வறுமையுடன் போராடிக்கொண்டிருந்த மனோரமா, நாடக நடிகையானார். அப்போது அவருடைய காதல் திருமணம் நடந்தது.
மனோரமாவும், அவரது தாயாராகும் வேலையில்லாமல் கஷ்டப்பட்டு வந்த நேரத்திலும், மனோரமாவின் இலவச பாட்டுக் கச்சேரி அனைத்து மங்கல நிகழ்ச்சிகளிலும் நடந்துகொண்டு இருந்தது.
இந்த நிலையில் கோட்டையூரில் ஏகாதசி நாள் விழா நடந்தது. அன்றைய தினம் இரவு ‘அந்தமான் காதலி’ என்ற நாடகம் நடந்தது. அந்த நாடகத்தில் பெண் வேடம் போட்டவருக்கு பாட வராது எனவே, அவருக்காக பாடவும், நாடகத்திற்கு இடையே நடனம் ஆடவும் ஒரு பெண்ணைத் தேடினார்கள். அந்த வாய்ப்பு மனோரமாவுக்கு கிடைத்தது.
இந்த நாடகத்தில் பணிபுரிந்த டைரக்டர் சுப்பிரமணியன், உதவியாளர் திருவேங்கடம், ஆர்மோனிய வித்வான் தியாகராசன் ஆகியோர் வெகுவாக பாராட்டியதோடு, மனோரமா என்ற பெயரையும் வைத்தார்கள்.
கோட்டையூர் நாடகத்திற்கு எலக்ட்ரீசியனாக இருந்த பால்ராஜ் என்பவர், மனோரமாவின் திறமையை பார்த்து வியந்தார். புதுக்கோட்டையில் நடந்த ‘விதியின் விசித்திரம்’ என்ற நாடகத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடிக்க மனோரமாவுக்கு வாய்ப்பு வாங்கிக் கொடுத்தார். வெறுமனே பாடியும், நடனமாடியும் வந்த மனோரமா, நாடக நடிகையானார். அதன் பிறகு அவர்கள் பசிக் கவலையும் மெல்ல, மெல்ல மறைந்தது.
அதன் பின்னர், எலக்ட்ரீசியன் பால்ராஜ் எழுதி தயாரித்த ‘யார் மகன்?’ என்ற நாடகத்தில் கதாநாயகியாக நடித்தார். சித்தன்னவாசலில் நடந்த இந்த நாடகத்திற்கு டைரக்டர் ‘வீணை’ எஸ். பாலசந்தர் தலைமைதாங்கினார்.
நாடகத்தின் இடைவேளையில் அந்த நாடகத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்தவருக்கு ஒரு வெள்ளி டம்ளரை பரிசளிக்கும்படி டைரக்டர் எஸ். பாலசந்தரிடம் கொடுத்தனர். அதை வாங்கிக்கொண்டு நாடகத்திற்கு தலைமை தாங்கி பேசிய எஸ். பாலசந்தர், ‘இந்த நாடகத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்த பெண்மணிக்கு பரிசு கொடுக்குமாறு என்னிடம் ஒரு வெள்ளி டம்ளரை தந்து இருக்கிறார்கள். ஆனால் நியாயமாக இந்த பரிசை, சிறந்த முறையில் கதாநாயகியாக நடித்த மனோரமா வுக்குத்தான் தரவேண்டும் என்றார். அதன் பிறகு, மனோரமாவுக்கு பரிசு வழங்கப்பட்டது.
மனோரமா தொடர்ந்து பல நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். திருச்சி டால்மியாபுரத்திலிருந்து, ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் தாண்டி, மதுரை வரை அந்த நேரம் யாரும் அசைக்க முடியாத பிரபல நடிகையாகிவிட்டார்.
அந்தக் காலக் கட்டத்தில் வட இந்திய திரை உலகில் புகழ்பெற்று விளங்கிய நடிகை சுரையாவை ஒப்பிட்டு, தென்னாட்டு சுரையா மனோரமா’ என்று விளம்பரம் செய்தார்கள்.
சபா நாடகக் குழுவில் மனோரமா நடித்துக்கொண்டு இருந்தபோது, அந்த சபாவில் முக்கிய பொறுப்பில் இருந்த எஸ். எம். ராமநாதன், மனோரமாவை காதலித்தார்.
அந்தக் காதலை மனோரமா ஏற்றுக்கொண்டார். மனோரமா- ராமநாதன் திருமணம் திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடைபெற்றது.
இளம் வயதில் வறுமையால் வாடினார். தாயாருடன் தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு வாழ்க்கையின் ஓரத்துக்குச் சென்றார். பிறகு எதிர்நீச்சல் போட்டு புகழின் சிகரத்தை அடைந்தார். அவர்தான் ‘மெல்லிசை மன்னர்’ எம். எஸ். விஸ்வநாதன்.
எம். எஸ் விஸ்வநாதனின் சொந்த ஊர் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள இலப்புள்ளி கிராமம்.
தந்தை பெயர் சுப்பிரமணியன். தாயார் நாராயணி. கேரள வழக்கப்படி ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு பரம்பரை பெயர் உண்டு. ‘மனையங்கத் ஹவுஸ்’ என்பது எம். எஸ். விஸ்வநாதனின் பரம்பரை பெயர் அதனால்தான் மனையங்கத் சுப்பிரமணியன் விஸ்வநாதன் என சேர்த்து ‘எம். எஸ். விஸ்வநாதன் ஆனார்.
0 comments:
Post a Comment