பாலா இயக்கும் படம் என்றால் அப்படத்தில் நடிக்கும் நடிகர் - நடிகைகளின் கெட்-அப்பை அப்படியே மாற்றி விடுவார் பாலா!
’சேது’ படத்தில் விக்ரமின் மொட்டை கெட்-அப்,
‘நந்தா’ படத்தில் சூர்யாவின் மாறுபட்ட தோற்றம்,
‘நான் கடவுள்’ படத்தில் ஆர்யாவின் மிரட்டும் கெட்-அப் -
இப்படி பாலா இயக்கிய அத்தனை படங்களிலும் ஹீரோக்களை மாறுபட்ட கெட்-அப்களில் காட்டியிருப்பார்!
பாலாவின் அடுத்த பட ஹீரோ சசிகுமார்!
கரகாட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்படும் இப்படத்திற்காக சசிகுமாரையும் பாலா விட்டு வைக்கவில்லை!
சசிகுமார் என்றாலே எல்லோருக்கும் உடனே நினைவுக்கு வருவது அவரது அழகான அந்த தாடி தான்!
ஆனால் சசிகுமார் முகத்தில் இப்போது அந்த தாடி மிஸ்ஸிங்!
அத்துடன் எப்போதும் அடர்த்தியான மீசையுடன் காட்சி அளிக்கும் அவர் முகத்தில் இப்போது பென்சில் மீசை!
இப்போது, கிட்டத்தட்ட மறைந்த காமெடி நடிகர் சந்திரபாபுவை போல காட்சி அளிக்கும் சசிகுமார்,
இந்த கெட்-அப்போடு சமீபத்தில் பாண்டி பஜாருக்கு சென்று அங்குள்ள டீ கடை ஒன்றில் டீ குடித்திருக்கிறார்!
ஆனால் அங்கிருந்த ஒருவர் கூட சசிகுமாரை அடையாளம் காணவில்லையாம்!
எல்லாம் பாலாவின் மேஜிக்தான்!
0 comments:
Post a Comment