பிரியங்கா சோப்ராவுக்கு நான் அம்மாவா? மறுபடியும் இப்படி சொல்லாதீங்க என்று டைரக்டரிடம் கடிந்துகொண்டு பட வாய்ப்பை நிராகரித்தார் தபு.
தமிழில் காதல் தேசம், சிறைச்சாலை, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், சிநேகிதியே, டேவிட் உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் தபு.
பாலிவுட் நடிகையான இவருக்கு பட வாய்ப்புகள் நிறைய வந்தபோதும் மனதுக்கு பிடித்த வேடம் மட்டுமே ஏற்று நடிக்கிறார்.
சமீபத்தில் பெண் இயக்குனர் ஸோயா அக்தர் இயக்கும் இந்தி படத்தில் பிரியங்கா சோப்ராவுக்கு அம்மாவாக நடிக்க வாய்ப்பு வந்தது.
பிரியங்காவுக்கு 31 வயது. தபுவுக்கு 42 வயது. 11 வயது மட்டுமே இருவருக்கும் வித்தியாசம்.
வயது அதிகமான பெண்களுக்கு அம்மாவாக நடிக்கும் அளவுக்கு எனக்கு வயதாகிவிடவில்லை.
அப்படியே அந்த வேடம் ஏற்று நடித்தாலும் அது எனக்கு பொருத்தமாக இருக்காது.
இன்னொருமுறை இந்த வேடத்தில் நடிக்க கேட்காதீர்கள் என்று ஸோயாவிடம் எரிந்து விழுந்தார் தபு.
பதறிப்போன ஸோயா, ஸாரி கேட்டுவிட்டு அங்கிருந்து நகர்ந்தவர் வேறு அம்மா நடிகையை தேடிக்கொண்டிருக்கிறார்.
சமீபத்தில் திரைக்கு வந்த சல்மான் கானின் ஜெய் ஹோ படத்தில் அவருக்கு அக்காவாக நடித்திருந்தார் தபு.
0 comments:
Post a Comment