1980களில் ஹீரோயினாக வலம் வந்துகொண்டிருந்த நதியா திருமணத்துக்கு பிறகு நடிப்பைவிட்டு ஒதுங்கி இருந்தார்.
பல வருடங்களுக்கு பிறகு எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தில் ஜெயம் ரவியின் அம்மாவாக நடித்தார். தொடர்ந்து அவருக்கு அம்மா வேடமே வந்ததால் ஒன்றிரண்டு படங்கள் மட்டும் நடித்துவிட்டு மற்ற படங்களை ஏற்காமல் தவிர்த்தார்.
அப்போது கூறும்போது,திருமணத்துக்கு பிறகு நடிகைகளுக்கு வாய்ப்பு கிடைக்காது என்று சொல்கிறார்கள். அக்கா, அம்மா, அண்ணி வேடம்தான் தருகிறார்கள்.
ஆனால் பாலிவுட் படங்களில் திருமணத்துக்கு பிறகும் கதையின் நாயகியாக நடிக்க அவர்களுக்கு வாய்ப்பு தரப்படுகிறது. இங்கு அதுபோல் வாய்ப்பு தருவதில்லை.
தமிழ் உள்ளிட்ட மொழிகளிலும் திருமணம் ஆனவுடன் ஹீரோயின்களை ஒதுக்கிவிடாமல் அவர்களின் திறமைக்கு ஏற்ப முக்கிய வேடங்களை உருவாக்கலாம் என்று கூறி இருந்தார்.
இந்தநிலையில் மலையாளத்தில் வெளியான த்ரிஷ்யம் படத்தை தெலுங்கில் நடிகை ஸ்ரீபிரியா ரீமேக் செய்து இயக்குகிறார்.
அதில் வெங்கடேஷ், மீனா நடிக்கின்றனர்.
பெண் போலீஸ் அதிகாரி வேடத்தை நதியாவை நடிக்க கேட்டார் ஸ்ரீபிரியா. மலையாள படத்தை பார்த்ததும் நதியாவுக்கு அந்த வேடம் பிடித்தது.
உடனே நடிக்க ஒப்புக்கொண்டார். இதுபற்றி நதியா கூறும்போது, முதன் முறையாக ஒரு பெண் இயக்குனரின் படத்தில் நடிக்க உள்ளேன் என்றார்.
0 comments:
Post a Comment