம் என்று கேள்வி எழுப்பியுள்ளார் மெளனிகா.
கணவன், மனைவிக்குள் ஆயிரம் இருக்கும். அதில் பாலாவுக்கு என்ன வேலை
0 comments:
Post a Comment