பொதுவாக காபி என்றதும் அனைவரும் பாலை கொதிக்க வைத்து, அதில் காபி தூளைப் போட்டு, கொதிக்க வைத்து, வடிகட்டி குடிப்போம். இல்லையெனில் கடைகளில் விற்கும் இன்ஸ்டன்ட் காபி பொடியை வாங்கி, கொதிக்க வைத்த பாலில் சேர்த்து, கலந்து குடிப்போம். இத்தகைய ஒவ்வொரு முறையிலும் ஒவ்வொரு சுவையானது கிடைக்கும்.
ஆனால் நல்ல மணத்துடன், அருமையான சுவையில் ஒரு காபி குடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டால், அதற்கு இப்போது சொல்லக்கூடிய முறையானது சரியாக இருக்கும். சரி, அந்த முறை என்னவென்று படித்து தெரிந்து கொள்ளுங்களேன்...
தேவையான பொருட்கள்:
காபி பொடி - 2 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை - தேவையான அளவு
பால் - 1/2 கப்
கொதிக்கும் நீர் - 1/2 கப்
செய்முறை:
முதலில் ஒரு பௌலில் காபி பொடி மற்றும் சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
பின்னர் அதில் 1 டேபிள் ஸ்பூன் பால் சேர்த்து, நன்கு ஸ்பூன் வைத்து, முட்டையை எப்படி அடிப்போமோ, அதேப்போல் தொடர்ந்து 4-5 நிமிடம், நன்கு நிறம் மாறி பேஸ்ட் ஆகும் வரை அடித்துக் கொள்ள வேண்டும்.
அதே சமயம், ஒரு பாத்திரத்தில் பால் மற்றும தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.
இறக்கியதும், அந்த பாலை அடித்து வைத்துள்ள காபி தூளுடன் சேர்த்து கலக்க வேண்டும்.
இப்போது அந்த காபியைக் குடித்தால், அது வித்தியாசமான சுவையில் இருக்கும்.
0 comments:
Post a Comment