கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில், கமல்-அசின் இணைந்து நடித்த படம் தசாவதாரம். அந்த படத்தில் கமல் பத்து விதமான மாறுபட்ட கெட்டப்புகளில் நடித்திருந்தார்.
அப்படத்தின் ஆடியோ விழா சென்னையிலுள்ள நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. அப்போது ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசானை வரவைத்து வெளியிட்டார்கள். அது தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய பதிவானது.
அதையடுத்து, தசாவதாரம் படத்தை தயாரித்த அதே ஆஸ்கர் பிலிம்ஸ் தற்போது ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் தயாரித்து வரும் ஐ படத்தின் ஆடியோ விழாவையும் பிரமாண்டப்படுத்த முடிவு செய்திருப்பதாக கோடம்பாக்கத்தில் பரபரப்பு செய்தி உலவிக்கொண்டிருக்கிறது.
குறிப்பாக, இந்த முறையும் ஒரு சர்வதேச நடிகரை ஐ படத்தின் ஆடியோ விழாவுக்கு அழைக்க அப்பட தயாரிப்பாளரான ரவிச்சந்திரன் முடிவு செய்திருக்கிறாராம்.
ஆனால் அந்த சர்வதேச பிரபலம் ஹாலிவுட் நடிகர் அர்னால்டாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
தற்போது ஐ படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது நடந்து கொண்டிருப்பதால், விரைவில் ஆடியோ விழா பற்றியும் அதில் கலந்து கொள்ளும் உலக பிரபலங்கள் பற்றியும் வெளியிட இருக்கிறார்களாம்.
0 comments:
Post a Comment