தன் படத்தில் நடிக்கும் ஹீரோயினுக்கு மற்றொரு இயக்குனர் படத்தில் நடிக்க வீடியோ காட்டி சான்ஸ் வாங்கி கொடுத்தார் ராம்கோபால் வர்மா.
தன் படத்தில் நடிக்கும் ஹீரோயின்களிடம் நெருக்கமாக இருப்பதாக அடிக்கடி சர்ச்சையில் சிக்குபவர் ராம் கோபால் வர்மா. ஐதராபாத்தில் அவரது அலுவலகத்தை புதுப்பிக்கும் பணி நடப்பதால் கடந்த 1 வருடமாக அவர் ஓட்டலில் தங்கி இருக்கிறார்.
வர்மா இயக்கும் ரவுடி தெலுங்கு படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் ஷான்வி ஸ்ரீவஸ்த்வா. வர்மாவும் டோலிவுட் இயக்குனர் புரி ஜெகநாத்தும் நீண்ட நாள் நண்பர்கள். தான் இயக்கும் புதிய படத்திற்கு கடந்த பல மாதங்களாக ஹீரோயின் தேடி வருகிறார் புரி. பல புதுமுகங்களை அவர் நேர்முக தேர்வுக்கு அழைத்தும் யாரையும் பிடிக்கவில்லை.
இது பற்றி வர்மாவிடம் கூறினார் புரி. உடனே அவர், என் படத்தில் நடிக்கும் ஷான்வியை வேண்டுமானால் உன் படத்திலும் நடிக்க வை என்றவர் ஷான்வி நடித்த வீடியோ காட்சிகளை புரியிடம் கொடுத்தார்.
அதை பார்த்தவர் திருப்தி அடைந்தார். தன் படத்துக்கு ஷான்வியையே ஹீரோயினாக ஒப்பந்தம் செய்ய முடிவு செய்திருக்கிறார். இன்னும் 2 வாரத்துக்குள் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கப்படும் என்று புரி தெரிவித்தார்.









0 comments:
Post a Comment