Saturday 5 April 2014

கோடையில் உடலை புத்துணர்ச்சியுடன் வைக்கும் 24 பழங்கள்..!



கோடையில் உடலில் நிறைய பிரச்சனைகள் ஏற்படும். எனவே உணவுப் பழக்கவழக்கங்களை மாற்றிக் கொண்டால், தான் பிரச்சனைகளை போக்கி, ஆரோக்கியமாகவும், நாள் முழுவதும் சக்தியுடனும் நன்கு செயல்பட முடியும். குறிப்பாக பழங்களை அதிகம் சாப்பிட வேண்டும். ஏனெனில் பழங்களில் அதிகமான நீர்ச்சத்து இருப்பதோடு, இதர சத்துக்களும் நிறைந்துள்ளன.

தர்பூசணி :-

தர்பூசணியில் நீர்ச்சத்து அதிகம் நிறைந்திருப்பதாலும், கோடையில் இது அதிகம் கிடைப்பதாலும், இதனை அதிகம் சாப்பிடுவது, உடலை வறட்சியின்றி வைப்பதோடு, இதில் உள்ள லைகோபைன், சூரியக்கதிர்களின் தாக்கத்தில் இருந்து சரும செல்களை பாதுகாத்து, சரும புற்றுநோய் வருவதை தடுக்கும்.

ஆரஞ்சு:-

ஆரஞ்சு பழத்தில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இவை உடலில் ஆங்காங்கு தங்கியுள்ள மாசுக்களை வியர்வையின் மூலம் வெளியேற்றி, தசைப்பிடிப்புகள் ஏற்படாமல் தடுக்கும்.

திராட்சை :-

திராட்சை பசியையும், தாகத்தையும் தணிக்கும் சக்தி கொண்டவை. மேலும் இது இரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது. அதுமட்டுமின்றி. இதில் உள்ள பைட்டோகெமிக்கல், புற்றுநோய், இதய நோய் மற்றும் நரம்பு தொடர்பான பிரச்சனைகளை தடுக்கும்.

அன்னாசி :-

அன்னாசி பழத்தில் ப்ரோமெலைன் என்னும் நொதி இருப்பதால், அது புரோட்டீன் மற்றும் கொழுப்புக்களை எளிதில் கரையச் செய்யும். கோடையில் சாப்பிடுவதற்கு ஏற்ற பழங்களுள் இது மிகவும் சிறந்தது.

மாம்பழம் :-

பழங்களின் ராஜாவான மாம்பழம், கோடையில் அதிகம் கிடைக்கும். மாம்பழத்தில் இரும்புச்சத்து மற்றும் செலினியம் போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளது. எனவே முடிந்த அளவில் இதனை சாப்பிட்டு உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ளலாம்

ஸ்ட்ராபெர்ரி:-

பெர்ரி பழங்களே மிகவும் சிறந்தது. அதிலும் குறிப்பாக ஸ்ட்ராபெர்ரியை சாப்பிட்டால், கோடையில் ஏற்படும் பிரச்சனையாக சிறுநீரக பாதையின் ஏற்படும் நோய் தொற்றுகளை தவிர்க்கலாம்.

எலுமிச்சை :-

சிட்ரஸ் பழங்களில் ஒன்றான எலுமிச்சையை ஜூஸ் போட்டு, கோடையில் அவ்வப்போது குடித்தால், தாகம் தணிவதோடு, உடலுக்கு வேண்டிய வைட்டமின் சி சத்தும் கிடைக்கும்

ஆப்ரிக்காட் :-

வசந்த காலத்தின் இறுதியிலும், கோடையின் ஆரம்பத்திலும் அறுவடை செய்யப்படும் பழங்களில் ஒன்று தான் ஆப்ரிக்காட். இந்த பழத்தில் பொட்டாசியம், மக்னீசியம், வைட்டமின் சி, பீட்டா கரோட்டீன், இரும்புச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே கோடையில் இதனை சாப்பிட்டு, இதில் உள்ள சத்துக்களை பெற்று உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.

செர்ரி :-

அடர் சிவப்பு நிற செர்ரிப் பழங்கள் மிகவும் சுவையுடன் இருப்பதோடு, ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்தவை. இது கோடையில் சாப்பிடுவதற்கு ஏற்ற பழம்.

