Sunday 2 March 2014

ஹலோ லன்ச் முடிஞ்சுதா.. கொட்டாவியா வருதா.. ஒரு நிமிஷம் இங்க வாங்க...!



இன்றைய அவசர காலத்தில் வீட்டில் தூங்குவதை விட, அலுவலகத்தில் தூங்கும் நேரம் அதிகமாகிவிட்டது. என்ன புரியவில்லையா? ஆம், காலையில் எழுந்து சரியாக சாப்பிடாமல், உடற்பயிற்சி செய்யாமல், அலுவலகத்திற்கு வந்து வேலை செய்து, மதிய வேளையில் நன்கு மூக்கு முட்ட சாப்பிட்டு, பின் என்ன தூக்கம் தான்.

 இதனால் செய்யும் வேலையை சரியான நேரத்தில் செய்து முடிக்க முடியாமல், மாலையில் நீண்ட நேரம் அலுவலகத்தில் இருக்க வேண்டியுள்ளது. இத்தகைய பிரச்சனையை அலுவலகத்திற்கு செல்வோர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் சந்திப்போம்.

ஏனெனில் காலையில் நன்கு சுறுசுறுப்புடன் வேலை செய்த பின்னர், மதியம் முழு சாப்பாட்டை சாப்பிடுவதால், செரிமான மண்டலத்தின் வேகம் குறைந்து, உணவுப் பொருட்கள் செரிமானமடைய உடலின் எனர்ஜியானது செலவாவதால், உடலானது சோர்வடைந்து, மதிய வேளையில் தூக்கம் வருகிறது.

அதுமட்டுமின்றி, அப்படி தூக்கம் வரும் போது தூங்காமல் இருந்தால், பின் தலை வலியானது அதிகரித்துவிடும். ஆகவே இத்தகைய பிரச்சனையில் இருந்து விடுபட ஒருசில ட்ரிக்ஸ்களை உங்களுக்காக பரிந்துரைக்கிறோம். அதை முயற்சித்துப் பாருங்கள். நிச்சயம் மதிய வேளையில் வரும் தூக்கத்தில் இருந்து விடுபடலாம்.

மதிய வேளையில் தூக்கம் வராமல் இருக்க வேண்டுமெனில், முதலில் அளவாக சாப்பிட வேண்டும். அதிலும் எளிதில் செரிமானமாகக்கூடிய உணவுகளை உட்கொள்ள வேண்டும். இத்தகைய உணவுகள் வயிற்றை நிரப்புவதோடு, ஊட்டச்சத்து நிறைந்தும் இருக்கும். உதாரணமாக, சாலட் மதிய வேளையில் சாப்பிடுவதற்கு ஏற்றது.

ஒருவேளை நன்கு மூக்கு முட்ட சாப்பிட்ட பின், பாட்டு கேட்டால் அது தூக்கம் வருவதைக் கட்டுப்படுத்தலாம். அதிலும் நன்கு குத்து பாட்டாக கேட்டால், அது உடலின் சோர்வைப் போக்கி, தூக்க உணர்வைத் தடுக்கும்

உட்கார்ந்து கொண்டே லேசாக ஸ்ட்ரெட்ச்சிங் உடற்பயிற்சிகளை செய்தால், தூக்கம் கலைவதோடு, தசைகள் புத்துணர்ச்சி அடைந்துவிடும்.

பொதுவாக புதினா புத்துணர்ச்சி தரும் உணவுப் பொருட்களில் ஒன்று. ஆகவே புதினா சுவை கொண்ட சூயிங் கம்மை வாயில் போட்டு மெல்லுங்கள்.

உணவு உண்ட பிறகு, கம்ப்யூட்டர் முன்பே நீண்ட நேரம் இல்லாமல், தூக்கம் வரும் சமயம் லேசான நடைப்பயிற்சியை மேற்கொள்ளுங்கள். இது செரிமானத்தை எளிதாக்கி, தூக்க கலக்கத்தில் இருந்து விடுதலை தரும்.

நன்கு ஃபுல்லாக சாப்பிட்ட பிறகு, வேலை செய்யும் போது தூக்கம் வந்தால், உடன் பணி புரியும் நண்பர்களிடம் சிறிது நேரம் பேசுங்கள். இதுவும் தூக்கத்தை விரட்டிவிடும்.

இல்லாவிட்டால் ஒரு கப் காபி குடிக்கலாம். இது நிச்சயம் தூக்கத்தை போக்கி, மனதை புத்துணர்ச்சி அடையச் செய்யும்.

என்ன செய்தாலும் தூக்கம் போகவில்லையா, அப்படியானால் நண்பர்களுக்கு போன் செய்து பேசுங்கள். இது தூக்கம் வரும் எண்ணத்தை தடுப்பதோடு, மனதை ரிலாக்ஸ் அடையவும் செய்யும்.

டார்க் சாக்லெட் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவடையச் செய்து, உடலின் குளுக்கோஸ் அளவை அதிகரித்து, உடலின் சோர்வைப் போக்கி, தூக்கத்தை தடுக்கும்.

தண்ணீர் குடித்தால், உடலின் வறட்சி நீங்குவதோடு, மெட்டபாலிசம் அதிகரித்து, உடல் சோர்வைப் போக்கி, தூக்க கலக்கத்தில் இருந்து விடுதலைப் பெறச் செய்யும்.

0 comments:

Post a Comment