Tuesday 4 March 2014

உடற்பயிற்சிக்கு முன் கார்டியோ பயிற்சிகள் அவசியம்..!



உடலில் அதிக கொழுப்பு தங்கும் இடம் வயிறு. வயிற்றில் எலும்பு இல்லாததால் எளிதில் கொழுப்பு சேர்ந்து விடும். நமது இலக்கு ஆரோக்கியமான அழகான வயிற்றுப்பகுதி என்பதை மனதில் கொண்டு பயிற்சிகள் செய்தால் தொப்பையின்றி ஆரோக்கியமாக இருக்கலாம்.

வயிற்றுக்காக பரிந்துரைக்கப்படும் இந்த பயிற்சிகளை தொடர்ந்து மூன்று மாதங்கள் செய்தால் அழகான வயிறு நிச்சயம். அதிக கலோரிகளை சுலபமாக எரிக்க உடற்பயிற்சி செய்வதற்கு முன் கார்டியோ பயிற்சிகள் செய்ய வேண்டும். கார்டியோ பயிற்சியாக வாக்கிங், ஜாக்கிங், சைக்கிளிங் போன்றவற்றை செய்யலாம்.

பயிற்சிகளை வெறும் வயிற்றில் தான் செய்ய வேண்டும். சாப்பிட்ட ஒன்றரை மணி நேரம் கழித்து உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும். விடாமல் தொடர்ந்து பயிற்சிகளை செய்தால் மட்டுமே முழுபலனையும் அடைய முடியும்.

• தரையில் நேராக படுத்து கொள்ள வேண்டும். வயிற்றை உள்ளிழுந்து குறைந்தபட்சம் 10 வரை வாய்விட்டு எண்ண வேண்டும். இதுவே வயிற்று தசைகளுக்கான ஆரம்பபட்டப் பயிற்சி.

• பேசிக் க்ரஞ்சஸ் : தரையில் நேராக படுத்துகொள்ள வேண்டும். இரண்டு கால் முட்டிகளையும் மடக்கி வைக்க வேண்டும். கைகளை தலைக்கு பின் கட்டி, உடலின் மேல் பகுதியை முட்டி வரையில் கொண்டு செல்ல வேண்டும். இதனால் வயிற்றுப் பகுதி அழுத்தப்படுகிறது. வயிற்றில் உள்ள கொழுப்பு கரைந்து மேல் வயிற்று தசை வலிமை அடையும்.

• லெக் ரோவிங் (leg rowing) :

தரையில் நேராக படுத்து கொள்ள வேண்டும். இரு கைகளையும் உடலுக்கு அருகில் வைத்து உள்ளங்கையை தரையில் பதிக்க வேண்டும். இப்போது கால் முட்டிகளை மடித்து பாதத்தை மேலே உயர்த்த வேண்டும்.

இந்த நிலையில் இருந்து இரு முட்டிகளையும் மார்பு வரை கொண்டு வந்து மீண்டும் பழைய நிலைக்கு செல்ல வேண்டும். தொடர்ந்து மூன்று நிமிடங்கள் இந்த பயிற்சியை செய்யும் போது கீழ் வயிற்று பகுதியில் உள்ள கொழுப்பு கரைந்து தரை வலிமை அடையும்.

• ஃபுல் கர்ல் அப் (full curl up) :

தரையில் நேராக படுத்த கொள்ள வேண்டும். இப்போது கால்களை மேலே உயர்த்த வேண்டும். அதே நேரத்தில் மேல் உடலை வளைத்து இரண்டு கைகளையும் கொண்ட கால் விரல்களை தொட முயற்சிக்க வேண்டும். பின்னர் பழைய நிலைக்கு திரும்ப வேண்டும். இப்படி தொடர்ந்து 10 முறை செய்ய வேண்டும். 

0 comments:

Post a Comment