வாழைப்பழம் :-

வாழைப்பழத்திலும் பொட்டாசியம் அதிகம் நிறைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், அதிகமாக இரும்புச்சத்து இருப்பதால், இது உடலை வலுவோடும், சுறுசுறுப்புடனும் இருக்கச் செய்யும்

பீச் :-

பீச் பழத்தில் பீட்டா கரோட்டீன் மற்றும் வைட்டமின் சி நல்ல அளவில் உள்ளது. இதனை கோடையில் சாப்பிட்டால், சருமத்தை அழகாக வைத்துக் கொள்ளலாம்.

நெல்லிக்காய்:-

முக்கியமாக நெல்லிக்காயை தவிர்க்கக்கூடாது. ஏனெனில் இதில வைட்டமின் சி, கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து அதிகம் உள்ளது.

ப்ளாக்பெர்ரி :-

பெர்ரியில் ஒன்றான ப்ளாக்பெர்ரியில் (Blackberry) பாலிஃபீனால் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளதால், அவை சரும செல்களை பாதுகாக்கும். மேலும் இது கோடையில் விலை மலிவுடன் கிடைக்கக்கூடியது. ஆகவே முடிந்த வரையில் இதனை வாங்கி சாப்பிட்டு நன்மையை பெறுங்கள்.

பப்பாளி :-

பப்பாளியில் பப்பைன் மற்றும் கைமோபப்பைன் நொதிகள் இருப்பதால், இவை புரோட்டீன்கள் எளிதில் செரிமானமடைய உதவியாக இருக்கும்

முலாம் பழம் :-

கோடையில் தவறாமல் சாப்பிட வேண்டிய பழம் தான் முலாம் பழம் (Muskmelon). இதில் நீர்ச்சத்து அதிகமாக நிறைந்துள்ளது. மேலும் இந்த பழத்தில் வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் ஜிங்க் அதிகம் உள்ளது.

கொய்யா :-

கொய்யாப் பழத்தில் கொழுப்புக்கள் மற்றும் கலோரிகள் குறைவாக இருக்கிறது. மேலும் இதில் வைட்டமின் சி-யும் இருக்கிறது. இது சளி, இருமல், வயிற்று போக்கு போன்ற கோடையில் ஏற்படும் பிரச்சனைகளை தடுக்கவல்லது.

இளநீர் :-

தினமும் காலையில் எழுந்ததும் இளநீரைக் குடித்தால், உடல் மிகவும் வலுவோடு ஆரோக்கியமாக இருக்கும். மேலும் இது தாகத்தையும், பசியையும் தணிக்க வல்லது.

ஓஜென் :-

மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறம் கலந்து, சிறிய பந்து போன்று காணப்படும் பழம் தான் ஓஜென் (Ogens). இவை மிகவும் சுவையானது மற்றும் ஆரோக்கியமானது. இது தேனின் சுவையுடையது.

அத்திப் பழம் :-

அத்திப்பழத்திலும் பொட்டாசியம் அதிகம் உள்ளதால், இது உடலை புத்துணர்ச்சியுடன் வைப்பதோடு, கோடையில் ஆரோக்கியமாகவும் வைக்கும்

கேனரி பழம் :-

அடர் மஞ்சள் நிற கேனரி பழம் (Canary melon), உடலை புத்துணர்ச்சியுடன் வைக்க உதவும். மேலும் இதில் பொட்டாசியம், வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி அதிகமாகவும், கலோரி குறைவாகவும் உள்ளது.

லிச்சி :-

லிச்சி பழத்தில் புரோட்ஐன், வைட்டமின்கள், கொழுப்பு, சிட்ரிக் ஆசிட், பெக்டின், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. ஆகவே இத்தகைய பழத்தை கோடையில் ஜூஸ் போட்டு குடித்தால், உடல் நன்கு குளிர்ச்சியுடன் இருக்கும்

ப்ளம்ஸ் :-

ப்ளம்ஸ் பழத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. மேலும் இது செரிமானத்திற்கும் மிகவும் சிறந்த பழம். அதுமட்டுமின்றி இது நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்குவதோடு, கோடையில் ஏற்படும் தொற்றுநோய்களை தடுக்கும்.

கிவி :-

கிவி பழம் இனிப்பாக இல்லாவிட்டாலும், இதில் வைட்டமின் சி நல்ல அளவில் நிறைந்துள்ளது. அதிலும் இதில் ஆரஞ்சில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டை விட இரண்டு மடங்கு அதிகமாக ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளது

நெக்ட்ரைன் (Nectarines) :-

இதுவும் பீச் பழத்தைப் போன்று தான் இருக்கும். இதில் புறஊதாக்கதிர்களால் பாதிக்கப்படும் சரும செல்களை பாதுகாக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் உள்ளது

0 comments:

Post a Comment