Thursday 6 March 2014

பேஸ்புக்கில் மகள் போட்ட கமெண்ட்டால் ரூ. 50 லட்சம் போச்..!



பேஸ்புக் தளத்தில் பள்ளி நிர்வாகம் ஒன்று தன் தந்தைக்கு கொடுக்க இருந்த இழப்பீடுத் தொகை குறித்த விவரத்தை மகள் ஹேப்பியான மூடில் கமெண்டாக பதிவேற்றம் செய்ததன் விளைவால்,அவரின் தந்தைக்கு வரவிருந்த சுமார் ரூ. 50 லட்சத்தை இழந்து விட்டார்..

பேட்ரிக் ஸ்னே (69) என்பவர் ஃப்ளோரிடா மாகாணத்தில் பள்ளி தலைமை ஆசிரியராக ஒப்பந்த முறையில் பணியாற்றி வந்தார். 2010-ம் ஆண்டில், ஸ்னேவின் வயதைக் காரணம் காட்டி அவரது ஒப்பந்தத்தை நீட்டிக்க பள்ளி நிர்வாகம் மறுத்து விட்டது.இதைத் தொடர்ந்து அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் முடிவில் ஸ்னேவுக்கு இழப்பீட்டுத் தொகையாக பள்ளி நிர்வாகம் சுமார் ரூ. 50 லட்சம் வழங்க வேண்டும் என்று 2011-ம் ஆண்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த இழப்பீட்டுத் தொகை வழங்குவது தொடர்பாக பள்ளி நிர்வாகமும், ஸ்னேவும் ஒப்பந்தம் மேற்கொண்டனர்.இந்நிலையில் தனது தந்தைக்கு ரூ. 50 லட்சம் இழப்பீட்டுத் தொகை கிடைக்கவுள்ள செய்தியை பேஸ்புக்கில் அவரது மகள் மகிழ்சியாக பதிவேற்றம் செய்திருந்தார். மேலும் இந்த செய்தியை அவரது பேஸ்புக் நண்பர்களில் கிட்டத்தட்ட 1,200 பேர் பகிர்ந்து கொண்டனர். அவ்வாறு பகிர்ந்து கொண்ட செய்தி ஒருவழியாக சம்பந்தப்பட்ட பள்ளிக்கு தெரிய வந்தது.

இதையடுத்து “இழப்பீட்டு தொகை தொடர்பான ஒப்பந்தத்தை சமூக ஊடகத்தில் வெளியிட்டது ஒப்பந்த ஷரத்துகளை மீறும் செயல்’ என்று கூறி பள்ளி நிர்வாகம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் கடந்த வாரம் தீர்ப்பளித்த நீதிமன்றம் அந்தப் பள்ளியின் வாதத்தை ஏற்றுக் கொண்டது. அதையடுத்து முன்னர் பள்ளி நிர்வாகத்துக்கும், ஸ்னேவுக்கும் இடையேயான இழப்பீட்டுத் தொகை ஒப்பந்தத்தை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது அந்த ஆசிரியர் குடும்பம் உள்ளிட்ட பலருக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

0 comments:

Post a Comment