Monday 3 March 2014

ஆஸ்கார் விருதுகள் – 2014 பட்டியல் - இம்முறை இந்தியருக்கு நோ சான்ஸ்..!

உலகத் திரைப்படங்களை கௌரவிக்கும் வகையில் வழங்கப்படும் மிக உயரிய விருதான ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா இந்திய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை இரவு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டோல்பை திரையரங்கிளல் மார்ச் 2ம் தேதி 86வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா நடைபெற்றது.இம்முறை இந்த விருதுக்காக இந்திய கலைஞர்கள் யாரும் பரிந்துரைக்கப்படவில்லை என்பதால் இந்தியருக்கு எந்த சான்ஸும் இல்லாமல் போய்விட்டது.அதே சமயம் பலராலும் பாராட்டப்பட்ட கிராவிட்டி படம் 7 விருதுகளை தட்டிச் சென்றது.

oscars_redcarpet_

உலகிலேயே அதிகளவில் தொலைக்காட்சி மற்றும் இணையதளம் மூலம் பார்வையிடப்படும் விருது வழங்கும் விழாக்களில் முதன்மையான விழாவாக ஆஸ்கார் விழா இருக்கிறது. இது அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து படங்களுக்கு இணைந்து வழங்கபடுகிறது. முதலில் எந்தெந்த படங்கள் இறுதி சுற்று வரை செல்ல வேண்டும் என்பது நடுவர்கள் தீர்மானிப்பார்கள். பின்பு இறுதி சுற்றில் ஒவ்வொரு விருதிற்கும் 5 திரைப்படங்கள் போட்டியிடும், இறுதியில் எந்த படத்திற்கு விருது என்பதை நடுவர் குழுவும் ஆஸ்கார் குழுவும் தீர்மானிக்கும்.

இதனிடையே உலக திரைப்பட பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் பெருமளவில் கலந்து கொண்டுள்ள இவ்விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை மேத்திவ் மெக்கோனஹே (Matthew McConaughey ), ’Dallas Buyers Club’ என்ற படத்தில் நடித்ததற்காகப் பெற்றுள்ளார்.இந்த படத்தில் ‘எச்ஐவி’ நோயாளியாக நடிக்க 40 பவுண்டு எடை குறைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது..

சிறந்த நடிகைக்கான விருதை கேட் பிளான்செட் (Cate Blanchett) புளூ ஜாஸ்மின் (Blue Jasmine) படத்தில் நடித்ததற்காகப் பெற்றுள்ளார்.இவ்வாண்டின் சிறந்த படமாக ஆஸ்கார் விருத்துக்கு தேர்ந்தெடுக்கப்படவிருக்கும் படம் எது என்று அனைவரும் எதிர்பார்த்திருக்கும் வேளையில், சிறந்த படத்திற்கான விருது ’12 ஆண்டுகள் அடிமை – 12 Years A Slave) படத்திற்குக் கிடைத்துள்ளது.சிறந்த இயக்குநருக்கான விருதை அல்போன்ஸோ குவாரான்( Alfonso Cuaron) கிராவிட்டி படத்திற்காகப் பெற்றுள்ளார்.

oscars_gravity

 மேலும் . டால்லஸ் பயர் கிளப் என்ற படத்தில் நடித்த துணை நடிகர் ஜார்டு லெட்டோவுக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது.

* சிறந்த துணைநடிகர் – ஜார்டு லெடோ

* சிறந்த ஆடை வடிவமைப்பாளர் – கேத்ரின்

* ஒப்பனை கலைஞர்கள் – மாத்யூஸ் மற்றும் லீ தேர்வு

* சிறந்த குறும்படம் – ஹீலியம்

* சிறந்த அனிமேஷன் திரைப்படம் – ஃப்ரோஸன்

* சிறந்த சவுண்ட் எடிட்டிங் – கிராவிட்டி

* சிறந்த ஒலிக்கலவை – கிராவிட்டி

* சிறந்த திரைப்பட எடிட்டிங் – கிராவிட்டி

* சிறந்த ஒரிஜினல் ஸ்கோர் – கிராவிட்டி

* சிறந்த ஒளிப்பதிவு- கிராவிட்டி

* சிறந்த துணை நடிகை – லுபிடா நியாங்

* சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு – தி கிரேட் ப்யூட்டி

* சிறந்த அனிமேஷன் குறும்படம் – Mr.Hublot

* சிறந்த திரைக்கதை – ஸ்பைக் ஜோன்ஸ்

* சிறந்த தழுவல் திரைக்கதை – 12 Years A Slave


0 comments:

Post a Comment