Wednesday 12 March 2014

ஹீரோயினை அவமானப்படுத்திய வில்லன் நடிகர்...!



சட்டக்கல்லூரி மாணவர் பியாஸ்வர் ரகுமான் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிய வஞ்சகம் குறும் பட வெளியீட்டு விழா வடபழனியில் நடந்தது. இதில் ராதாரவி பங்கேற்று பேசியதாவது:–


தமிழ் படங்களில் நடிப்பதற்கு இந்தி நடிகைகளை விமானத்தில் அழைத்து வந்து நட்சத்திர ஓட்டல்களில் தங்க வைக்கிறார்கள்.

 அவர்கள் வெறும் உதட்டை மட்டும் இப்படியும், அப்படியும் அசைக்கிறார்கள்.

 இதனால் வசன உச்சரிப்புகள் உயிரோட்டமாக இருப்பது இல்லை. இவர்களால் தமிழ் படங்கள் திணறுகிறது.

 இந்த நடிகைகளுக்கு பல லட்சங்கள் சம்பளமாகவும் கொடுக்கப்படுகிறது. உதட்டை மட்டும் ஆட்டுகிற இத்தகு நடிகைகளுக்கு தயாரிப்பாளர்கள் சம்பளத்தை அதிகம் கொடுக்க கூடாது. குறைக்க வேண்டும்.


இந்தி தெரியாதவர்களை இந்திப் படங்களில் அங்குள்ளவர்கள் நடிக்க வைப்பது இல்லை.

 அது போல் இங்குள்ளவர்கள் தமிழ் கலைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். ‘வஞ்சகம்’ குறும்படத்தை டைரக்டர் பியாஸ்வர் ரகுமான் நேர்த்தியாக உருவாக்கியுள்ளார்.

சிறந்த நகைச்சுவை நடிகராகவும் அவர் கிடைத்துள்ளார்.


இவ்வாறு அவர் பேசினார்.

தயாரிப்பாளர்கள் ஞானவேல் ராஜா, டி.சிவா, கலைக்கோட்டுதயம், கேபிள் டி.வி. உரிமையாளர் சங்க தலைவர் காயல் இளவரசு, நடிகர்கள் விதார்த், விஷ்ணு, பிரியன் உள்ளிட்ட பலர் விழாவில் பங்கேற்றனர்.

0 comments:

Post a Comment