Wednesday 19 March 2014

மாயமான மலேசிய விமானம் ராடார் பார்வையில் இருந்து மறைந்தது எப்படி? திடுக்கிடும் தகவல்...!



கடத்தப்பட்ட மலேசிய விமானம் காணாமல் போவதற்கு சில நிமிடங்கள் முன்பு ராடாரின் பார்வையில் இருந்து தப்பியது எப்படி என்பதை தற்போது மலேசிய விமான நிலைய அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.


கோலாலம்பூரில் இருந்து கிளம்பிய விமானம் டேக் ஆப் செய்த சிறிது நேரத்தில் சுமார் 45,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்ததாகவும்,


 அந்த விமானம் திடீரென ராடாரின் பார்வையில் இருந்து மறைவதற்கு முக்கிய காரணம் திடீரென அந்த விமானம் மிகவும் தாழ்வாக அதாவது 5,000 அடி உயரத்தில் பறந்ததாகவும் கூறப்படுகிறது.


விமானம் மிகவும் தாழ்வாக, அதாவது lower altitude என்ற பகுதியில் பறந்தால், அந்த விமானம் ராடாரின் பார்வையில் இருந்து மறைந்துவிடும். Higher attitude பகுதியில் பறந்தால் மட்டுமே ராடாரின் தெரியும்.


இந்த விபரங்களை நன்கு தெரிந்த, அனுபவமுள்ள பைலட், வேண்டுமேன்ற விமானத்தை 5000 அடி உயரத்திற்கு பறக்க வைத்துள்ளார். 10000 அடிக்கு குறைவாக விமானம் மிகவேகமாக பறந்தால்,


விமானத்தின் உள்ளே அழுத்தம் அதிகமாகி, விபத்து ஏற்பட வாய்ப்புகள் அதிகம் என்று தெரிந்தும் மிகப்பெரிய ரிஸ்க் எடுத்து விமானத்தை தாழ்வாக பறக்க வைத்துள்ளார் விமானி.


ஒருசில இடங்களில் பறக்கும்போது, 5000 அடிக்கும் கீழே பறந்துள்ளதாகவும் தெரிகிறது. பெரிய மரங்கள், மலைகள் இவற்றின் மீது மோதுவதற்காஅ அபாயம் இருந்ததாகவும் கூறப்படுகிறது.


மேலும் மலேசியாவில் Kelantan என்ற பகுதியில்தான் இந்த விமானம் மிகவும் தாழ்வாக பறந்ததாகவும், சம்பவ தினத்தன்று மிக அதிகளவிலான ஏதோ ஒரு சத்தம் கேட்டதாக Kelantan பகுதிகளில் உள்ள கிராமத்தினர் கூறியதாகவும் தெரிகிறது.


அதுமட்டுமின்றி மிகப்பெரிய வெளிச்சம் ஒன்று வானில் தெரிந்ததாகவும், கூறுகின்றனர்.


இவர்கள் சொல்வதை வைத்தும், ராடாரின் பார்வையில் இருந்து மறைவதற்காக விமானி வேண்டுமென்ற மிகவும் தாழ்வாக விமானத்தை பறக்க வைத்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது

0 comments:

Post a Comment