பிரெஞ்சு போட்டோகிராபரின் ஸ்டில் பார்த்து தனது பட போஸ்டரை வடிவமைக்கவில்லை என்றார் கமல்.
உத்தமவில்லன் படத்திற்காக கமல்ஹாசன் வித்தியாசமான மேக்அப் அணிந்திருந்த ஸ்டில் வெளியானது.
இது பிரெஞ்ச் போட்டோகிராபர் எரிக் என்பவர் எடுத்த போட்டோவை பார்த்து காப்பி அடித்திருப்பதாக இணைய தளங்களில் தகவல் வெளியானது.
இது குறித்து கமலிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: தேயம் என்ற பழங்கால கலை ஆயிரம் வருடமாக இங்குள்ளது.
கலைநயத்துடன் கூடிய இந்த ஆட்டத்தை ஆடும் பாரம்பரியத்தை சேர்ந்த 3வது தலைமுறை கலைஞர்தான் எனக்கு இந்த மேக்அப் அணிவித்தார்.
காதல் ஜோடி ஒன்று மார்பில் தலைவைத்தபடி போஸ் தந்தால் அது ஏக் துஜே கே லியே போஸ்டரின் காப்பி என்று சொல்வார்களா?
உத்தம வில்லன் படத்தில் தமிழ்நாட்டின் பாரம்பரிய கூத்து கலையுடன் கலந்த கலவையாக தேயம் நடனம் என் படத்தில் இடம்பெறுகிறது.
முகத்தில் பெயின்ட்டால் மேக்அப் அணிவது சாதாரண விஷயம் கிடையாது. நான் அணிந்திருப்பது முகமூடி அல்ல.
என் முகத்தின்மேல் பெயின்ட்டால் வரையப்பட்டிருக்கிறது. இதற்கு 4 மணி நேரம் ஆனது.
வில்லன் என்பதற்கு அர்த்தம் இருக்கிறது. வில் என்றால் அம்புவை குறிக்கும் வில்லன் என்றால் வில்லுடன் அம்புவை ஏந்தியவன் என்று பொருள்.
இதுவரை 18 நிமிடத்துக்காக 7 சீன்கள் படமாகிவிட்டன. இப்படத்தில் பல நடிகர்களிடமிருந்து ஆச்சரியப்படத்தக்க நடிப்பை நீங்கள் எதிர்பார்க்கலாம். இவ்வாறு கமல் பதில் அளித்தார்.
0 comments:
Post a Comment