தேர்தல் காரணமாக ரஜினி, விஷால் படங்கள் தள்ளிப் போகின்றன.
ரஜினியின் கோச்சடையான் படம் ஏப்ரல் 11–ந்தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் இசை வெளியீட்டு விழா வருகிற 9–ந்தேதி காலை சத்யம் தியேட்டரில் நடக்கிறது.
இதில் ரஜினி, அமிதாப்பச்சன், தீபிகா படுகோனே போன்றோர் பங்கேற்கின்றனர்.
கோச்சடையான் படத்தை உலகம் முழுவதும் 6 ஆயிரம் தியேட்டர்களில் திரையிட திட்டமிட்டுள்ளனர்.
இந்த நிலையில் தமிழக பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 24–ந்தேதி நடைபெறும் என தேர்தல் கமிஷன் அறிவித்து உள்ளது. இதனால் கோச்சடையான் ரிலீசாவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
அடுத்த மாதம் தேர்தல் பணிகள் தீவிரமாக நடக்கும் என்பதால் கோச்சடையான் படத்தை ரிலீஸ் செய்வது சரியாக இருக்காது என படக்குழுவினர் கருதுகின்றனர். தேர்தல் முடிந்த பிறகு திரைக்கு கொண்டு வரலாம் என யோசிக்கிறார்கள்.
இதுபோல் விஷால் நடிக்கும் நான் சிகப்பு மனிதன், சிவகார்த்திகேயன் நடிக்கும் மான் கராத்தே படங்களையும் அடுத்த மாதம் ரிலீஸ் செய்ய முன்னதாக முடிவெடுத்தனர். ஆனால், தேர்தல் காரணமாக அந்த படங்களின் ரிலீசும் தள்ளிப்போகிறது.
அடுத்த மாதம் எந்த படமும் ரிலீசாகாது என தெரிகிறது
0 comments:
Post a Comment