கோச்சடையான் படத்தின் டீஸர் யூடியூபில் வெளியிடப்பட்டு மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இந்திய திரைப்பட வரலாற்றில் முதன் முறையாக மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் வெளிவந்த கோச்சடையான் திரைப்படத்தின் டீஸர் உற்சாகமான விமர்சனங்களை பெற்றுள்ளது.
சௌந்தர்யாவின் டிவிட்டர் பக்கத்தில் திரையுலகினர் வாழ்த்துக்களையும், அவர்களது கடின முயற்சிக்கும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.
சிம்பு ஆர்வமுடன் கோச்சடையான் விஷ்வல் மற்றும் டிரெய்லரை பார்த்துவிட்டு “Thalaivar is back” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் லதா ரஜினிகாந்த் பாடிய பாடலுக்கு பாராட்டுகளையும் சௌந்தர்யாவின் டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார் சிம்பு.
சிம்புவின் இந்த பாராட்டுகளுக்கு, உடனடியாக “Thank you:-) tc” என்று சௌந்தர்யா பதில் அளித்துள்ளார்.
0 comments:
Post a Comment