Saturday 22 March 2014

உத்தமவில்லன் படப்பிடிப்பு திடீர் ரத்து! பெங்களூரில் இருந்து சென்னை திரும்பியது படக்குழு!!



விஸ்வரூபம்-2 படத்தையடுத்து நடிகர் ரமேஷ்அரவிந்த் இயக்கத்தில் கமல் இரண்டு வேடங்களில் நடித்து வரும் படம் உத்தமவில்லன்.


இப்படத்தின் படப்பிடிப்பை 90 நாட்களும் பெங்களூரில் நடத்த திட்டமிட்டு கடந்த ஒரு வாரமாக அங்கு படப்பிடிப்பை நடத்தி வந்தனர். ஆனால் திடீரென படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு சென்னை வந்தது அப்படக்குழு.


என்ன காரணம்? என்று விசாரித்தபோது, கர்நாடகத்தில் இருக்கும் சலன் சித்ர சினிமா தொழிலாளர் சங்கத்துக்கு போட்டியாக புதிய சங்கம் ஒன்று தற்போது உருவாகியுள்ளதாம்.


ஆனால், அந்த புதிய சங்கத்தை தடை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி பழைய சங்கத்தினர் ஸ்டிரைக் நடத்துகிறார்களாம். தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் கைவிடப்படாது என்று காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அமல்படுத்தி உள்ளனர்.


இதன்காரணமாக, கடந்த செவ்வாய்க்கிழமை வரை விறுவிறுப்பாக நடந்து வந்த கமலின் உத்தமவில்லன் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு சென்னைக்கு வந்து விட்டார்களாம். ஆக, கர்நாடகத்தில் தொழிலாளர் பிரச்னை தீரும் வரை படப்பிடிப்பை சென்னையிலேயே தொடரப்போகிறார்களாம்.


இதனால் 3 மாதங்களாக நடைபெறவிருந்த உத்தமவில்லன் படத்துக்காக மொத்த கால்சீட்டை கொடுத்திருந்த நடிகர்-நகைகள் அடுத்து எப்போது படத்தை தொடங்குவார்களோ என்று பயந்து கொண்டிருந்தவர்கள், உடனடியாக சென்னையில் படப்பிடிப்பு தொடரவிருப்பதால் நிம்மதி அடைந்துள்ளனர்.

0 comments:

Post a Comment