Monday, 10 March 2014

ஒரு வேளையை ஒழுங்கா செய்யனும்..இல்லனா இப்படித்தான் நடக்கும்...!



தமிழ்த் திரையுலகில் குறிப்பிடத்தக்க இசையமைப்பாளர்களில் ஒருவராகத் திகழ்ந்துவரும் ஜி.வி.பிரகாஷ்குமார் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளாராம்.


கடந்த 2006 ஆம் ஆண்டு வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான வெயில் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி.பிரகாஷ்குமார்.


அறிமுகப்படத்திலேயே பலரது கவனத்தையும் ஈர்த்து மிக விரைவில் முன்னணி இசையமைப்பாளராகவும் உயர்ந்தார்.

ஒரு இசையமைப்பாளராக மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ள ஜி.வி.பிரகாஷ்குமார் தற்பொழுது பென்சில் திரைப்படத்தில் நடித்துவருவதன் மூலம் நடிகராகவும் உருமாறியிருக்கிறார்.


பென்சில் திரைப்படத்தில் நடித்துவரும் இப்பொழுதே நடிப்பதற்கு ஏராளமான வாய்ப்புக்கள் வந்து கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.


தொடர்ந்து நடிப்பில் ஈடுபட்டால் இசையமைப்பில் தனக்குக் கிடைக்க வேண்டிய வாய்ப்புக்கள் பாதை மாறிச் சென்றுவிடும் என்பதால் தொடர்ந்து நடிப்பதா அல்லது இசையமைப்பதா என்று ஜி.வி.பிரகாஷ்குமார் குழம்பிவருகிறாராம்.


அதே சமயம் பென்சில் திரைப்படம் வெளியான பிறகே தான் நடிக்கும் அடுத்த படத்திற்குக் கதை கேட்பேன் என்றும் தன்னிடம் கதை கூறவரும் இயக்குனர்களிடம் சொல்லிவருகிறாராம்


0 comments:

Post a Comment