சீனியர் நடிகர் அம்பரிஷ் பற்றி தவறாக விமர்சித்ததாக ரம்யா மீது புகார் கூறப்பட்டது. அதற்கு அம்பரிஷ் ரசிகர்களிடையே எதிர்ப்பு கிளம்பியது மூத்த நடிகர் அம்பரிஷ் பற்றி தவறான கருத்தை வெளியிட்டார் ரம்யா.
இதற்கு நடிகர் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியதுடன், ரசிகர்களும் சரமாரியாக விமர்சித்திருந்தனர். அம்பரிஷை அரசியலுக்கு கொண்டு வந்ததே எனது தந்தை மற்றும் எஸ்.எம்.கிருஷ்ணாதான் என்று ரம்யா சொல்லியிருந்தார்.
இதற்குத்தான் இத்தனை எதிர்ப்பும். இது குறித்து ரம்யா கூறுகையில், அம்பரிஷ் ஏற்கெனவே ஜனதா தளம் (எஸ்) கட்சியில் இருந்தார். அங்கிருந்து விலகிய பிறகு அவரை காங்கிரசில் சேர்த்துவிட்டது கிருஷ்ணாவும், எனது தந்தையும் என்றுதான் குறிப்பிட்டிருந்தேன்.
இதற்காக வருத்தம் தெரிவிக்கிறேன். என்னை விமர்சிக்கும் சிலர் கட்சிக்குள்ளேயே இருக்கின்றனர். அது பற்றி நான் கவலைப்படவில்லை. எனது கவனம் எல்லாம் நாடாளுமன்ற தேர்தலில் மட்டுமே உள்ளது.
தேர்தல் முடியும் வரை எதைப்பற்றியும் யோசிக்கப்போவதில்லை. வரும் 17ம் தேதி முதல் மாண்டியா தொகுதியில் பிரசாரம் செய்ய உள்ளேன் என்றார்.
0 comments:
Post a Comment