Monday 3 March 2014

மெமரி கார்டு பார்மேட் ஆகலையா...? - இதப்படிங்க..!



இன்றைக்கு மொபைல் போன்கள், கேமராக்கள், லேப்டாப் கம்ப்யூட்டர்கள் என அனைத்து டிஜிட்டல் சாதனங்களிலும் நாம் அனைவரும் பயன்படுத்துவது எஸ்.டி. கார்ட்களே. மிகச் சிறிய இந்த கார்ட்களில் நாம் பல ஜிபி டேட்டாக்களைப் பதிந்து எடுத்துச் செல்லலாம்.

மேலே கூறப்பட்ட சாதனங்களில் வைத்து, தகவல்களை எளிதாகப் பதியலாம். தொல்லை அற்ற இந்த கார்டுகள், சில வேளைகளில் நாம் எதிர்பார்த்த செயல்பாட்டினை மேற்கொள்ளாது.

அந்த வேளைகளில் நாம் சற்றுப் பொறுமையினை இழந்து, கார்டினைக் குறை கூறத் தொடங்குவோம்.

இந்த கார்ட் பயன்படுத்துவதில் நாம் சந்திக்கும் பிரச்னைகளையும் அதற்கான தீர்வுகளையும் இங்கு காணலாம்.

பலரின் மனதில் தோன்றும் ஒரு கேள்வியை முதலில் காணலாம். இந்த கார்டுகளில் உள்ள டேட்டாவினைக் காந்தக் கதிர்கள் அழிக்குமா? அல்லது சிதைக்குமா? என்பதுதான்.

காந்தக் கதிர்கள் எளிதில் அழிக்கும் அளவிற்கு ப்ளாஷ் மெமரி கார்டுகள் செயல்படுவதில்லை.

காந்தக் கதிர்கள் டேட்டாவினை அழிக்கும். ஆனால், அதனைச் சாதாரணமாக நாம் வீடுகளில், அலுவலகங்களில் பயன்படுத்தும் காந்தங்கள் அழிப்பதில்லை.

மிக மிக சக்தி வாய்ந்த காந்தத் தகடுகளால் மட்டுமே, இந்தக் கார்டுகளில் உள்ள டேட்டாவினைச் சிதைக்க முடியும்.

எனவே, காந்தம் அருகே கொண்டுபோனதால், நம் எஸ்.டி. கார்ட் கெட்டுப் போய்விட்டது என்ற மாயையிலிருந்து விடுபடுவோம்.

இருப்பினும், பல்வேறு காரணங்களினால், நம்மால் சில வேளைகளில் எஸ்.டி. கார்டினைப் பயன்படுத்த முடியாமல் போய்விடும்.

கீழே இந்த தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்துவோர் சந்திக்கும் ஆறு வகையான சூழ்நிலை குறித்து விளக்கப்படுகிறது.


0 comments:

Post a Comment