Wednesday, 12 March 2014

சம்பளத்தைவிட மற்ற செலவுதான் அதிகம்... - தயாரிப்பாளரும், ஹீரோயினும் மோதல்



பிரியாமணியின் காஸ்டியூம் டிசைனர் கேட்ட சம்பளத்தை கொடுக்க தயாரிப்பாளர் மறுத்தார். இதனால் அந்த படத்திலிருந்து வெளியேறினார் பிரியாமணி.

பூமிகா நடித்து தெலுங்கில் வெளியான மிஸ்ஸம்மா படத்தை கன்னடத்தில் ரீமேக் செய்ய முடிவு செய்யப்பட்டது.

 பூமிகா ஏற்ற வேடத்தில் பிரியாமணி நடிக்க ஒப்பந்தம் ஆனார். படப்பிடிப்பிலும் கலந்துகொண்டார்.

இதற்கிடையில் அதிக சம்பளம் மற்றும் காஸ்டியூம் செலவு போன்றவற்றில் தயாரிப்பாளருக்கும், பிரியாமணிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதையடுத்து அப்படத்திலிருந்து பிரியாமணி விலகினார்.

இதுபற்றி தயாரிப்பாளர் தரப்பில் கூறும்போது, இப்படத்துக்காக காஸ்டியூம் மற்றும் நகை போன்றவற்றுக்கான செலவை அதிகளவில் பிரியாமணி ஏற்றிக்கேட்டார்.

அதை தயாரிப்பாளர் ஏற்றுக்கொண்டு வேடத்துக்காக கவரிங் நகைகளுக்கு பதிலாக தங்க நகைகளையே வாங்கிக் கொள்ளவும், எதிர்காலத்தில் அது பயன்படும் எண்ணத்திலும் ஒப்புக்கொண்டார்.

 ஆனால் மும்பையை சேர்ந்த அவரது டிசைனரை குறிப்பிட்டு அவரிடம்தான் நகை மற்றும் காஸ்டியூம் டிசைன் செய்ய வேண்டும் என்றார்.

அவரோ எதிர்பார்க்காத அளவுக்கு பெரிய தொகையை சம்பளமாக கேட்கிறார்.

அதை ஏற்க தயாரிப்பாளர் முன் வரவில்லை. இதனால் கோபப்பட்டு படத்திலிருந்து பிரியாமணி விலகிவிட்டார் என்றனர்.

இதுபற்றி பிரியாமணி தரப்பில் கேட்டபோது, சில கருத்துவேறுபாடு காரணமாக படத்திலிருந்து விலகிவிட்டார் என்று பதில் வந்தது.

 அவருக்கு பதிலாக ராகினி திவேதி நடிக்க உள்ளார். 

0 comments:

Post a Comment