Saturday 22 March 2014

சின்ன விஷயங்களின் பெரிய அற்புதம்...!



மஞ்சள்

இந்தியக் கலாசாரத்தில் மஞ்சளுக்கு முதலிடம் அளிக்கப்படுகிறது. வாயிற்படிகளில் மஞ்சள் பூசுவதற்கும் மஞ்சள் கரைத்த தண்ணீரை வீடுகளில் தெளிப்பதற்கும் அதில் உள்ள கிருமிகளை அழிக்கும் தன்மையே காரணம். மஞ்சள் நிறத்துக்கு நுண் அறிவையும், புத்தி சாதுர்யத்தையும் அதிகப்படுத்தும் திறன் உண்டு என்றும் அதன் வாசனை மன நிம்மதியைத் தரும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. இது உணவுகளில் பயன்படுத்துகின்ற ஒரு சாதாரணப் பொருளாக மட்டுமின்றி, உலக நாடுகளே பிரமிக்கின்ற அளவு மருத்துவத் தன்மை கொண்டுள்ளது. அந்த மஞ்சளை எளிய முறையில் பயன்படுத்தி அதன் அபார ஆற்றலைப் பெற்று உடலினை உறுதி செய்வோம்!

என்ன செய்ய வேண்டும்?

இரண்டு சிட்டிகை மஞ்சள் தூளை எடுத்து சூடான பாலிலோ அல்லது நீரிலோ போட்டுக் கொதிக்கவைத்துக் குடிக்கவும்.


என்ன பலன்?

* நிறத்தைக் கூட்டும் வைட்டமின்கள் இருப்பதால், உடலுக்கு நல்ல நிறத்தையும் மேனி எழிலையும் உண்டாக்கும்.

* ரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை மஞ்சளுக்கு உண்டு.

* சூரியனில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சின் பாதிப்பில்லாமல் தோலினைப் பாதுகாக்கும் அற்புதமான சக்தி மஞ்சளில் அடங்கியிருக்கிறது.

* மஞ்சளில் உள்ள குர்குமின் புற்று நோய் வருவதைத் தடுக்கும் ஆற்றல் பெற்றுள்ளதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

* சளி, ஜலதோஷம், மூக்கடைப்பு, வறட்டு இருமலைக் கட்டுப்படுத்தும்.

* மிகச் சிறந்த கிருமிநாசினியாக இருப்பதால் நோய்த்தொற்றில் இருந்து நம்மைக் காக்கிறது.

* வயிற்றுப் புண்ணைக் குணப்படுத்தும் சக்தி பெருமளவில் உள்ளது.

யாருக்கு எல்லாம் முக்கியம்?

உடல் நலனில் அக்கறை வைத்து, கிருமித்தொற்றின் பிடியில் இருந்து தன்னைக் காத்துக்கொள்ள நினைக்கும் அத்தனை பேருக்கும் முக்கியம்தான்.

0 comments:

Post a Comment