Wednesday, 12 March 2014

மார்ச் 21 - ரிலீசுக்கு தயாரானது தல அஜித், படம்...!



தல அஜித், தமன்னா மற்றும் பலர் நடிப்பில் கடந்த பொங்கலுக்கு வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த வீரம் திரைப்படத்தின் தெலுங்கு டப்பிங் வருகிற மார்ச் 21 ஆம் தேதி வெளியாகவுள்ளது.


சிறுத்தை சிவா இயக்கத்தில், விஜயா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் உருவாகியிருந்தது வீரம் திரைப்படம். இளைய தளபதி விஜயின் ஜில்லா


திரைப்படத்துடன் பாக்ஸ் ஆபீஸில் மோதிய இப்படம் மெஹா ஹிட்டாக அமைந்தது.


தமிழில் வெளியான ஜனவரி 10 ஆம் தேதியன்றே தெலுங்கிலும் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தாலும், சிற்சில காரணங்களால் இப்படத்தின் வெளியீடு தள்ளிப்போனது


தற்பொழுது இப்படத்தின் டப்பிங் வேலைகள் அனைத்தும் நிறைவடைந்திருப்பதால் இப்படத்தினை மார்ச் 21ல் வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.


வீரம் திரைப்படத்திற்குப் பிறகு தல அஜித் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கவுள்ள படத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்தில் சன்னிலியோன் மற்றும் தீபிகா படுகோன் ஆகியோர் நடிக்கலாம் என்று கிசுகிசுக்கப்பட்டுவருகிறது. இப்படத்தில் தல அஜித் போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

0 comments:

Post a Comment