Friday 7 March 2014

அதிக பணக்காரர்கள் பட்டியலில் இந்தியாவுக்கு 4வது இடம்..!



எதிர் வரும் 2023ம் ஆண்டில் உலக நாடுகளில் அதிக பணக்காரர்கள் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 4வது இடத்தில் இருக்கும் என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. நாட்டின் வர்த்தக நகரமாக விளங்கும் மும்பையில் மட்டும் 30 கோடீஸ்வரர்கள் இருக்கின்றனர்.

 உலக அளவில் அதிக கோடீஸ்வரர்களை கொண்ட டாப்-5 நகரங்களில் 5-வது நகரமாக மும்பை விளங்குகிறது என்பதுடன் கடந்த 25 ஆண்டுகளில் ஒரு சில பணக்காரர்களிடம் மட்டுமே பணம் குவிந்ததாதகவும் அதிலும் ஒரு சதவீத குடும்பங்களிடம் 46 சதவீத வளம் குவிந்திருப்பதாகவும் மற்றொரு ஆய்வில் தெரிய வந்தது குறிப்பிடத்தக்க்து

அமெரிக்காவைச் சேர்ந்த, ‘நைட் பிராங்’ என்ற தனியார் நிறுவனம் இந்த நிறுவனம் உலகம் முழுவதும் உள்ள பணக்காரர்களின் செல்வ செழிப்பு மற்றும் சொத்துகள் குறித்து ஆய்வு செய்து, ‘2014 செல்வ செழிப்பு அறிக்கை’ ஒன்றை தயாரித்து வெளியிட்டுள்ளது. அதில்:”வரும் 2023ம் ஆண்டில் உலகிலேயே அதிக அளவில் பணக்காரர்கள் உள்ள நாடாக இந்தியா உருவாகும்.

உலக நாடுகளில் அதிக பணக்காரர்கள் உள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யாவிற்கு அடுத்தபடியாக இந்தியா 4வது இடத்தில் இருக்கும். மேலும் இங்கிலாந்து, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் உள்ள பணக்காரர்களை விட இந்தியாவில் அதிக பணக்காரர்கள் இருப்பார்கள்.

இந்தியாவில் 100 மில்லியன் டாலர் அளவிற்கு சொத்து வைத்து இருப்பவர்கள் எண்ணிக்கை கடந்த ஆண்டு 383 ஆக இருந்தது. இது 2023ல் 761 ஆக அதிகரிக்கும். உலகில், ‘டாப் 10 சிட்டி’ வரிசையில் மும்பை நகரமும் 2024ம் ஆண்டில் இடம் பிடிக்கும்.

உலகில் உள்ள முக்கிய நகரங்களில் வசிப்பவர்கள் திருட்டு போன்ற குற்றங்கள், மாசு, பயணம் செய்யும் போது ஏற்படும் சிக்கல்கள் மற்றும் தீவிரவாத செயல்கள் போன்றவைகளால் கவலை கொண்டுள்ளனர்.

அதிக மக்கள் தொகை கொண்ட நியூயார்க், லண்டன், மாஸ்கோ மற்றும் மும்பை ஆகிய நகரங்கள் தீவிரவாத நிகழ்வுகளுக்கு உள்ளாகக்கூடிய வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. இவ்வாறு 


0 comments:

Post a Comment